Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 22 ஜூலை, 2021

குடும்ப தலைவிக்கு ரூ.1000: ரேஷன் கார்ட்டில் குடும்ப தலைவி புகைப்படம் வேண்டுமா?- உண்மை என்ன?

ரேஷன் அட்டையில் குடும்ப தலைவியின் புகைப்படம்

திமுக-வின் தேர்தல் அறிக்கையில் குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி தேர்தலில் வெற்றிப்பெற்று திமுக ஆட்சி அமைத்தது. பெண்களுக்கு மாநகர பேருந்துகளில் பயணிக்க இலவச பயண திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ள நிலையில் குடும்ப தலைவிகளுக்கான ஊக்கத் தொகை விரைவில் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 ஊக்கத்தொகை

தமிழக அரசு சார்பில் குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 ஊக்கத்தொகை வழங்கப்படுவதற்கான முறை குறித்து சமூகவலைதளங்களில் பல்வேறு தகவல்கள் பரவி வருகின்றன. குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 ஊக்கத் தொகை பெறுவதற்கு ரேஷன் அட்டையில் குடும்பத் தலைவி புகைப்படம் இருக்க வேண்டும் எனவும் தொடர்ந்து தகவல்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.

ரேஷன் அட்டையில் குடும்ப தலைவியின் புகைப்படம்

ரேஷன் அட்டையில் குடும்ப தலைவியின் புகைப்படம் இருந்தால் மட்டுமே ரூ.1000 வழங்கப்படும் என நியாயவிலைக் கடை ஊழியர்கள் கூறியதாக தகவல்கள் வெளியாகின. இதையடுத்து குடும்ப அட்டையில் திருத்தம் செய்ய வட்டாச்சியர் அலுவலகங்களில் குவிந்து வருகின்றன.

இரண்டு வகை ரேஷன் கார்ட்கள்

அதேபோல் PHH மற்றும் PHH-AAY ஆகிய இரண்டு வகை ரேஷன் கார்ட்கள் மற்றும் குடும்ப தலைவர் என்ற இடத்தில் பெண்ணின் புகைப்படம் இருந்தால் மட்டுமே உரிமை தொகை வழங்கப்படும் என சமூகவலைதளங்களில் தொடர்ந்து வதந்திகள் பரவி வருகின்றன. இதன்காரணமாக லட்சக்கணக்கானோர் ரேஷன் கார்ட்களை மாற்றம் செய்ய விண்ணப்பித்து வருகின்றனர்.

மாற்றம் செய்வதற்கான விண்ணப்பங்கள்

மாற்றம் செய்வதற்கான விண்ணப்பங்கள் வட்டார வழங்கல் அலுவலகம் மற்றும் இ-சேவை மையங்களில் குவிந்து வருகின்றன. மேலும் இதையே சாதகமாக வைத்து பல இடைத்தரகர்கள் ஆயிரக்கணக்கில் பணம் சம்பாதித்து ஏமாற்றுவதாக கூறப்படுகிறது. மேலும் ரேஷன் கார்ட்களில் குடும்பத் தலைவி புகைப்படங்களை மாற்றுவதால் பிற ஆவணங்கள் பெறுவதில் சிக்கல் ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

முறையான அறிவிப்பு வெளியாகவில்லை

மேலும் முறையான அறிவிப்பு வெளிவராத நிலையில் தொடர்ந்து வெளியாகும் வதந்திகளை நம்ப வேண்டாம் என அதிகாரிகள் தரப்பில் அறிவிக்கப்பட்டு வருகிறது. அதேபோல் இதுகுறித்து அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது. அறிவிப்பு வரும்வரை பொதுமக்கள் காத்திருந்து பிறகு அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொண்டால் சரியாக இருக்கும் என கூறப்படுகிறது.

ரேஷன் கார்ட் பதிவிறக்கம்

ரேஷன் கார்ட் தேவை என்பது பிரதானமாக இருக்கிறது. ரேஷன் கார்டு தொலைந்துவிட்டாலோ அல்லது குடும்ப உறுப்பினர்கள் பெயரை நீக்குதல் சேர்த்தல் ஆகிய பணிகளை ஆன்லைன் மூலமாகவே மேற்கொள்ளலாம். ரேஷன் கார்டு தேவை மற்றும் பயன்பாடு குறித்து அனைவரும் அறிந்ததே. இதன் முழு விவரங்களை பார்க்கலாம்.

பதிவிறக்கம் செய்யும் வழிமுறைகள்

  • முதலில் ரேஷன் கார்ட் தொடர்பான பணிகளை மேற்கொள்ள Tamil nadu public distribution Service என்ற TNPDS வலைதளத்திற்கு செல்ல வேண்டும். இணைப்புக்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும். TNPDS (https://www.tnpds.gov.in/)
  • இதில் சுயவிவர பதிவை தேர்வு செய்தவுடன் தங்களது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஓடிபி எண் அனுப்பப்படும். இந்த ஓடிபி எண்ணை சரியாக பதிவு செய்தவுடன் அடுத்த பக்கத்திற்கு முன்னோக்கி அழைத்து செல்லப்படுவிர்கள்.
  • சுயவிவர பக்கத்துக்கு சென்றவுடன் TNPDS ஸ்மார்ட் கார்டு பதிவிறக்கம் விருப்பம் காண்பிக்கப்படும். இதில் நீங்கள் விரும்பிய மொழையை தேர்ந்தெடுத்து அச்சிடு என்ற விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டும். இதே பிடிஎஃப் ஃபைலை சேமித்து வைத்துக் கொள்ளும் விருப்பமும் காண்பிக்கப்படும்.
  • அவ்வளவுதான் நீங்கள் பதிவிறக்கம் செய்யப்பட்ட ஆவணத்தை எடுத்துக் கொண்டு தங்கள் பகுதிக்கு உட்பட்ட வட்ட வழங்கல் அலுவலகத்துக்கு சென்று புதுப்பிக்கப்பட்ட ரேஷன் கார்ட்டை பெறலாம். மெசேஜ் மூலமாக உதவி மற்றும் தகவல்களை அணுகலாம். இதற்கு 1967 அல்லது 1800 425 5901 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக