
அரசு பல்வேறு துறைகளிலும் டிஜிட்டல் சேவையை உட்புகுத்தி வருகின்றது. இதனால் பலரும் அலையாமல் தங்களது வேலைகளை இருந்த இடத்தில் இருந்தே வெற்றிகரமாக செய்து வருகின்றனர்.
குறிப்பாக ஆதார் அப்டேஷன், பான், வாக்காளர் அடையாள அட்டை, வருங்கால வைப்பு நிதி சேவைகள், அஞ்சலகம் என பலவற்றிலும் டிஜிட்டல் தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆரம்பித்துள்ளது. இதன் காரணமாக பல மணி நேரங்கள் சென்று அலைய வேண்டிய வேலைகள் கூட, சில நிமிடங்களில் ஆன்லைனில் முடித்து விடும் நிலை உருவாகியுள்ளது.
எனினும் இப்படி ஆன்லைனில் செய்யும் போது சில விஷயங்களை நாம் தவற விட்டு விடுகிறோம். அந்த வகையில் நாம் இன்று பார்க்கவிருப்பது ஊழியர்கள் அவர்கள் பிஎஃப் கணக்கில் செய்யும் சில தவறுகளை எப்படி தவிர்ப்பது என்பதனைத் தான் இதில் பார்க்க விருக்கின்றோம்.
பிஎஃப் பணம்
மாத சம்பளம் வாங்கும் ஊழியர்களுக்கு இபிஎஃப் கணக்கு என்பது கட்டாயம் இருக்கும். சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும் EPF பணத்தினை ஆன்லைனில் எளிதாக விண்ணபித்து பெற முடியும். இதனை இடையிலும் சில காரணங்களுக்காக பெற முடியும். இது குறிப்பாக திருமணம், கல்வி, வீடு அல்லது பிளாட் வாங்க, வீடு புதுப்பிக்க, மருத்துவ செலவு, ஹோம் லோன் கடன், ஏதேனும் பேரழிவு காலத்தில் கடன், ஓய்வுக்கு முன்பாக பணம் பெறுதல் என பல காரணங்களுக்காக, பணம் எடுக்கும் வசதி உண்டு. இதற்காக நீங்கள் பார்ம் 31-ஐ நிரப்ப வேண்டியிருக்கும். இதே ஆன்லைன் மூலம் என்றால் உங்களது UAN நம்பரை பயன்படுத்தி பணம் எடுக்கலாம்.
நிதி நெருக்கடி
அதோடு கொரோனா காரணமாக பல லட்சம் பேர் தங்களது வேலையினை இழந்து தவித்து வந்த நிலையில், பலரும் நிதி நெருக்கடியினை சந்தித்து வந்தனர். இந்த நிலையில் அரசு தங்களது பிஎஃப் கணக்கில் இருந்து 75% அல்லது மூன்று மாத அடிப்படை ஊதியம் தொகையினை எடுக்க அனுமதித்தது.
பலரும் எதிர்கொண்ட பிரச்சனை
இதனைத் தொடர்ந்து கொரோனா காலக்கட்டத்தில் பலரும் தங்களது பணத்தை எடுத்தனர். ஆனால் அந்த சமயத்தில் மேலும் பலர் தங்களது பிஎஃப் கணக்கில் இருந்த சில பிரச்சனையால், பணம் எடுக்க முடியாமல் தவித்தனர். ஆக இது போன்ற பிரச்சனைகளை, எதிர்கொள்ளாமல் இருப்பது எப்படி என்பதைத் தான் இதில் பார்க்கவிருக்கிறோம்.
UAN + வங்கி கணக்குடன் இணைப்பு
உங்களது UAN எண்ணுடன் வங்கிக் கணக்கு எண் இணைக்கப்பட்டிருக்கிறதா? என்பதை கவனிக்க வேண்டும். அப்படி உங்களது கணக்கு இணைக்கப்படாவிட்டால், நீங்கள் அவசர காலங்களில் சிரமங்களை எதிர்கொள்ள கூடும். குறிப்பாக பிஎஃப் கணக்கில் வழங்கப்பட்ட IFSC கோடு என்பது மிகத் தெளிவாக இருக்க வேண்டும்.
KYC சரியாக கொடுத்திருக்க வேண்டும்
சிலர் தங்களது கே.ஓ.சியினை சரியாக பூர்த்தி செய்து இருக்க மாட்டார்கள். ஆகவே அவசியமான காலகட்டத்தில் இது உங்களுக்கு கை கொடுக்காமல் போகலாம். ஆக எப்போதும் இந்த KYC விவரங்கள் சரியாக இருக்கிறதா? என்று பார்த்துக் கொள்ள வேண்டும். இது பின்னர் ஆன்லைன் சேவைகளை பெற நினைக்கும் போது பிரச்சனையாக மாறக்கூடும்.
பிறந்த தேதியினை சரியாக கொடுக்க வேண்டும்
பலரும் இன்று எதிர்கொள்ளும் பிரச்சனைகளில் இதுவும் ஒன்று. ஏனெனில் ஆவணங்களில் ஒரு பிறந்த தேதி இருக்கும். ஆன்லைனில் பயன்படுத்தும் போது தேதியினை மாற்றிக் கொடுத்து விட்டு, பின்னர் சிக்கலை சந்திப்பார்கள். ஆக இதனையும் ஒரு முறைக்கு இருமுறை சரியாக இருக்கிறதா என்பதை பார்த்துக் கொள்ளுங்கள்.
ஆதார்- UAN இணைப்பு
உங்களின் ஆதார்- UAN இணைக்கப்பட வேண்டும். அப்படி இணைக்கப்படவில்லை எனில், நீங்கள் பிஎஃப் தொகையை திரும்ப பெற விண்ணப்பிக்கும்போது நிராகரிக்கப்படலாம். தற்போது ஆதார் - UAN எண்ணினை 4 வழிகளில் இணைக்கலாம். ஆன்லைன் மூலமாகவும் இணைக்கும் வசதி உண்டு.
வங்கி கணக்கு விவரங்களை சரியாக கொடுங்கள்
உங்களது இபிஎஃப் கணக்கில் வங்கிக் கணக்கு விவரங்களை சரியாகக் கொடுங்கள். ஆக உங்களது விவரங்கள் கொடுக்கப்படும்போது ஒரு முறைக்கு இரு முறை சரியாக உள்ளதா என பார்த்துக் கொடுக்க வேண்டும். ஏனெனில் சிறு தவறும் கூட, கடைசி நேரத்தில் நீங்கள் பணம் எடுப்பதில் தாமதத்தை ஏற்படுத்தலாம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
அறிந்து கொள்வோம்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக