Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

திங்கள், 19 ஜூலை, 2021

குழந்தைகளுக்கு பாதுகாப்பான தளமாக மாற்ற Netflix அறிமுகப்படுத்தும் புதிய அம்சம்

ஓடிடி தளமான நெட்பிளிக்ஸ் இரண்டு புதிய அம்சங்களை அறிமுகப்படுத்த உள்ளது, இதன் மூலம் குடும்பங்கள் தங்களுக்கு பிடித்த நிகழ்ச்சிகள் மற்றும் படங்கள் தொடர்பான தகவல்களை பெற முடியும்

Mashable India வெளியிட்டுள்ள தகவல்களின் படி, நெட்ஃபிக்ஸ் நிறுவனத்திலிருந்து பெற்றோர்களுக்கு இரு வார காலங்களில் குழந்தைகள் ஆர்வம் காட்டிய விஷயங்கள் குறித்த தகவல்கள் அனுப்பப்படும். இதில் அவர்களது குழந்தையின் விருப்பத்தேர்வுகள் மற்றும் ஆர்வம் காட்டியது பற்றிய தகவல்களைக் கொண்டிருக்கும்.

தங்கள் குழந்தைக்கு பிடித்த நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்கள், அவர்களின் குழந்தையின் விருப்பமான கதாபாத்திரங்கள், சிறந்த கருப்பொருள்கள் அல்லது தலைப்புகள், தங்கள் குழந்தை மிகவும் விரும்பும் நிகழ்ச்சிகளின் வகைகள் ஆகியவை அடங்கிய தகவல்கள், பெற்றோர்களுக்கு வழங்கப்படும் மற்றும் நெட்ஃபிக்ஸ் இல் தங்கள் குழந்தைகள் தொடர்பான பாதுகாப்பு அம்சங்களை எவ்வாறு பயன்படுத்துவது என்பதற்கான உதவிக்குறிப்புகள் பற்றிய விப்ரங்களை கொண்டிருக்கும்

Mashable India அறிவித்த இரண்டாவது புதுப்பிப்பு, 'கிட்ஸ் டாப் 10 வரிசைகள்' குறித்த தகவல்கள். இதில் சந்தாதாரருக்கு நாட்டில் மிகவும் பிரபலமான குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகள் குறித்த தகவல்கள் இருக்கும்.

இந்தத் தகவல் சந்தாதாரருக்குக் கிடைத்தால், மேடையில் பல்வேறு குழந்தைகளை கவரும் உள்ளடக்கங்களைக் கண்டுபிடித்து ஆராய்வது அவர்களுக்கு மிகவும் எளிதாக இருக்கும்.

"காட்சிகள் மற்றும் திரைப்படங்கள் குழந்தைகள் உலகத்துடன் இணைவதற்கு ஒரு முக்கியமான வழியாகும் - புதிய இடங்களைப் பற்றி அவர்களுக்குக் கற்பிக்கவும், குடும்பத்தினர் அல்லது நண்பர்களுடனான உறவை வலுப்படுத்தவும், அவற்றை புரிந்துகொள்ளவும் ​​உதவுகின்றன" என்று நெட்ஃபிக்ஸ் தயாரிப்பு கண்டுபிடிப்பு இயக்குனர் ஜெனிபர் நீவா கூறியுள்ளார்.

Mashable India வெளியிட்டுள்ள தகவல்களின் படி, இரண்டு வகை புதுப்பிப்புகளும் இப்போதே தொடங்கி உலகளவில் நெட்பிளிக்ஸ் சந்தாதாரர்களுக்கு வெளிவரும். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக