Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

திங்கள், 19 ஜூலை, 2021

Google Chrome பயனரா? மொபைல், டெஸ்க்டாப், லேப்டாப் எதுவானாலும் உடனே அப்டேட் செய்யுங்க.. கூகிள் எச்சரிக்கை..

கூகிள் Chrome பிரௌசரில் இப்படி ஒரு ஆபத்தான பெரிய பிழையா?

கூகிள் குரோம் (Google Chrome) என்பது கிட்டத்தட்ட எல்லா தளங்களிலும், குறிப்பாக விண்டோஸ் மற்றும் ஆண்ட்ராய்டு தளங்களில் அதிகமாக பயன்படுத்தப்படும் ஒரு பிரௌசர் ஆகும். உண்மையில், இந்த பிரௌசரை நாம் பெரும்பாலான ஆண்ட்ராய்டு சாதனங்களில் காண முடியும். கூகிள் குரோம் பிரௌசர்களை அதிகளவில் பயன்படுத்தி வரும் மக்களுக்காக புதிய எச்சரிக்கை செய்தியைக் கூகிள் நிறுவனம் தற்பொழுது வெளியிட்டுள்ளது.

கூகிள் Chrome பிரௌசரில் இப்படி ஒரு ஆபத்தான பெரிய பிழையா?

கூகிள் நிறுவனத்திற்குச் சொந்தமான கூகிள் Chrome பிரௌசரில் ஹேக்கர்களால் தவறாகப் பயன்படுத்தக்கூடிய ஒரு மிகப்பெரிய பாதிப்பு இருப்பது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய பிழை பயனர்களின் பாதுகாப்பிற்குப் பங்கம் செய்யும் என்பது நிறுவனத்தால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதை கூகிள் குரோம் பயன்படுத்தும் மக்கள் விளையாட்டாக கருத வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்த பிழையால் தொலைதூரத்தில் இருந்தே ஹேக்கர்கள் உங்களை ஹேக் செய்ய முடியும்

இந்த பிழையைப் பயன்படுத்தி, ஹேக்கர்கள் உலகில் எங்கிருந்து வேண்டுமானாலும் பயனர்களின் சாதனங்களில் ஹேக்கிங் கோட்களை (code) புகுத்தி பாதிப்பை ஏற்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, ஹேக்கர் உங்கள் சாதனத்துடன் நேரடி தொடர்பு எதுவும் இல்லாமலே, தொலைதூரத்தில் இருந்து இந்த பிழையை பயன்டுத்தி உங்களை ஹேக் செய்ய முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரிய பாதுகாப்பு குறைபாட்டைக் கண்ட கூகிள் நிறுவனம்

இந்த பெரிய பாதுகாப்பு குறைபாட்டைக் கூகிள் நிறுவனம் கண்டுபிடித்து அறிவித்திருந்தாலும், இதில் இருந்து கூகிள் குரோம் பயனர்கள் எந்த பாதிப்பும் இல்லாமல் தப்பிக்க, சில குறிப்பிட்ட நடவடிக்கைகளை உடனே எடுக்க வேண்டும் என்று நிறுவனம் தற்பொழுது எச்சரித்துள்ளது. இதன் பொருள், கூகிள் குரோம் உலாவியை தங்கள் சாதனங்களில் நிறுவிய பயனர்கள் இப்போதே அதை உடனே புதுப்பிக்க வேண்டும்.

புதிதாக வெளியிடப்பட்ட பேட்ச் அப்டேட் பாதுகாப்பானதா?

அதாவது உடனே கூகிள் பிளே ஸ்டோர் சென்று புதிதாக வெளியிடப்பட்ட பேட்ச் அப்டேட்டை நிறுவி உங்கள் கூகிள் குரோம் பயன்பாட்டை அப்டேட் செய்ய வேண்டும். இது மட்டும் தான் இப்போதைக்கு உங்களை இந்த பிழையில் இருந்து தப்பிக்க வழி வகுக்கும் என்று கூகிள் நிறுவனம் கூறியுள்ளது. கூகிள் குரோம் பயனர்கள் காலம் கடத்தாமல் உடனே புதிய அப்டேட்டை நிறுவ வலியுறுத்தப்படுகிறார்கள்.

இந்த பிழை உங்கள் தரவை வெளிப்படுத்தும் அபாயம் கொண்டது

பயனர்களின் சாதனங்களை ஹேக்கர்கள் கட்டுப்படுத்த முடியும் என்பதோடு மட்டுமல்லாமல், சமீபத்தில் நிர்ணயிக்கப்பட்ட இந்த பாதுகாப்பு குறைபாடு காரணமாகப் பயனர்கள் அவர்களின் தரவு வெளிப்படும் அபாயமும் இருக்கிறது என்று கூறியுள்ளனர். பயனர்கள் தங்கள் சாதனங்களுக்கான Chrome இன் சமீபத்திய பதிப்பை விரைவாக அப்டேட் செய்து உடனே தங்களின் சாதனங்களில் நிறுவ வேண்டியது ஏன் கட்டாயம் என்பதைத் தெளிவாகப் பார்க்கலாம்.

கூகிள் நிறுவனத்திற்கே தெரியாமல் செயல்பட்டியில் இருந்த பிழையின் பின்னணி என்ன?

கண்டறியப்பட்ட புதிய பிழை ஏற்கனவே பயன்பாட்டில் இருப்பதாகக் கூகிள் தனது வலைப்பதிவில் வெளிப்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது இது பூஜ்ஜிய நாள் பாதிப்பு (zero-day vulnerability) என்று அழைக்கப்படுகிறது. பூஜ்ஜிய நாள் பாதிப்பு அல்லது பூஜ்யம் நாள் சுரண்டல் என்பது ஒரு மிப்பெரிய பாதுகாப்பு குறைபாடு ஆகும்.

இதனால் தான் கூகிள் கண்களில் இந்த பிழை சிக்கவில்லையா?

இது பயன்பாட்டை அல்லது சேவையை உருவாக்கிய நிறுவனத்தின் கவனத்திற்குத் தெரியாமல் ஹேக்கர்களால் பயன்படுத்தப்படக் கூடியது ஒரு பிழை வழி என்பது குறிப்பிடத்தக்கது.இவை ஹேக்கர்களின் முக்கிய தளமான டார்க் வெப் தளங்களில் மில்லியன் கணக்கான டாலர்களுக்கு விற்கப்படுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் தான் கூகிள் நிறுவனத்தின் கண்களில் இந்த ஜீரோ வல்நரிபிலிட்டி பிழை தென்படாமல் இருந்துள்ளது.

CVE-2021-30563 பற்றி கூகிள் அறிந்துள்ளது என்பது உண்மை தானா?

கூகிள் "CVE-2021-30563'' க்கான ஒரு பாதுகாப்பு பிழை பொதுவில் இருப்பது தெரியும் என்று கூகிள் தனது சமீபத்திய அறிக்கைகளின் மூலம் உறுதிப்படுத்தியுள்ளது. கூகிள் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, இந்த சமீபத்திய அப்டேட்டை புதுப்பிக்காமல் பிரௌசரை பயன்படுத்தும் போது பயனர்கள் குறைபாட்டால் பாதிக்கப்படலாம் என்று நிறுவனம் எச்சரித்துள்ளது.

ஓபன் சோர்ஸ் ஜாவாஸ்கிரிப்ட் சிக்கல்

இது Chrome உலாவியில் உள்ள ஓபன் சோர்ஸ் ஜாவாஸ்கிரிப்ட் இயந்திரத்தில் உள்ள சிக்கல் காரணமாக ஹேக்கர்கள் உங்களின் தரவை அணுக இந்த பிழை அனுமதிக்கும் என்பதை மறக்கவேண்டாம். உலாவியின் பழைய பதிப்புகளைப் பயன்படுத்தும் அனைத்து Chrome பயனர்களையும் பாதிக்கும் பாதுகாப்பு குறைபாட்டிலிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள உடனே, Settings > Help > About Google Chrome சென்று அப்டேட் விருப்பத்தை கிளிக் செய்யுங்கள்.

உங்களின் கூகிள் குரோம் எந்த வெர்ஷனில் இயங்குகிறது என்பதை எப்படி அறிவது?

உங்களின் கூகிள் குரோம் பதிப்பு 91.0.4472.164 அல்லது அதற்கும் மேல் உள்ள வெர்ஷனில் இயங்குகிறது என்றால், நீங்கள் பாதுகாப்பு பாதிப்பிலிருந்து பாதுகாப்பாக இருக்கிறீர்கள் என்று அர்த்தம். உங்கள் கூகிள் குரோம் பிரௌசர் எந்த வெர்ஷனில் ரன் ஆகிக்கொண்டிருக்கிறது என்பதை அறிந்துகொள்ள Settings > Help > About Google Chrome என்பதை கிளிக் செய்யுங்கள்.

இந்த விஷயம் பற்றி உடனே மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்

இதில் Application version என்ற முதல் டேப் இல் உங்கள் கூகிள் குரோம் எந்த வெர்ஷனில் இயங்கிக்கொண்டிருக்கிறது என்பதை நீங்கள் பார்க்க முடியும். பழைய கூகிள் குரோம் வெர்ஷனில் இயங்கும் பயனர்கள் உடனே அப்டேட் செய்து உங்களை பாதுகாப்பாக தற்காத்துக்கொள்ளுங்கள். இந்த விஷயம் பற்றி தெரியாத உங்களின் நண்பர் வட்டம் மற்றும் குடும்ப வட்டத்திற்கு இந்த தகவலை உடனே தெரியப்படுத்துங்கள், பாதுகாப்பாக இருங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக