Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

செவ்வாய், 13 ஜூலை, 2021

BSNL அதிரடி: வெறும் ரூ.18-ல் துவங்குகின்றன அட்டகாச திட்டங்கள்

 BSNL அதிரடி: வெறும் ரூ.18-ல் துவங்குகின்றன அட்டகாச திட்டங்கள்

ஜியோ, ஏர்டெல், வோடபோன்-ஐடியா மற்றும் பிஎஸ்என்எல் ஆகிய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பல மலிவான மற்றும் வரம்பற்ற தரவுத் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளன. ஆனால் பல பயனர்கள் தரவுத் திட்டங்களை விட வரம்பற்ற அழைப்புகளுக்கான திட்டங்களில் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். 

கொரோனா  காலத்தில், வீட்டிலிருந்து வேலை செய்யும் செயல்முறை அதிகமாக இருப்பதால், கிட்டத்தட்ட அனைவருக்கும் வீட்டில் பிராட்பேண்ட் வசதி இருக்கின்றது, ஆகையால், மக்கள் வரம்பற்ற அழைப்புக்கான திட்டத்திலேயே அதிக கவனம் செலுத்துகிறார்கள்.

பி.எஸ்.என்.எல் இன் மிகச்சிறந்த மலிவான திட்டங்களைப் பற்றி இந்த பதிவில் நாம் காணலாம். இவை குறைந்த கட்டணத்தில் வரம்பற்ற அழைப்பை வழங்குகின்றன. பிஎஸ்என்எல்லின்  இந்த மலிவான திட்டங்கள் ரூ .18 முதல் ரூ .31 வரை உள்ளன. இந்த திட்டங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

பிஎஸ்என்எல்லின் ரூ .18-க்கான மலிவுத் திட்டம் 

பிஎஸ்என்எல்லின் மலிவான வரம்பற்ற அழைப்பு திட்டம் 18 ரூபாய்க்கானதாகும். இது இரண்டு நாட்களுக்கு செல்லுபடியாகும். இதில் நீங்கள் இரண்டு நாட்களுக்கு வரம்பற்ற அழைப்பைப் பெறலாம். மேலும், தினமும் 1 ஜிபி தரவு, அதாவது மொத்தம் 2 ஜி பி தரவு வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும். 

இதற்கு அடுத்தபடியாக ரூ .29 திட்டம் வருகிறது. இந்த திட்டம் 5 நாட்களுக்கு செல்லுபடியாகும். மேலும் 1 ஜிபி டேட்டா மற்றும் 300 எஸ்எம்எஸ் ஆகிய வசதிகளும் இதில் கிடைக்கின்றன. 

பி.எஸ்.என்.எல்-லின் ரூ .99 திட்டம்

பிஎஸ்என்எல்லின் ரூ .99 திட்டத்தில் 22 நாட்களுக்கு வரம்பற்ற அழைப்பு  கிடைக்கிறது. இதனுடன் வாடிக்கையாளர்கள் 99 எஸ்.எம்.எஸ் அனுப்புவதற்கான நன்மையையும் பெறலாம். 22 நாட்களுக்கு வாடிக்கையளர் விரும்பும் அளவு கால் செய்யலாம். 

அதன் பிறகு ரூ .118 திட்டம் உள்ளது. இந்த திட்டம் 26 நாட்களுக்கு செல்லுபடியாகும். இதில் வாடிக்கையாளர்களுக்கு ஒரு நாளைக்கு 0.50 ஜிபி தரவு கிடைக்கிறது. மேலும் தினமும் 100 எஸ்எம்எஸ் வசதியும் இதில் உண்டு.

ரூ .147 மற்றும் ரூ 319 திட்டங்கள்

30 நாட்கள் செல்லுபடியாகும் திட்டத்தை நீங்கள் பெற விரும்பினால், பி.எஸ்.என்.எல்-லின் 147 ரூபாய் பிஎஸ்என்எல் குரல் வவுச்சரை பெறலாம். இதில் 30 நாட்களுக்கு வரம்பற்ற அழைப்போடு 10 ஜிபி தரவும் கிடைக்கிறது. 

அடுத்தபடியாக ரூ 319 திட்டம் உள்ளது. இந்த திட்டம் 75 நாட்களுக்கு செல்லுபடியாகும். மேலும் இதில் 99 எஸ்எம்எஸ் மற்றும் 10 ஜிபி தரவிற்கான நன்மையும் கிடைக்கிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக