
கொரோனா வைரஸ் தொற்று கடந்த ஆண்டு முதல் உலகையே ஆட்டிப் படைத்துவருகிறது. கோவிட் பெருந்தொற்று இரண்டாம் அலை இந்தியா முழுவதிலும் மிகப்பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தி தற்போது மட்டுப்பட்டிருந்தாலும், மூன்றாம் அலை வரலாம் என்ற கணிப்புகள் கவலையை அதிகரித்துள்ளன.
சமூக இடைவெளியை கடை பிடிப்பது, தேவை ஏற்பட்டால் மட்டுமே பொது இடங்களுக்கு செல்வது, முகக்கவசம் அணிவது என பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றினால் கொரோனா தொற்றின் பாதிப்பில் இருந்து பாதுகாப்பாக இருக்கலாம்.அத்துடன் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான உணவுகளையும் ஊட்டச்சத்துக்களையும் எடுத்துக் கொண்டால், உடலின் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
உடலில் வைட்டமின் D பற்றாக்குறை ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் வைட்டமின் D என்பது ஒரு செறிவான நோய் எதிர்ப்புத்திறன் ஊக்கியாகும். விட்டமின் டி குறைபாடு இருந்தால் கொரோனா பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கிறது.
பொதுவாகவே இந்திய மக்கள் தொகையில் பெரும்பாலானவர்களிடம் வைட்டமின் D பற்றாக்குறை காணப்படுகிறது. நோய் எதிர்ப்புத்திறனை பராமரிக்கவும் மற்றும் நமது உடலின் வளர்சிதை மாற்றத்தை சீராக்கவும், கரையக்கூடிய இக்கொழுப்பு வைட்டமின் இன்றியமையாததாக இருப்பது விட்டமின் டி. அழற்சி, அழற்சிக்கு எதிரான திறன் மற்றும் நோய் எதிர்ப்புத்திறனை சீராக்கும் பண்பு ஆகிய இரண்டையுமே வைட்டமின் D கொண்டிருக்கிறது.
எனவே, நமது உடலில் நோய் எதிர்ப்புத்திறன் தற்காப்பு அம்சங்களை தூண்டி விட்டு செயல்படுத்துவதற்கு இது மிக முக்கியமானதாகத் திகழ்கிறது. எலும்புகளையும், சதைகளையும் வலுவாக்குகிற கால்சியம் மற்றும் பாஸ்பேட் ஆகியவற்றை நமது உடலில் ஒழுங்குமுறைபடுத்தவும் வைட்டமின் D உதவுகிறது.
சூரிய ஒளியில் தினசரி சிறிது நேரம் இருப்பது விட்டமின் டி சத்து கிடைக்க அற்புதமான வழியாகும். நமது உடலில் வைட்டமின் Dக்கான மிக நேர்த்தியான ஆதாரமாக இருப்பது சூர்ய ஒளி. எண்ணெய் சத்து அதிகமாகவுள்ள மீன்கள், இறைச்சி, முட்டை கரு, கோழி இறைச்சி மற்றும் செறிவூட்டப்பட்ட தயாரிப்புகள் ஆகியவை வைட்டமின் D-க்கு சிறந்த ஆதாரங்களாக திகழ்கின்றன.
இறைச்சி வகைகளிலேயே மிகவும் சிறந்ததான மீன் விட்டமின் டி உருவாக்கத்தில் மட்டுமல்ல, பல்வேறு ஊட்டச்சத்துக்களையும் கொடுக்கிறது.
நமது உடலில் வைட்டமின் D சத்தை அதிகரிக்க முட்டைகளும் கோழி இறைச்சியும் தொடர்ந்து எடுத்துக் கொள்ளலாம்.
வைட்டமின் D-ஐ மிக அதிகளவில் கொண்டிருக்கும் இயற்கையான ஆதார வளங்களுள் ஒன்று முட்டை. எலும்புகள் மற்றும் பற்களின் ஆரோக்கியத்திற்கு உதவுகின்றன. வைட்டமின் D அதிகமாக இருக்கும் முட்டையை தினசரி சாப்பிட்டு வந்தால் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படும் அபாயம் குறையும்.
கோழி இறைச்சியிலும் வைட்டமின் D-ஐ மிக அதிகளவில் இருக்கிறது. கோழியின்
நெஞ்சுப்பகுதி அதிக ஊட்டச்சத்து மிக்கது மற்றும் வைட்டமின்களை அதிகமாக
கொண்டது. கோழி இறைச்சி, நமது உடலில் வளர்சிதை மாற்றத்தை பாதுகாப்பதுடன்,
குறிப்பிட்ட சில ஒவ்வாமைகளிலிருந்து உடலை பாதுகாக்கவும் வகை செய்கிறது.
கோவிட் தொடர்புடைய நோய்களின் ஒரு விளைவாக நமது உடல்களில் உருவாகக்கூடிய அழற்சி எதிர்ப்பு பிரச்சனைகளையும் எதிர்கொள்ள விட்டமின் டி உதவுகிறது.
கால்சியம் சமநிலையை பேணுவது மற்றும் எலும்பு ஆரோக்கியத்தை ஊக்குவிப்பதும் வைட்டமின் D-ன் அடிப்படை செயல்பாடுகள் ஆகும். அழற்சி எதிர்ப்பு திறன் மற்றும் நோய்எதிர்ப்புத்திறனை ஒழுங்குமுறைப்படுத்தும் பண்புகளை கொண்டது விட்டமின் டி.
இது, நோய் எதிர்ப்பு அமைப்பின் தற்காப்பு இயங்கு முறையை தூண்டி செயல்படுத்துவதிலும் இன்றியமையாததாக செயல்படுகிறது. நோய்களை உருவாக்கும் கிருமிகளுக்கு எதிராக நமது உடம்பை பாதுகாக்கிற T செல்கள் உட்பட நோய் எதிர்ப்பு செல்களின் செயல்பாட்டை வைட்டமின் D மேம்படுத்துகிறது. எனவே விட்டமின் டி அதிகமுள்ள உணவு வகைகளை தொடர்ந்து எடுத்துக் கொள்வதோடு, சூரியக் கதிர்கள் உடலில் படுமாறு வெட்டவெளியி நடைபயிற்சி மேற்கொள்வது கோவிட் மூன்றாம் அலையில் இருந்து பாதுகாக்க உதவும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக