Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

செவ்வாய், 13 ஜூலை, 2021

Moto G60S விரைவில் அறிமுகம்.. இத்தனை அம்சங்களுடன் விலை இவ்வளவு தான் இருக்குமா?

மோட்டோ ஜி 60 எஸ் ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம்

மோட்டோரோலா நிறுவனம் அடுத்தபடியாக மோட்டோ ஜி 60 எஸ் (Moto G60S) என்ற புதிய ஸ்மார்ட்போன் மாடலை ஸ்மார்ட்போன் சந்தையில் நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளது என்று டிப்ஸ்டர் தகவல் தெரிவிக்கிறது. வரவிருக்கும் ஸ்மார்ட்போனின் சில முக்கிய விவரக்குறிப்புகள் மற்றும் விலை குறிப்பு ஆகியவற்றை டிப்ஸ்டர் கசியவிட்டுள்ளார். லெனோவாவுக்குச் சொந்தமான பிராண்ட் மோட்டோ ஜி 60 எஸ் பற்றி எதுவும் வெளியிடவில்லை என்றாலும், தேர்ந்தெடுக்கப்பட்ட சந்தைகளில் மட்டுமே இந்த தொலைப்பேசி கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

மோட்டோ ஜி 60 எஸ் ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம்

மோட்டோரோலா இந்த ஆண்டு வெண்ணிலா மோட்டோ ஜி 60 உட்பட சில மோட்டோ ஜி-சீரிஸ் தொலைப்பேசிகளைச் சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. வரவிருக்கும் மோட்டோ ஜி 60 எஸ், வெண்ணிலா மோட்டோ ஜி 60 ஸ்மார்ட்போனுக்கான விவரக்குறிப்புகளில் ஒத்ததாக இருக்கும் என்று ஊகிக்கப்படுகிறது. மைஸ்மார்ட் பிரைஸுடன் இணைந்து டிப்ஸ்டர் வெளியிட்ட தகவலின்படி, வரவிருக்கும் மோட்டோரோலா ஸ்மார்ட்போனின் விலை சுமார் ரூ. 26,500 முதல் ரூ. 28,300 என்ற விலைக்குள் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

8 ஜிபி ரேம், 128 ஜிபி ரேம் ஸ்டோரேஜ் உடன் புதிய மோட்டோ ஜி 60 எஸ்

இந்த ஸ்மார்ட்போன் 8 ஜிபி ரேம், 128 ஜிபி ரேம் மற்றும் ப்ளூ கலர் ஆப்ஷனில் அறிமுகமாகும் என்று டிப்ஸ்டர் கூறினார். லிஸ்பன் என்ற குறியீட்டு பெயரிடப்பட்ட இந்த ஸ்மார்ட்போன் ஐரோப்பாவில் மோட்டோ ஜி 60 எஸ் என அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய மோட்டோ ஜி 60 எஸ் ஸ்மார்ட்போனில் என்ன-என்ன சிறப்பம்சங்களைப் பயனர்கள் எதிர்பார்க்கலாம் என்பதை தற்பொழுது பார்க்கலாம்.

மோட்டோ ஜி 60 எஸ் ஸ்மார்ட்போனின் எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சம்

மோட்டோ G60S ஸ்மார்ட்போன் 6.8' இன்ச் கொண்ட முழு எச்டி பிளஸ் உடன் கூடிய 120Hz புதுப்பித்தல் விகிதத்துடன் செயல்படும் HDR10 டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இது 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஆன் போர்டு ஸ்டோரேஜுடன் ஜோடியாக ஒரு ஸ்னாப்டிராகன் 732 ஜி சிப்செட் மூலம் இயங்குகிறது. இதில் எஸ்டி மைக்ரோ கார்டு ஸ்டோரேஜ் சேவையும் உள்ளது. இதன் வழியாக 1TB வரை ஸ்டோரேஜ் விரிவாக்கம் செய்துகொள்ளலாம்.

கேமரா அமைப்பு

மோட்டோரோலா அறிமுகம் செய்துள்ள இந்த புதிய மோட்டோ ஜி 60 எஸ் ஸ்மார்ட்போன் ஆனது 6,000 எம்ஏஎச் பேட்டரியை டர்போபவர் 20 ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் பேக் செய்துள்ளது. இது ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தில் இயங்கக்கூடியது. மோட்டோ ஜி 60 எஸ் சாதனம் டிரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இதில் 108 மெகாபிக்சல் முதன்மை சென்சார், 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் உடன் 32 மெகாபிக்சல் செல்பி கேமராவை கொண்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக