
இன்பினிக்ஸ்
நிறுவனம் விரைவில் தனது இன்பினிக்ஸ் Zero X Neo சாதனத்தை அறிமுகம்
செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த சாதனம் பட்ஜெட் விலையில்
அசத்தலான அம்சங்களுடன் வெளிவரும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்போது ஆன்லைனில்
கசிந்த இன்பினிக்ஸ் Zero X Neo சாதனத்தின் பல்வேறு அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.
இன்பினிக்ஸ் Zero X Neo சாதனம் ஆனது 4000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவுடன் வெளிவரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.பின்பு பாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான இன்பினிக்ஸ் Zero X Neo ஸ்மார்ட்போன். குறிப்பாக வேகமாக சார்ஜ் செய்யும் வசதியுடன் இந்த சாதனம் வெளிவருவதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. அதேசயம் இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.
இன்பினிக்ஸ் Zero X Neo மாடலில் மிகவும் எதிர்பார்த்த மீடியாடெக் ஹீலியோ ஜி90 சிப்செட் வசதி இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த புதிய சாதனம் வெளிவரும். குறிப்பாக இயக்கத்திற்கு அருமையாக இருக்கும் இன்பினிக்ஸ் Zero X Neo ஸ்மார்ட்போன்.
இன்பினிக்ஸ் Zero X Neo ஸ்மார்ட்போனின் மாடல் எண் X6810 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதியுடன் இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளிவரும். மேலும் இன்பினிக்ஸ் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த இன்பினிக்ஸ் ஹாட் 10 பிளே ஸ்மார்ட்போனின் அம்சங்களைப் பார்ப்போம்.
இன்பினிக்ஸ் ஹாட்10 பிளே ஸ்மார்ட்போன் ஆனது 6.82-இன்ச் எச்டி பிளஸ் ஐபிஎஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 720x1,640 பிக்சல் தீர்மானம், 20.5:9 என்ற திரைவிகிதம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது. இன்பினிக்ஸ் ஹாட்10 பிளே ஸ்மார்ட்போனில் மீடியாடெக் ஹீலியோ ஜி25 எஸ்ஒசி சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது. குறிப்பாக இன்பினிக்ஸ் ஹாட்10 பிளே ஸ்மார்ட்போனில் XOS 7.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இன்பினிக்ஸ் ஹாட்10 பிளே ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி பிரைமரி சென்சார் + ஏஐ லென்ஸ் என மொத்தம் இரண்டு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் 8எம்பி செல்பீ கேமரா, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்தஅசத்தலான ஸ்மார்ட்போன். இன்பினிக்ஸ் ஹாட்10 பிளே ஸ்மார்ட்போனில் 6000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் கைரேகை சென்சார் வசதி உட்பட பல்வேறு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். வைஃபை, 4 ஜி, புளூடூத், ஜி.பி.எஸ், 3.5 மிமீ ஆடியோ ஜாக், யூ.எஸ்.பி போர்ட் மற்றும் எஃப்.எம் ரேடியோ உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த இன்பினிக்ஸ் ஹாட்10 பிளே ஸ்மார்ட்போன்.
அதேபோல் விரைவில் வெளிவரும் இந்த இன்பினிக்ஸ் Zero X Neo மாடல் தனித்துவமான அம்சங்களுடன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது என்றுதான் கூறவேண்டும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக