
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இரவோடு இரவாக, சத்தமே இல்லாமல் சைலன்ட்டாக புதிய ஜியோஃபைபர் போஸ்ட்பெய்ட் (JioFiber Postpaid) திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய ஜியோஃபைபர் போஸ்ட்பெய்ட் திட்டங்கள் இந்தியாவில் வெறும் ரூ.399 முதல் கிடைக்கிறது. இத்தோடு நம்ப முடியாத சலுகையாக, ரூ. 399 திட்ட பயனர்களுக்கு 4K செட்டாப் பாக்ஸ் இலவசமாக வழங்கப்படுகிறது என்று சொன்னால் நம்புவீர்களா? நம்புங்கள் அது தான் உண்மை. இந்த திட்டத்துடன் இன்னும் பல நன்மைகள் கிடைக்கிறது, அவற்றைப் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.
ரூ.399க்கு இலவசமா செட் டாப் பாக்ஸ் கிடைக்கிறதா?
என்னப்பா சொல்றீங்க வெறும் ரூ.399க்கு இலவசமா செட் டாப் பாக்ஸ் கிடைக்கிறதா? அதுவும் சாதாரண செட் டாப் பாக்ஸ் இல்லை, 4K செட் டாப் பாக்ஸா என்று நீங்கள் பிரமித்துக் கேட்கலாம். நீங்கள் எப்படி விழியைப் பிதுக்கிக் கேட்டாலும் இது மட்டும் தான் உண்மை என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள். இதுமட்டுமின்றி, இன்னும் ஏராளமான சலுகைகளை ஜியோ நிறுவனம் தற்பொழுது அறிமுகம் செய்துள்ள மற்ற புதிய ஜியோஃபைபர் போஸ்ட்பெய்ட் திட்டங்களுடன் வழங்குகிறது.
மாத கட்டணமா அலல்து அரையாண்டு கட்டணமா?
புதிய ஜியோஃபைபர் போஸ்ட்பெய்ட் திட்டங்கள் ரூ.399 என்ற விலையின் கீழ் துவங்குகிறது. இந்த திட்டம் உங்களுக்கு முற்றிலுமாக ஒரு இலவசமாக 4 கே செட் டாப் பாக்ஸை வழங்குகிறது. இந்த சேவையை நீங்கள் மாதந்தோறும் செலுத்தும் கட்டண முறையிலோ அல்லது ஆண்டுதோறும் அல்லது அரை ஆண்டுக் காலம் செலுத்தும் கட்டண முறையின் கீழோ அல்லது உங்கள் விருப்பத்திற்கு ஏற்றார் போல நீங்கள் இதை வாங்கி பயன்பெறலாம். இருப்பினும் இதற்கு சில நிபந்தனைகள் உள்ளது, அது என்னவென்று பார்க்கலாம்.
திருப்பிச் செலுத்தக்கூடிய பாதுகாப்பு வைப்புத் தொகை கட்டாயமா?
ஜியோ வழங்கும் இந்த திட்டங்களைப் பயனர்கள் தேர்ந்தெடுப்பதற்கு முன்பாக நீங்கள் புதிய சந்தாதாரர்களாக இருக்கும் பட்சத்தில், திருப்பிச் செலுத்தக்கூடிய பாதுகாப்பு வைப்புத் தொகையான ரூ. 1,000 என்ற கட்டாய தொகையை நீங்கள் செலுத்தியாக வேண்டும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். இந்த சேவையின் கீழ் கிடைக்கும் செட் டாப் பாக்ஸை நீங்கள் OTT ஆப்ஸ் பயனுக்கும் பயன்படுத்திக்கொள்ளலாம் என்பது கூடுதல் சிறப்பு.
15 பெயிட் OTT ஆப்ஸ்களுக்கான அணுகலும் கிடைக்கிறதா?
அதேபோல், இந்த புதிய ஜியோஃபைபர் போஸ்ட்பெய்ட் திட்டங்களின் பட்டியலில் கிடைக்கும் ரூ.999 மற்றும் அதற்கு மேற்பட்ட திட்டங்களைப் பெறும் சந்தாதாரர்களுக்கு 15 பெயிட் OTT ஆப்ஸ்களுக்கான அணுகலும் கிடைக்கிறது. இந்த புதிய ஜியோ ஃபைபர் போஸ்ட்பெய்ட் திட்டங்கள் அனைத்தும் வரும் ஜூன் 17 ஆம் தேதி முதல் பயன்பாட்டிற்குக் கிடைக்கும் என்று நிறுவனம் அறிவித்துள்ளது. விருப்பம் உள்ள ஜியோ பயனர்கள் இந்த திட்டங்களை நாளை முதல் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்தலாம்.
ரூ.399 JioFiber Postpaid திட்டத்தின் நன்மைகள் என்ன-என்ன?
ஜியோவின் இந்த புதிய ஜியோஃபைபர் போஸ்ட்பெய்ட் திட்டமானது 30 எம்.பி.பி.எஸ் வேகம் கொண்ட வரம்பற்ற டேட்டா பயனைத் தருவதோடு, வரம்பற்ற அழைப்பு நிமிடங்கள், ஒரு இலவச லேண்ட்லைன் இணைப்பு ஆகியவற்றை வெறும் ரூ. 399 என்ற விலையில் வழங்குகிறது. ஆனால், இந்த திட்டத்தின் கீழ் உங்களுக்கு எந்த OTT நன்மையையும் கிடைக்காது என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.
ரூ.699 ஜியோஃபைபர் போஸ்ட்பெய்ட் திட்டத்தின் நன்மைகள்
ஜியோவின் இந்த புதிய ஜியோஃபைபர் போஸ்ட்பெய்ட் திட்டமானது 100 எம்.பி.பி.எஸ் வேகம் கொண்ட வரம்பற்ற டேட்டா நன்மையை வழங்குவதோடு, வரம்பற்ற அழைப்பு நிமிடங்களையும் வழங்குகிறது. இத்துடன் உங்களுக்கு ஒரு லேண்ட்லைன் இணைப்பும் கிடைக்கிறது. ஆனால், இந்த திட்டத்துடனும் உங்களுக்கு எந்த OTT நன்மையையும் கிடைக்காது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
ரூ.999 ஜியோஃபைபர் போஸ்ட்பெய்ட் திட்டத்தின் நன்மைகள் இதோ
ஜியோவின் இந்த புதிய ஜியோஃபைபர் போஸ்ட்பெய்ட் திட்டமானது 150எம்.பி.பி.எஸ் வேகம் கொண்ட வரம்பற்ற டேட்டா நன்மையை வழங்குவதோடு, வரம்பற்ற அழைப்பு நிமிடங்களையும் வழங்குகிறது. இத்துடன் உங்களுக்கு ரூ.1,000 மதிப்புள்ள 14 OTT சேவைகளுக்கான சந்தாக்களை ஜியோ வழங்குகிறது. ரூ. 999 விலைக்கு மேல் உள்ள திட்டங்களில் இருந்து தான் இலவச OTT சேவைகள் கிடைக்கிறது.
ரூ. 1,499 ஜியோஃபைபர் போஸ்ட்பெய்ட் திட்டத்தின் நன்மை
ஜியோவின் இந்த புதிய ஜியோஃபைபர் போஸ்ட்பெய்ட் திட்டமானது 300 எம்.பி.பி.எஸ் வேகம் கொண்ட வரம்பற்ற டேட்டா நன்மையை வழங்குவதோடு, வரம்பற்ற அழைப்பு நிமிடங்களையும் வழங்குகிறது. நீங்கள் இன்னும் அதிக வேகத்தை விரும்பினால் அடுத்து வரும் திட்டத்தைப் பாருங்கள். இந்த திட்டம் உங்களுக்கு ரூ.1,500 மதிப்புள்ள 15 ஆப்ஸ் மற்றும் சேவைகளுக்கான இலவச சந்தாக்களை வழங்குகிறது.
ரூ.2,499 ஜியோஃபைபர் போஸ்ட்பெய்ட் திட்டத்தின் கீழ் கிடைக்கும் நன்மைகள்
ஜியோவின் இந்த புதிய ஜியோஃபைபர் போஸ்ட்பெய்ட் திட்டமானது 500 எம்.பி.பி.எஸ் வேகம் கொண்ட வரம்பற்ற டேட்டா நன்மையை வழங்குவதோடு, வரம்பற்ற அழைப்பு நிமிடங்களையும் வழங்குகிறது. இத்துடன் உங்களுக்கு ரூ.1,500 மதிப்புள்ள 15 ஆப்ஸ் மற்றும் சேவைகளுக்கான இலவச சந்தாக்களை வழங்குகிறது.
ரூ.3999 மற்றும் ரூ.8,499 திட்டத்தின் நன்மைகள்
ஜியோவின் இந்த இரண்டு புதிய ஜியோஃபைபர் போஸ்ட்பெய்ட் திட்டமானது பயனர்களுக்கு 1 ஜி.பி.பி.எஸ் வேகத்தில் டேட்டா நன்மையை வழங்குகிறது. ஜியோனின் புதிய திட்டங்களின் கீழ் 1 ஜி.பி.பி.எஸ் வேகத்தில் கிடைக்கும் ஹை-ஸ்பீட் டேட்டா திட்டங்கள் என்றால் அது இந்த இரண்டு திட்டங்கள் மட்டுமே. இதன்படி, ஜியோஃபைபர் ரூ.3,999 திட்டமானது உங்களுக்கு 3300 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. அதேபோல், ரூ.8,499 திட்டமானது 1 ஜி.பி.பி.எஸ் வேகத்தில் 6600 ஜிபி டேட்டாவை வழங்குகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக