-------------------------------------
இது சிரிப்பதற்கான நேரம்....!!
-------------------------------------
வந்தவர் : சார் இந்த கம்பெனில ஏதாச்சும் செக்யூரிட்டி வேல இருந்தா எனக்குக் குடுங்க சார்.
மேனேஜர் : செக்யூரிட்டி வேலை கேக்கறியே... உனக்கு என்ன தகுதி இருக்கு?
வந்தவர் : சின்ன சத்தம் கேட்டா கூட முழிச்சுக்குவேன் சார்!
மேனேஜர் : 😖😖
-------------------------------------
அமலா : ரயில் வரும்போது ஏன் கேட்டை மூடிடறாங்க தெரியுமா?
விமலா : தெரியாதே!
அமலா : அட... இதுகூட தெரியாம இருக்கியே மக்கு.... ரயில் ஊருக்குள்ள போயிடாம இருக்கத்தான்.
விமலா : 😡😡
-------------------------------------
இன்றைய கடி...!!
-------------------------------------
1. சமையல் எண்ணெய் கீழே கொட்டிவிட்டால் என்ன ஆகும்?
.
.
.
.
.
மண்எண்ணெய் ஆகிவிடும்.
2. மழை பொழியும் நாடு எது?
.
.
.
.
.
பஹ்ரெயின்
-------------------------------------
குறளும்... பொருளும்...!!
-------------------------------------
அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார்
பெரும்பயன் இல்லாத சொல்.
பொருள் :
அருமையான பயன்களை ஆராயவல்ல அறிவை உடைய அறிஞர், மிக்க பயன் இல்லாத சொற்களை ஒருபோதும் சொல்லமாட்டார்.
ரிலாக்ஸ் ப்ளீஸ்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக