Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 19 ஜூலை, 2021

சிறிய LPG சிலிண்டர் புக் செய்ய ஆதார், முகவரி சான்று தேவையில்லை

லட்சக்கணக்கான மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் செய்தியாக, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (IOCL) ஆதார் அட்டை அல்லது முகவரி ஆதாரம் இல்லாமல் எல்பிஜி எரிவாயு சிலிண்டரை (LPG cylinder ) வாங்கலாம் என்று அறிவித்துள்ளது. 

அரசுக்கு சொந்தமான பெட்ரோலியம் மற்றும் எரிவாயு நிறுவனம் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பு, நாடு முழுவதும் எல்பிஜி பயன்பாட்டை அதிகரிக்கும் நோக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

முன்னதாக, விநியோகஸ்தர்களும் நிறுவனங்களும் சிறிய எல்பிஜி சிலிண்டரை முன்பதிவு செய்வதற்கு, ஆதார் அல்லது முகவரி ஆதாரங்களைக் காண்பிக்க வேண்டும். ஆனால் IOCL அமல்படுத்திய புதிய விதிகள் வாடிக்கையாளர்கள் தங்களது அருகிலுள்ள இந்தேன் (Indane) எரிவாயு விநியோகஸ்தர்கள் அல்லது விற்பனை இடத்திற்கு சென்று 5 கிலோ எல்பிஜி சிலிண்டரை வாங்கலாம். புதிய 5 கிலோ சிலிண்டரை வாங்க, வாடிக்கையாளர்கள் ஆதார் அட்டைக்கு பதிலாக வேறு எந்த அதிகாரப்பூர்வ அடையாள அட்டை அல்லது சான்றை வழங்கலாம்.

இந்தேனிலிருந்து 5 கிலோ எடையுள்ள சிலிண்டரை வாங்குவதற்கான முகவரி ஆதார ஆவணங்களை நீங்கள் பகிர வேண்டியதில்லை. உங்கள் எரிவாயு சிலிண்டர்களை அருகிலுள்ள விநியோகஸ்தர்களிடமோ அல்லது விற்பனை செய்யும் இடத்திலோ நிரப்பிக் கொள்ளலாம். இந்த 5 கிலோ எல்பிஜி சிலிண்டர்கள் பிஐஎஸ் (BIS) சான்றிதழ் பெற்றவை என்பது குறிப்பிடத்தக்கது.

இன்டேன் வாடிக்கையாளர்கள் இனி சிலிண்டர்கள் வேண்டாம் என்றால், திருப்பித் தரலாம். 5 ஆண்டுகளுக்குள் எல்பிஜி சிலிண்டர்களை வாடிக்கையாளர்கள் திருப்பித் தந்தால், சிலிண்டரின் விலையில் 50% திருப்பித் தரப்படும், 5 ஆண்டுகளுக்குப் பிறகு அதை திருப்பித் தரும்போது ரூ.100 மட்டுமே கிடைக்கும்.

வாடிக்கையாளர்கள் 5 கிலோ சிலிண்டரை வாட்ஸ்அப் வழியாக முன்பதிவு செய்யலாம். இந்தேன் 8454955555 என்ற பிரத்யேக தொலைபேசி எண்ணை வெளியிட்டுள்ளது. சிலிண்டரை மிஸ்ட் கால் மூலம் முன்பதிவு செய்ய பயன்படுத்தலாம். சிலிண்டரை ரீபில் செய்ய, வாடிக்கையாளர்கள் 7588888824 என்ற எண்ணில் நிறுவனத்திற்கு செய்தி அனுப்பலாம் அல்லது அழைக்கலாம்.

இந்தேன் சமீபத்தில் ஒரு புதிய சிலிண்டரை அறிமுகப்படுத்தியுள்ளது, இந்த சிலிண்டரில், எவ்வளவு எரிவாயு மிச்சம் உள்ளது என்பதை வாடிக்கையாளர்கள் எளிதாக அறிந்து கொள்ளலாம். புதிய சிலிண்டருக்கு காம்போசிட் சிலிண்டர் என்று பெயரிடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக