Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

திங்கள், 12 ஜூலை, 2021

இந்த வங்கிகளின் IFSC கோடுகள் செல்லவில்லையா.. எப்படி மாற்றம் செய்வது..!

What Is IFSC Code And Which Ways Can You Get Information About IFSC Code- IFSC Code क्या है और किन तरीकों से हासिल कर सकते हैं इसकी जानकारी - News  Nation
இந்தியாவில் கடந்த ஆண்டில் பல சிறிய வங்கிகள் பெரிய வங்கிகளுடன் இணைக்கப்பட்டது. இதனால் இணைக்கப்பட்ட சிறிய வங்கிகளின் IFSC கோடுகள் மற்றும் செக் புத்தகங்கள் செல்லாது என வங்கிகள் அறிவித்துள்ளன.

இதனால் உங்களால் நெட் பேங்கிங் அல்லது ஆன்லைன் பரிவர்த்தனையை செய்ய முடியவில்லையா. அப்புறம் எப்படி புதிய வங்கிகளின் IFSC கோடுகளை பெறுவது என்பதனைத் தான் இந்த கட்டுரையில் பார்க்கவிருக்கிறோம்.

பெரும்பாலான வங்கிகளின் நிதி நெருக்கடியை சமாளிக்கும் விதமாக பல பொதுத்துறையை சேர்ந்த சிறிய வங்கிகள், பெரிய வங்கிகளுடன் இணைக்கப்பட்டன. அந்த வகையில் கனரா வங்கி, சிண்டிகேட் வங்கியுடன் இணைக்கப்பட்டது.

பழைய IFSC கோடுகள் இயங்காது

இதனால் சிண்டிகேட் வங்கி, அலகாபாத் வங்கி, தேனா வங்கி, யுனைடெட் பேங்க் ஆப் இந்தியா, விஜயா வங்கி, தி ஒரியண்டல் பேங்க் ஆப் காமர்ஸ், ஆந்திரா வங்கி, கார்ப்பரேஷன் வங்கி உள்ளிட்ட பல பொதுத்துறை வங்கிகள் இணைக்கப்பட்டன. மேற்கண்ட இந்த வங்கிகளின் இணையதளத்தில் அதன் ஐஎஃப்சி கோடுகளை பெறும் வசதியினை இவ்வங்கிகள் செய்துள்ளன. ஏற்கனவே ஜூலை முதல் இந்த கோடுகள் இயங்காது அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பரிவர்த்தனை செய்ய முடியாது

இதனால் மேற்கண்ட இணைக்கப்பட்ட சிறிய பொதுத்துறை வங்கிகளின் வாடிக்கையாளர்கள் நெட் பேங்கிங் மூலமாக செய்யப்படும், ஆர்.டி.ஜி.எஸ், ஐ.எம்.பி.எஸ், நெஃப்ட் சேவைகளை பெற முடியாது. ஆக மேற்கண்ட சேவைகளை பெற வேண்டுமெனில் வாடிக்கையாளர்கள் இணைக்கப்பட்ட வங்கி கிளைகளையோ அல்லது வங்கிகளின் இணையதளத்திலோ பெற்றுக் கொள்ளலாம்.

IFSC கோடுகள்

அப்படி இல்லையேல் https://canarabank.com/IFSC.html என்ற இணைய பக்கத்தில் சென்று கிளிக் செய்து, உங்களது பழைய சிண்டிகேட் வங்கியின் IFSC கோடுகளை கொடுத்து, கிளிக் செய்து புதிய ஐஎப்எஸ்சி கோடினை பெற்றுக் கொள்ளலாம். அப்படி இல்லாவிட்டாலும் கனரா வங்கியின் வாடிக்கையாளர் சேவை மைய நம்பரான 18004250018 என்ற நம்பருக்கும் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.

மற்ற வங்கி வாடிக்கையாளர்கள்

இதே போல ஒவ்வொரு வங்கியிலும் இணையதளம் மூலமாகவும், டோல் ப்ரீ எண் மூலமாகவும், இந்த IFSC கோடுகளை பெற்றுக் கொள்ளும் வசதியினை ஏற்படுத்தியுள்ளன. நீங்கள் மேற்கண்ட சில வங்கிகளின் ஒன்றை சார்ந்தவர் எனில், விரைவில் அதனை மாற்றம் செய்தால் தான், உங்களால் உங்கள் வங்கிக் கணக்கில் இருந்து ஆன்லைன் பணபரிவர்த்தனை செய்து கொள்ள முடியும்.

எந்தெந்த வங்கிகள் எந்த வங்கியுடன் இணைப்பு?

கடந்த 2019ம் ஆண்டு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 10 பொதுத்துறை வங்கிகளை நான்கு வங்கிகளாக இணைப்பதாக கூறினார். இதில் சிண்டிகேட் வங்கி கனரா வங்கியுடனும், இதே பஞ்சாப் நேஷனல் வங்கியுடன் யுனைடெட் பாங்க் ஆப் இந்தியா, ஓரியண்டல் பாங்க் ஆப் காமர்ஸ் வங்கியும் இணைக்கப்பட்டன. இந்தியன் வங்கியும், அலகாபாத் வங்கியும் இணைக்கப்பட்டன. இதே விஜயா வங்கி, தேனா வங்கியும் பாங்க் ஆப் பரோடாவுடன் இணைக்கப்பட்டது.


,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக