Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

திங்கள், 2 ஆகஸ்ட், 2021

அதிக டேட்டா நன்மையை வழங்கும் ஏர்டெல் ரூ.448 ப்ரீபெய்ட் திட்டம்.! முழு விவரம்.!

 இந்நிறுவனத்தின் ரூ.448 ப்ரீபெய்ட்

ஏர்டெல் நிறுவனம் தொடர்ந்து சிறப்பான சலுகைகள் மற்றும் திட்டங்களை வழங்கி வருகிறது என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் ஒரு சில திட்டங்கள் மக்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது. அதாவது நாம் தரும் பணத்திற்கு தகுந்த நன்மைகளை வழங்குகிறது இந்நிறுவனம்.

அதன்படி இந்நிறுவனத்தின் ரூ.448 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது கிட்டத்தட்ட அனைத்து சலுகைகளையும் வழங்குகிறது என்றே கூறலாம்.
குறிப்பாக ஏர்டெல் ரூ.448 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது டிஸ்னி+ ஹாட்ஸ்டார் விஐபியின் OTT நன்மையை பயனர்களுக்குவழங்குவதற்காகவே அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு திட்டம்.

பின்பு இந்த ரூ.448 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி 3ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும். பின்பு வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைமற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் போன்ற நன்மைகளும் இந்த திட்டத்தில் உள்ளது. குறிப்பாக ஏர்டெல்லின் இந்த ரூ.448 ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும்.

சுருக்கமாக கூறவேண்டும் என்றால், ஏர்டெல் நிறுவனம் வழங்கும் ரூ.448 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது மொத்தமாக 84ஜிபி டேட்டா நன்மையை கொடுக்கிறது. அதாவது இந்த திட்டத்தின் ஒவ்வொரு ஜிபி டேட்டாவும் தோராயமாக ரூ 5.3 மட்டுமே செலவாகும். குறிப்பாக நாம் கொடுக்கும் பணத்திற்கு தகுந்த சிறந்த நன்மைகள் இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது.

ஆனாலும் சில நாட்களுக்கு முன்பாக வெளிவந்த தகவலின்படி, ஏர்டெல், வோடபோன் ஐடியா மற்றும் பி.எஸ்.என்.எல் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை இழந்துள்ளன என்று கூறப்படுகிறது. அதிலும் ஏர்டெல் நிறுவனம் மட்டுமே அதிக வாடிக்கையாளர்களை இழந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக கொரோனா ஊரடங்கு காலத்திலும் ஜியோ நிறுவனம் மட்டுமே புதிய வாடிக்கையாளர்களை சேர்த்து இருக்கிறது. வெளிவந்த தகவலின் அடிப்படையில், கடந்த மே வரையிலான காலகட்டத்தில் வயர்லெஸ் சந்தாதாரர் சந்தையில் ரிலையன்ஸ் ஜியோவின் பங்கு 36.15 சதவீதமாக இருக்கிறது. பின்பு ஜியோவின் மொத்த பயனர்களின் எண்ணிக்கை தற்போது 43.12 கோடியாக இருக்கிறது.

அதேசமயம் ஏர்டெல் நிறுவனம் சுமார் 46 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்துள்ளது. பின்பு வோடபோன் ஐடியா நிறுவனம் சுமார் 42 லட்சம், பிஎஸ்என்எல் நிறுவனம் 8.8 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்துள்ளன. குறிப்பாக இந்த விவரங்கள் அனைத்து டிராய் வெளியிட்டுள்ள அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.எனவே விரைவில் ஏர்டெல் நிறுவனம் பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது ஏர்டெல் நிறுவனம் தனது திட்டங்களில் கூடுதல் நன்மைகளை வழங்க வாய்ப்பு உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக