Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

திங்கள், 9 ஆகஸ்ட், 2021

சாம்சங் கேலக்ஸி ஏ 12 நாச்சோ என்பது மலிவு விலை ஸ்மார்ட்போனா? விலை இது தானா?

சாம்சங் கேலக்ஸி ஏ 12 நாச்சோ ஸ்மார்ட்போன்

சாம்சங் நிறுவனம் தொடர்ந்து பல புதிய சாதனங்களை அறிமுகம் செய்து வருகிறது. சாம்சங் கேலக்ஸி ஏ 12 நாச்சோ என்ற புதிய மாடலை சாம்சங் நிறுவனம் அடுத்து அறிமுகம் செய்ய தயாராகி வருகிறது. இது ஒரு மலிவான ஸ்மார்ட்போன் ஆகும். இது எக்ஸினோஸ் சிப்செட்டுடன் வருகிறது. தென் கொரிய தொழில்நுட்ப நிறுவனமானது ரஷ்ய சந்தையில் ஸ்மார்ட்போனை அதிகாரப்பூர்வமாக்கியுள்ளது. இந்த சாதனம் பற்றிய முக்கிய விபரங்களை இப்போது பார்க்கலாம்.

சாம்சங் கேலக்ஸி ஏ 12 நாச்சோ ஸ்மார்ட்போன்

சாம்சங் நிறுவனம் பெயரிட்டுள்ள இந்த சாதனத்தின் பெயர் மிகவும் விசித்திரமானது. சாம்சங் நிறுவனம் ஏற்கனவே கேலக்ஸி ஏ 12 ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. எனவே கேலக்ஸி ஏ 12 நாச்சோ ஒரு அன்னிய சாதனம் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது. இது கிட்டத்தட்ட முன்னாள் சாம்சங் கேலக்ஸி ஏ 12 ஐப் போன்றது. ஆனால், வேறு சிஸ்டம்-ஆன்-சிப்செட் உடன் வருகிறது. ரஷ்ய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்ட சாம்சங் கேலக்ஸி ஏ 12 நாச்சோ பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்.

சாம்சங் கேலக்ஸி ஏ 12 நாச்சோ சிறப்பம்சம்

சாம்சங் கேலக்ஸி ஏ 12 நாச்சோ ஸ்மார்ட்போன் 6.5' இன்ச் எல்சிடி டிஸ்ப்ளேவுடன் 1600x720 பிக்சல்கள் தீர்மானம் ஆதரவுடன் கூட டிஸ்பிளேவுடன் வருகிறது. இதன் டிஸ்பிளே 60Hz புதுப்பிப்பு விகிதத்தை ஆதரிக்கிறது மற்றும் 20: 9 என்ற விகிதத்துடன் வருகிறது. இது செல்பி கேமராவின் மேல் பகுதியில் இன்ஃபினிட்டி-வி நாட்ச் அம்சத்தை கொண்டுள்ளது. சாம்சங் கேலக்ஸி ஏ 12 நாச்சோ ஸ்மார்ட்போன் சாதனம் சாம்சங்கின் இன்-ஹவுஸ் எக்ஸினோஸ் 850 சிப்செட் ஆல் இயக்கப்படுகிறது.

மீடியா டெக் ஹீலியோ பி 35 சிப்செட்

தெரியாதவர்களுக்கு, முந்தைய சாம்சங் கேலக்ஸி ஏ 12 ஸ்மார்ட்போன் சாதனமது மீடியா டெக் ஹீலியோ பி 35 சிப்செட் மூலம் இயக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. சாம்சங் கேலக்ஸி ஏ 12 நாச்சோ ஸ்மார்ட்போன் ஆனது 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் விருப்பத்துடன் வருகிறது. இது மைக்ரோ எஸ்டி கார்டு ஆதரவை ஆதரிக்கும் விருப்பத்துடன் வருகிறது. இது 1TB வரையிலான சேமிப்பகத்தை விரிவாக்க அனுமதிக்கிறது.

சாம்சங் கேலக்ஸி ஏ 12 நாச்சோ ஸ்மார்ட்போனின் கேமரா அம்சம்

சாம்சங் கேலக்ஸி ஏ 12 நாச்சோ ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் ஒரு குவாட் கேமரா அமைப்பு உள்ளது. இது 48 எம்பி முதன்மை சென்சார், 5 எம்பி அல்ட்ரா-வைட்-ஆங்கிள் சென்சார், 2 எம்பி மேக்ரோ சென்சார் மற்றும் 2 எம்பி டெப்த் சென்சார் உடன் வருகிறது. இதில் செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகளுக்காக, முன்பக்கத்தில் 8 எம்பி சென்சார் வழங்கப்பட்டுள்ளது. சாம்சங் கேலக்ஸி ஏ 12 நாச்சோ சாதனம் ஆண்ட்ராய்டு 11 இல் இயங்கும். இது 15W வேகமான பாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5,000mAh பேட்டரியை பேக் செய்கிறது.

சாம்சங் கேலக்ஸி A12 நாச்சோ விலை என்னவாக இருக்கும்?

சாம்சங் கேலக்ஸி ஏ 12 நாச்சோ ஸ்மார்ட்போன் ரஷ்ய சந்தையில் 4 ஜிபி+32 ஜிபி வேரியண்ட் மாடலில் அறிமுகம் செய்யப்பட்டது. இது RUB 11,990 என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் இந்திய மதிப்பு தோராயமாக ரூ. 12100 விலையில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம். அதேபோல், இந்த ஸ்மார்ட்போனின் 4 ஜிபி மற்றும் 64 ஜிபி வேரியண்ட் மாடல் RUB 13,990 என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது இந்திய மதிப்பின் படி தோராயமாக ரூ. 14104 விலைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது கருப்பு, சிவப்பு, நீலம் மற்றும் வெள்ளை உள்ளிட்ட நான்கு வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக