Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

திங்கள், 12 ஜூலை, 2021

இது இல்ல., ஆனா அதுக்கு வாய்ப்பு இருக்கு: மைக்ரோமேக்ஸ் புது மாடல் ஸ்மார்ட்போன்!

மைக்ரோமேக்ஸ் இன் 2சி ஸ்மார்ட்போன் ஆகஸ்ட் மாதம் தொடங்கப்படலாம் எனவும் இது யுனிசோக் டி-610 சிப்செட் மூலம் இயக்கப்படும் என கூறப்படுகிறது. மைக்ரோமேக்ஸ் இன் 2 சி சாதனம் ஆகஸ்ட் மாதம் வெளியிடப்படவில்லை என்றாலும் மைக்ரோமேக்ஸ் 2பி இன் ஜூலை மாதம் தொடங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மைக்ரோமேக்ஸ் இன் 2சி வெளியீடு ஜூலை 15 ஆம் தேதி இருக்கலாம் என தகவல்கள் வெளியாகின. ஆனால் இந்த தகவல்கள் உண்மை இல்லை என கூறப்பட்டுள்ளது. இது குறித்து தி மொபைல்ஸ் இந்தியனில் வெளியான தகவலின்படி மைக்ரோமேக்ஸ் இன் 2சி ஜூலை மாதத்தில் தொடங்கப்போவதில்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. இது தற்போதுவரை திட்டமிடல் நிலையிலேயே இருப்பதாக தெரிவிக்கிறது. மாற்றாக மைக்ரோமேக்ஸ் இன் 2பி மாத இறுதிக்குள் தொடங்கப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.Advertisement

கீக்பெஞ்ச் தரப்படுத்தல் தளத்தில் மைக்ரோமேக்ஸ் இன் 2சி சாதனத்தின் சமீபத்திய பட்டியலை வெளியிட்டது. முன்னதாக மைக்ரோமேக்ஸ் இன் 2பி தரவுத்தளத்தில் காணப்பட்டது. மைக்ரோமேக்ஸ் 2பி விவரக்குறிப்புகள் குறித்து கீக்பெஞ்ச் பட்டியலின்படி, இது ஆக்டோகோர் 1.8 ஜிகாஹெர்ட்ஸ் யுனி சோக் டி610 சிப்செட் இல் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிப்செட் சிக்ஸ் 1.80 ஜிகாஹெர்ட் ஆர்ம் கார்டெக்ஸ் ஏ 55 செயலாக்க கோர்களும், இரண்டு 1.80 ஜிகாஹெர்ட்ஸ் ஆர்ம் கார்டெக்ஸ் ஏ 75 மற்றும் மாலி ஜி 52 எம்பி 2 ஜிபீ ஒற்றை கோர் மூலம் இயக்கப்படும் என தெரிகிறது. மைக்ரோமேக்ஸ் இன் 2பி முறையே 350 மற்றும் 1204 புள்ளிகளை பெற்றுள்ளது.

தற்போதைக்கு இது 4 ஜிபி ரேம் வசதியுடன் வரும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மைக்ரோமேக்ஸ் பிற வேரியண்ட்களிலும் அறிமுகம் செய்யப்படலாம். இது ஆண்ட்ராய்டு 11 மூலம் இயங்கும் என கூறப்படுகிறது.

கடந்த ஆண்டில் வெளியான மைக்ரோமேக்ஸ் இன் 1 பி ஆக்டோ கோர் மீடியாடெக் ஜி35 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இதையடுத்து இன் 2பி மேம்படுத்தப்பட்ட யுனிசோக் மூலம் இயக்கப்படலாம் என தெரிகிறது. இன் 1பி சாதனத்தின் மேம்பாட்டு அம்சமாக இது இருக்கும் எனவே இன் 1பி அம்சம் குறித்து பார்க்கலாம்.

மைக்ரோமேக்ஸ் இன் 1பி மீடியாடெக் ஹீலியோ ஜி35 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இது 6.52 இன்ச் எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. இது 2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள்சேமிப்பு, 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது. இதில் பாதுகாப்பு அம்சத்திற்கு கைரேகை சென்சார் உள்ளது. இதில் 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 10 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உள்ளது.

மைக்ரோமேக்ஸ் 2ஜி விவரக்குறிப்புகள் குறித்து பார்க்கையில், இது ஆகஸ்ட் மாதம் தொடங்கப்படலாம். இந்த ஸ்மார்ட்போன் யுனிசோக் டி 610 சிப்செட் மூலம் இயக்கப்படும். இந்த ஸ்மார்ட்போன் 4 ஜிபி ரேம் மற்றும் ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ் மூலம் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் இந்த சாதனங்கள் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக