Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 22 ஜூலை, 2021

TickTack பெயரில் டிக்டாக் செயலி மீண்டும் அறிமுகமாக வாய்ப்பு.!

இந்தியாவில் டிக்டாக் செயலி ஆனது வாட்ஸ்அப் உள்ளிட்ட பல்வேறு செயலிகளை விட பிரபலமாக இருந்தது. ஆனால் இந்தியா சீனாஎல்லை பகுதியான லடாக்கில் இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் ஏற்பட்டது. அந்த சமயம் இந்தியாவில் டிக்டாக், பப்ஜி, யூசிபிரவுசர் உள்ளிட்ட பல்வேறு சீன செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் டிக்டாக் செயலி மீண்டும் இந்தியாவில் வெளியாகும் எனத் தகவல் வெளிவந்துள்ளது. அதாவது டிக்டாக் செயலியின் தாய்நிறுவனம் பைட்டேன்ஸ் இந்திய காப்புரிமை அலுவலகத்தில் TickTack எனும் பெயருக்கு காப்புரிமை கோரி விண்ணப்பித்து இருக்கிறதுஎன்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக டிக்டாக செயலி TickTack பெயரில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. இதற்குமுன்பு பைட்டேன்ஸ் நிறுவனம் டிக்டாக் செயலியை மீண்டும் இந்தியாவில் வெளியிடும் முயற்சியில் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது.

அதன்பின்பு இந்தியாவில் அமலுக்கு வந்த புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளை ஏற்று செயல்பட பைட்டேன்ஸ் ஒப்புக் கொள்வதாக அறிவித்தது. எனவே கூடிய விரைவில் TickTack செயலி வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அண்மையில் பப்ஜி மொபைல் கேம் பேட்டில்கிரவுண்ட் மொபைல் இந்தியா எனும் பெயரில் வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் டிக்டாக்கின் இடத்தை நிரப்ப பல முன்னணி நிறுவனங்களும் செயலிகளை தொடர்ந்து வெளியிட்டு வருகின்றனர். இதில் பேஸ்புக் டிக்டாக் இடத்தை பிடித்துவிட வேண்டும் தீவிரமாக முயற்சி செய்து வருகிறது.

நம் அனைவருக்கும் தெரிந்த இன்ஸ்டாவில் இன்ஸ்டா ரீல்ஸ் அம்சம் அறிமுகம் செய்யப்பட்டது. டிக்டாக் தடைக்கு பிறகு இந்தியாவில் இன்ஸ்டா ரீல்ஸ் பெரும் வரவேற்பை பெறும் என அந்த நிறுவனம் எதிர்பார்த்தது. ஆடியோவுடன் கூடிய 15 வினாடி வீடியோ இன்ஸ்டா ரீல்ஸில் உருவாக்க முடியும். டிக்டாக்குக்கு பதிலாக பலர் இன்ஸ்டா ரீல்ஸை ஏற்றுக் கொண்டனர் என்றாலும் முழுமையாக டிக்டாக்இடத்தை பூர்த்தி செய்யவில்லை என்றே கூறப்படுகிறது.

எனவே கூடிய விரைவில் டிக்டாக் செயலி புதிய பெயரில் அறிமுகம் செய்யப்படுவதால் இன்ஸ்டா ரீல்ஸ் உள்ளிட்ட பல்வேறு செயலிகளுக்கு போட்டியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக