Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 22 ஜூலை, 2021

ஆப்பிள் அறிமுகம் செய்த புதிய 'லாஸ்லெஸ் ஆடியோ' அம்சம்.. ஆண்ட்ராய்டு பயனர்களுக்கும் இது உண்டா?


லாஸ்லெஸ் ஆடியோ என்றால் என்ன?

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆப்பிள் ஸ்பேஷியல் ஆடியோ மற்றும் லாஸ்லெஸ் மியூசிக் அம்சங்கள் இப்போது இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்த புதிய மியூசிக் அம்சம் என்ன-என்ன செய்யும்? இதைப் பயனர்கள் எப்படிப் பயன்படுத்துவது? ஆண்ட்ராய்டு பயனர்களும் கூட இந்த அம்சத்தைப் பயன்படுத்த முடியுமா? போன்ற பல கேள்விகளுக்கான பதில்கள் இந்த பதிவில் வழங்கப்பட்டுள்ளது.

லாஸ்லெஸ் ஆடியோ என்றால் என்ன?

முதலில் இந்த புதிய அம்சம் பற்றித் தெரிந்துகொள்வோம், ஒரு குறிப்பிட்ட பாடல் இயற்றப்பட்ட போது, அதன் அசல் தரவை வைத்திருக்க நிர்வகிக்கும் ஆடியோ கோப்புகளைத் தான் லாஸ்லெஸ் மியூசிக் கோப்புகள் என்று அழைக்கப்படுகின்றன. லாஸ் இல்லாத இசை கோப்புகள் இவை என்று சுருக்கமாகச் சொல்லலாம். நிறையப் பாடல்கள் வெளியிடப்படும் போது 'அசல் தன்மையை' இழக்கின்றன.

அசல் ஆடியோ பிட்டை லாஸ் இல்லாமல் வழங்குகிறதா?

இந்த இழப்பற்ற ஆடியோ கோப்புகள் பாதுகாக்க ஆப்பிள் நிறுவனம் ALAC என்ற அம்சத்தை பயன்படுத்தியுள்ளது. இது ஆப்பிள் லாஸ்லெஸ் ஆடியோ கோடெக் என்ற அம்சத்தைப் பயன்படுத்துகிறது. இது பாடலின் அசல் ஆடியோ பிட்டையும் பாதுகாக்கிறது. இதன் பொருள் ரசிகர்கள் தங்களுக்குப் பிடித்த பாடல்களை கலைஞர்கள்ஸ்டுடியோவில் உருவாக்கிய விதத்திலேயே கேட்க முடியும்.

லாஸ்லெஸ் அம்சம் எந்த சாதனத்தில் எல்லாம் இணக்கமாகும்? அடிப்படைத் தேவைகள் என்ன?

ஐபோன், ஐபாட் ஆகியவற்றில் லாஸ்லெஸ் அம்சத்தை ஆப்பிள் பயனர்கள் தாராளமாகக் கேட்கலாம். இருப்பினும், இந்த அனுபவத்தை முழுமையாக அனுபவிக்க நீங்கள் வயர்டு ஹெட்ஃபோன்ஸ் சாதனம் அல்லது ஸ்பீக்கர்களை பயன்படுத்த வேண்டியது இருக்கும். போனிலோ அல்லது ஐபாட் இல் உள்ள உள்ளமைக்கப்பட்டட்
ஸ்பீக்கர்கள் மூலம் இதைக் கேட்க முடியும் என்றாலும் கூட, அசல் இசை அனுபவத்தைத் துல்லியமாகக் கேட்க முடியாது. துரதிர்ஷ்டவசமாக, லாஸ்லெஸை ஏர்பாட்ஸ் சாதனம் ஆதரிக்கவில்லை.

ஆப்பிள் லாஸ்லெஸ் அம்சத்திற்காக நீங்கள் கூடுதலாகக் கட்டணம் செலுத்த வேண்டுமா?

ஆப்பிள் மியூசிக் அனுபவத்துடன் இந்த புதிய லாஸ்லெஸ் அம்சத்தை நீங்கள் பயன்படுத்த எந்தவித தனி கட்டணத்தையும் செலுத்த வேண்டியது இல்லை என்று ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனால், இது வழக்கத்தை விட சற்று அதிகமாக உங்களின் டேட்டாவை எடுத்துக்கொள்ளும் என்பதை மறக்காதீர்கள். இவை அனைத்தும் அசல் கோப்புகள் என்பதனாலும், அளவில் பெரியவை என்பதனாலும் உங்கள் போனின் ஸ்டோரேஜ் இடத்தையும் கூடுதலாக எடுத்துக்கொள்ளும்.

இந்த புது லாஸ்லெஸ் அம்சம் ஆண்ட்ராய்டு சாதனங்களில் வேலை செய்யுமா?

ஆப்பிள் மியூசிக் இல் கிடைக்கும் இந்த புதிய லாஸ்லெஸ் அம்சத்தை ஆண்ட்ராய்டு பயனர்களும் பயன்படுத்தலாம் என்பதே உண்மை. ஆனால், ஆண்ட்ராய்டு சாதனங்களுக்கு இணக்கமான வெர்ஷனை இன்னும் நிறுவனம் வெளியிடவில்லை என்பதனால், ஆண்ட்ராய்டு பயனர்கள் இன்னும் கொஞ்ச நாட்கள் காத்திருக்கவேண்டும்.

லாஸ்லெஸ் ஆடியோவை எப்படி பதிவிறக்கம் செய்வது?

லாஸ்லெஸ் ஆடியோ அம்சத்தைப் பயன்படுத்தப் பயனர்கள் முதலில் அப்டேட் செய்யப்பட்ட புதிய ஆப்பிள் மியூசிக் ஆப்ஸை கொண்டிருக்க வேண்டும். அப்டேட் செய்யாதவர்கள் உடனே அப்டேட் செய்து, பின்னர் லாஸ்லெஸ் அம்சத்தைப் பயன்படுத்தலாம். லாஸ்லெஸ் அனுபவத்தைப் பயன்படுத்த Settings > Music> Audio quality என்ற விருப்பத்தை கிளிக் செய்து, தேவைப்படும் ரெசொலூஷன் தரத்தைத் தேர்வு செய்யலாம். இதில் cellular அல்லது WIFI அல்லது Download என்ற விருப்பத்தைப் பயனர் பயன்படுத்த முடியும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக