Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

வியாழன், 15 ஜூலை, 2021

ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வெகு விரைவில் அறிமுகம்... எதிர்பார்ப்பை எகிற வைக்கும் தகவல் வெளியானது!

ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வெகு விரைவில் அறிமுகம்... எதிர்பார்ப்பை எகிற வைக்கும் தகவல் வெளியானது!

ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பற்றிய முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த விரிவான விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வெகு விரைவில் அறிமுகம்... எதிர்பார்ப்பை எகிற வைக்கும் தகவல் வெளியானது!

ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் சீரிஸ் எஸ், எஸ்1 மற்றும் எஸ்1 ப்ரோ ஆகிய பெயர்களை இந்தியாவில் பதிவு செய்துள்ளது. வரும் வாரங்கள் அல்லது மாதங்களில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ள ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு சூட்டப்படவுள்ள பெயர்களாக இவை இருக்கலாம் என கருதப்படுகிறது.

ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வெகு விரைவில் அறிமுகம்... எதிர்பார்ப்பை எகிற வைக்கும் தகவல் வெளியானது!

இந்தியாவில் பதிவு செய்யப்பட்டுள்ள ட்ரேட்மார்க் ஆவணங்கள் மூலம் இந்த பெயர்கள் தற்போது வெளியே கசிந்துள்ளன. இந்த ஆவணங்கள் மூலமாக ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் தனது எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு சீரிஸ் எஸ் என பெயரிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் எஸ்1 மற்றும் எஸ்1 ப்ரோ என இரண்டு வேரியண்ட்களில் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை செய்யப்படலாம்.

ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வெகு விரைவில் அறிமுகம்... எதிர்பார்ப்பை எகிற வைக்கும் தகவல் வெளியானது!

இதில், எஸ்1 விலை குறைவான வேரியண்ட்டாக இருக்கலாம் என கூறப்படுகிறது. அதற்கேற்ப இந்த மாடலின் ரேஞ்ச் குறைவாக இருக்கலாம். அதே நேரத்தில் எஸ்1 ப்ரோ விலை உயர்ந்த டாப் வேரியண்ட்டாக இருக்கலாம். இதற்கேற்ப இந்த மாடலின் ரேஞ்ச் அதிகமாக இருக்கலாம் என கருதப்படுகிறது. எஸ்1 ப்ரோ வேரியண்ட்டின் ரேஞ்ச் 150 கிலோ மீட்டராக இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.


ஆனால் இந்த இரு வேரியண்ட்களின் டிசைனும் ஒரே மாதிரியாகதான் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. டிசைனை பொறுத்தவரை ட்யூயல் எல்இடி ஹெட்லேம்ப்கள், எல்இடி டெயில்லேம்ப்கள், அலாய் வீல்கள் ஆகியவை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் இருக்கைக்கு கீழே நல்ல இடவசதி வழங்கப்படும் என கூறப்படுகிறது.

2 முழு அளவு ஹெல்மெட்களை வைக்கும் அளவிற்கு இடவசதி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் வசதிகளை பொறுத்தவரை, விலை குறைவான எஸ்1 வேரியண்ட்டில் குறைவான வசதிகளே இடம்பெறும் என கூறப்படுகிறது. அதே நேரத்தில் விலை உயர்ந்த எஸ்1 ப்ரோ வேரியண்ட் வசதிகள் நிரம்பியதாக இருக்கும்.

இந்தியாவில் தற்போது பெட்ரோல் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. எனவே எலெக்ட்ரிக் டூவீலர்களுக்கு மாற பலரும் திட்டமிட்டுள்ளனர். இந்த நேரத்தில் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு வரவுள்ளதால், வாடிக்கையாளர்களின் வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் ஏற்கனவே ஏராளமான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் கிடைத்து வருகின்றன.

இதில், டிவிஎஸ் ஐக்யூப், பஜாஜ் சேத்தக், ஏத்தர் 450எக்ஸ் ஆகியவை முக்கியமானவை. இவை அனைத்துமே இந்திய சந்தையில் விலை உயர்ந்த பிரீமியம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களாக நிலைநிறுத்தப்பட்டுள்ளன. இதுதவிர இந்திய சந்தையில் விலை குறைந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களும் ஏராளமாக விற்பனைக்கு கிடைக்கின்றன.

இந்த சூழலில் விற்பனைக்கு வரவுள்ள ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை எவ்வளவாக இருக்கும்? என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும்போது, ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். இதற்கு இன்னும் சிறிது காலம் நாம் பொறுத்திருந்தாலே போதும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக