
ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்களுக்கு போட்டியாக கம்மி விலையில் திட்டங்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது பிஎஸ்என்எல். குறிப்பாக மற்ற நிறுவனங்களை விட ஒரு சில திட்டங்களில் அதிக சலுகைகளை வழங்குகிறது பிஎஸ்என்எல் நிறுவனம்.
சமீபத்தில்
பிஎஸ்என்எல் நிறுவனம் சில புதிய திட்டங்களை அறிமுகம் செய்தது. அதன்பின்பு
சில திட்டங்களில் கூடுதல்நன்மைகளையும் வழங்கியுள்ளது. கண்டிப்பாக இந்த
சலுகைகள் பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில்
இருக்கும். ஆனால் இந்நிறுவனம் விரைவில் 4ஜி சேவையை கொண்டுவந்தால் இன்னும்
அருமையாக இருக்கும். மற்ற தனியார் நிறுவனங்கள் 5ஜி சோதனையை துவங்கிவிட்டன.
இப்போது பிஎஸ்என்எல் நிறுவனத்தின் அந்த தரமான திட்டங்களைப் பற்றி
சற்று விரிவாகப் பார்ப்போம்.
பிஎஸ்என்எலல் ரூ.447 ப்ரீபெய்ட் திட்டம்
பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ.447 ப்ரீபெய்ட் திட்டத்தை சமீபத்தில் அறிமுகம் செய்தது. இந்த திட்டம் பயனர்களுக்கு 100 ஜிபி டேட்டாவை எந்த வரம்பும் இல்லாமல் வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தில் தினசரி 100 எஸ்எம்எஸ் மற்றும் பிஎஸ்என்எல் ட்யூன்ஸ் மற்றும் ஈரோஸ் நவ் பயன்பாட்டிற்கான 60 நாட்கள் சந்தா கிடைக்கிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 60 நாட்கள் ஆகும்.
பிஎஸ்என்எல் ரூ.75 திட்டம்
பிஎஸ்என்எல்
நிறுவனத்தின் ரூ.75 திட்டம் ஆனது பயனர்களுக்கு மொத்தமாக 2ஜிபி டேட்டா
நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தில் எந்தவொரு நெட்வொர்க்குக்கும்
100 நிமிடங்கள் வரை பேசலாம். பின்பு வரம்பை எட்டிய பிறகு நிமிடத்திற்கு 30
பைசா கட்டணம்
வசூலிக்கப்படும். குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 60 நாட்கள் ஆகும்.
பிஎஸ்என்எல் ரூ.94 திட்டம்
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.94 திட்டம் ஆனது மொத்தமாக 3ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தில் எந்தவொரு நெட்வொர்க்குக்கும் 100 நிமிடங்கள் வரை பேசலாம். பின்பு வரம்பை எட்டிய பிறகு நிமிடத்திற்கு 30 பைசா கட்டணம் வசூலிக்கப்படும். குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 90 நாட்கள் ஆகும்.
பிஎஸ்என்எல் ரூ.699 ப்ரீபெய்ட் திட்டம்
பிஎஸ்என்எல் ரூ.699 ப்ரீபெய்ட் திட்டம் சமீபத்தில் திருத்தப்பட்டது. அதன்படி இந்த ரூ.699 ப்ரீபெய்ட் திட்டம் முன்பு 160 நாட்கள் நாட்கள் வேலிடிட்டி-ஐ வழங்கியது. தற்போது இந்த திட்டம் திருத்தப்பட்டு 180 நாட்கள் வேலிடிட்டி-ஐ வழங்குகிறது. இந்த திட்டம் தினசரி 500 எம்பி டேட்டா வழங்கும். பின்பு இந்தியாவுக்குள் எந்தவொரு நெட்வொர்க்குக்கும் வரம்பற்ற இலவச அழைப்புகளைவழங்குகிறது இந்த திட்டம். இதுதவிர தினசரி 100 எஸ்எம்எஸ் நன்மைகளை வழங்குகிறது ரூ.699 ப்ரீபெய்ட் திட்டம். மேலும் இந்த திட்டம் முதல் 60 நாட்களுக்கு இலவச கஸ்டமைஸ்டு ரிங்பேக் டோன் (பிஆர்பிடி) நன்மையுடனும் அனுப்பப்படும் என அந்நிறவனம் சார்பில் கூறப்பட்டுள்ளது. அதேபோல் சமீபத்தில் பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ.398 திட்டத்தில் கூடுதல் சலுகைகள் வழங்கியுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக