பங்களாதேஷில் நாடு தழுவிய COVID-19 பூட்டுதல் இருந்தபோதிலும், 51 சென்டிமீட்டர் உயரமுள்ள ராணி என்ற பசுவைப் பார்க்க ஆயிரக்கணக்கான மக்கள் அந்த பகுதியில் கூடியுள்ளது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. உரிமையாளரின் கூற்றுப்படி, ராணி உலகின் மிகச்சிறிய மாடு என்று கூறப்பட்டுள்ளது. கின்னஸ் உலக சாதனை படைத்த முந்தைய சிறிய பசுவை விட இது அளவில் இன்னும் சிறியது என்று ராணியின் உரிமையாளர் கூறியுள்ளார்.
23 மாத வயதான பசுவின் சைஸ் இது தானா?
ராணியைப் பார்க்க, டாக்காவிலிருந்து தென்மேற்கே 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சாரிகிராமில் உள்ள பண்ணைக்கு நாடு முழுவதும் இருந்து பார்வையாளர்கள் ரிக்ஷாக்களில் திரண்டு வருவதை நம்மால் காணமுடிகிறது. குள்ள பசுவின் படங்கள் புகைப்படங்கள் தற்பொழுது இணையத்தில் வைரல் ஆகிவருகின்றது. இது 23 மாத வயதான பசு என்று அதன் உரிமையாளர் கூறியுள்ளார்.
உலகின் மிகவும் சிறிய மாடு இது தானாம்
உலகின் மிகவும் சிறிய மாடு என்று அழைக்கப்படும் இந்த ராணி, 26 அங்குலங்கள் (66 சென்டிமீட்டர்) நீளமும் 57 பவுண்டுகள் (26 கிலோகிராம்) மட்டுமே எடை கொண்டுள்ளது. இதன் வடிவம் ஒரு ஆட்டின் அளவை விட மிகச் சிறியதாக இருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. கின்னஸ் உலக சாதனைகளில் மிகச்சிறிய பசு என்று இதற்கு முன்பு அடையாளம் காணப்பட்ட மாடை விட இது நான்கு அங்குலம் அளவில் சிறியதாக இருக்கிறது என்று அதன் உரிமையாளர்கள் கூறுகிறார்.
வெச்சூர் இனத்தைச் சேர்ந்த மாணிக்கம் வகை மாடு
பக்கத்து ஊரைச் சேர்ந்த ரினா பேகம் தனது முழு வாழ்க்கையிலும் இதுபோன்ற ஒரு சிறிய மாடு வகை எதையும் பார்த்ததில்லை என்று தெரிவித்தார். வெளியான சமீபத்திய அறிக்கையின்படி, 'இந்த மாடு பிறந்த சிறிது நேரத்திலேயே, ஷாகர் அக்ரோவால் நாகோனில் உள்ள ஒரு பண்ணையிலிருந்து வாங்கப்பட்டது என்று அதன் உரிமையாளர் கூறியுள்ளார். கின்னஸ் உலக சாதனைகளின்படி, வெச்சூர் இனத்தைச் சேர்ந்த மாணிக்கம் வகை மாடு இது என்பது குறிப்பிடத்தக்கது.
மூன்று நாளுக்குள் 15,000 பேருக்கு மேல் ராணியை காண வருகை
கொரோனா வைரஸ் பூட்டப்பட்ட போதிலும் மக்கள் நீண்ட தூரம் பயணித்து இந்த சிறிய மாடு வகையைக் காண வருகிறார்கள். பெரும்பாலானவர்கள் ராணியுடன் செல்ஃபி எடுக்க விரும்புகிறார்கள். 'கடந்த மூன்று நாட்களில் மட்டும் 15,000 க்கும் மேற்பட்டோர் ராணியைப் பார்க்க வந்துள்ளனர் என்று அதன் உரிமையாளர் கூறியுள்ளார். நேர்மையாகச் சொன்னால், எங்களால் ஆர்வமுள்ள மக்களின் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்று அவர் கூறியுள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக