
பிபிசிஎல் தனியார்மயமாக்கல்: சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்னர், எல்பிஜி தொடர்பாக அரசாங்கம் ஒரு உத்தரவை வழங்கியிருந்தது. இதன்படி, நாட்டில் உற்பத்தி செய்யப்படும் எல்பிஜி எனப்படும் சமையல் எரிவாயுவை அரசுக்கு சொந்தமான எண்ணெய் நிறுவனங்களுக்கு மட்டுமே மேற்கொள்ளலாம் என்பதே அந்த உத்தரவு. பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (BPCL) தனியார் மயமாக்கப்பட்ட பின் மானிய விலையில் எல்பிஜி விற்பனை செய்ய அனுமதிக்கும் திட்டத்திற்கு இந்த உத்தரவு தடையாக உள்ளது. எனவே பிபிசிஎல் தனியார்மயமாக்கப்பட்ட பின்னரும் சமையல் எரிவாயு சிலிண்டர் (LPG) மானிய விலையில் தொடர்ந்து சப்ளை செய்யுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தனியார்மயமாக்கலுக்குப் பிறகு ஓ.என்.ஜி.சி மற்றும் கெயில் போன்ற நிறுவனங்கள் தயாரிக்கும் எல்பிஜியை பிபிசிஎல் நிறுவனத்திற்கு வழங்க முடியுமா என்பதை அறிய அரசு இப்போது சட்ட கருத்து கோரப்பட்டுள்ளது என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
தற்போது, பிபிசிஎல் நிறுவனம் Bharat Petroleum Corporation Ltd (BPCL) 8.4 கோடி உள்நாட்டு எல்பிஜி வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது. இவர்களில் 21 மில்லியன் உஜ்வாலா வாடிக்கையாளர்கள் உள்ளனர். ஆனால், வாடிக்கையாளர்களின் தேவையை பூர்த்தி செய்யும் அளவிற்கு எல்பிஜி உற்பத்தி போதுமானதாக இல்லை.
பிபிசிஎல், மற்ற எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்களைப் போலவே, எல்பிஜியை அரசுக்கு சொந்தமான எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கார்ப்பரேஷன் (ஓஎன்ஜிசி) மற்றும் கெயில் (இந்தியா) லிமிடெட் மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் போன்ற தனியார் நிறுவனங்களிடமிருந்தும் வாங்குகிறது.
எல்பிஜி கட்டுப்பாட்டு ஆணை, 2000 என பிரபலமாக அறியப்படும் எல்பிஜி (வழங்கல் மற்றும் விநியோக ஒழுங்குமுறை) ஆணை, 2020, (Regulation of Supply and Distribution Order 2020) அரசாங்கத்திற்கு சொந்தமான எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்களுக்கு மட்டுமே பொருந்தும் . அதாவது இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் ((IOC), இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (HPCL) மற்றும் பிபிசிஎல் (BPCL)நிறுவனத்திற்கு மட்டுமே விற்பனை செய்யப்படும்
பிபிசிஎல் தனியார்மயமாக்கப்பட்டதும், இந்த உத்தரவு ஓஎன்ஜிசி (ONGC) மற்றும் கெயில் (GAIL)பிபிசிஎல் நிறுவனத்திற்கு எல்பிஜி விற்பனை செய்ய இயலாது. எனவே, இந்த விவகாரத்தில் அரசாங்கம் சட்டபூர்வமான கருத்தை நாடுகிறது

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக