2007 ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் என்ற ஒளிபரப்பு தளம் திமுக ஆட்சியில் தொடங்கப்பட்டது. கேபிள் ஒளிபரப்பு தொழிலில் தனியார் நிறுவனங்கள் ஆக்கிரமித்து தங்களது விருப்பத்துக்கு ஏற்ப சந்தா வசூலித்து வந்ததை தடுக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. குறைவான சந்தா கட்டணத்தில் நிறைந்த சேவைகலை வழங்கும் நோக்கத்துடன் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
புதிய தலைவர் பொறுப்பேற்பு
தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் தலைவர் பதவி காலியாக இருந்ததையடுத்து தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அந்த பதவிக்கு குறிஞ்சி என்.சிவக்குமாரை நியமித்து அறிவித்தார். இதையடுத்து ஜூலை 9 ஆம் தேதி சென்னை எழும்பூரில் அமைந்துள்ள தமிழ்நாடு அரசு கேபிள் நிறுவன அலுவலகத்தின் புதிய தலைவராக சிவக்குமார் பொறுப்பேற்றுக் கொண்டார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவன தலைவர் சிவக்குமார்
செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவன தலைவர் சிவக்குமார், அரசு கேபிள் டிவி நிறுவனம் நஷ்டத்தில் இயங்குகிறது எனவும் அது விரைவில் லாபத்தில் கொண்டு வரப்படும் எனவும் கூறினார். மேலும் தமிழகத்தில் மூன்று மாதங்களுக்கு மேல் செயல்படாமல் இருக்கும் அனைத்து செட் டாப் பாக்ஸையும் அரசிடம் ஒப்படைக்கும்படி கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கு அறிவித்தார்.
ஆபரேட்டர்கள் மீது நடவடிக்கை
அரசு செட்டாப் பாக்ஸ்களை மக்களுக்கு ஒப்படைக்காமல் தனியார் செட் டாப் பாக்ஸ்களை லாப நோக்கத்தோடு விற்கும் ஆபரேட்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். மேலும் கொரோனா பரவல் காலத்தில் இணையதளம் மூலமாக வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகிறது. எனவே கேபிள் மூலமாக இணையதள வசதியை கிராமங்கள் தோறும் கொண்டு வருவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ரூ.140-க்கு ஜிஎஸ்டி வரியோடு 200 சேனல்கள் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.
அரசு கேபிள் டிவியில் ஓடிடி தளங்கள்
இதில் குறிப்பிடத்தகுந்த விஷயம் என்னவென்றால் ஓடிடி தளங்கள் அரசு கேபிள் டிவி மூலமாக ஒளிபரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டார். ஓடிடி தளங்களின் தன்மை அதிகரித்து வரும் நிலையில் தமிழ்நாடு அரசு கேபிள் நெட்வொர் தலைவரின் அறிவிப்பு பலரிடமும் பேசு பொருளாக மாறி வருகிறது.
பிரபலமடைந்து வரும் ஓடிடி பயன்பாடு
குறிப்பாக சொல்ல வேண்டுமானால் ஓடிடி பயன்பாடு என்பது சீரிஸ் உள்ளிட்டவற்றில் பிரபலமாக இருந்தது. Money Heist, Locked Up போன்ற தொடர்கள் பலரால் பேசப்பட்டு நெட்ஃபிளிக்ஸ், அமேசான் பிரைம் போன்ற தளங்களில் சிலர் மட்டுமே கட்டண வாடிக்கையாளர்களாக இருந்தனர். கொரோனா பரவல் தொடங்கியபோது தியேட்டர்கள் மூடப்பட்டது இதையடுத்து திரைப்படங்கள் நேரடியாக ஓடிடி தளங்களில் வெளியானது.
இரண்டாவது மக்கள் தொகை கொண்ட நாடு
உலகளவில் இரண்டாவது மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் தங்களது கிளைகளை நிலைநிறுத்த பல்வேறு நாட்டு நிறுவனங்களும் முணைப்பு காட்டி வருகிறது. இதில் ஓடிடி தளங்களுக்கு மட்டும் விதிவிலக்கு இல்லை. கொரோனா பூட்டுதலின்போது மக்களின் பொழுதுபோக்கை பூர்த்தி செய்ய ஓடிடி தளங்கள் போட்டிப்போட்டு நடவடிக்கை எடுத்தது.
டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் சந்தாதாரர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு
குறிப்பாக குறுகிய காலத்தில் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரின் கட்டண வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. காரணம், ஐபிஎல் 2021 நேரலையை டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் தொகுத்து வழங்குகிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக