
சியோமி நிறுவனம் அதன் ரெட்மி 9 சி ஸ்மார்ட்போன் மாடலில் புதிய வேரியண்ட் மாடலை தற்பொழுது அறிமுகம் செய்துள்ளது. சியோமி ரெட்மி 9C போனில் தற்பொழுது நிறுவனம் 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் மாடலை மலேசிய ஸ்மார்ட்போன் சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. சியோமி நிறுவனம் இதற்கு முன்பு 2 ஜிபி மற்றும் 3 ஜிபி ரேம் வசதி கொண்ட 32 ஜிபி மற்றும் 64 ஜிபி வேரியண்ட் மாடல் வகைகளைக் கடந்த ஆண்டு மலேசியாவில் அறிமுகப்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
ரெட்மி 9 சி ஸ்மார்ட்போன்
தற்பொழுது புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள ரெட்மி 9 சி ஸ்மார்ட்போன் சாதனத்தின் 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ஆர்எம் விலை படி 499 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது இந்திய மதிப்பின் படி, தோராயமாக ரூ. 8,780 ஆக விலை இருக்கிறது. இந்த புதிய மாறுபாட்டு வேரியண்ட் வரும் ஆகஸ்ட் 3 ஆம் தேதி முதல் மலேசியச் சந்தையில் விற்பனைக்கு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது நீலம் மற்றும் ஆரஞ்சு நிறங்களில் வருகிறது.
Redmi 9c ஸ்மார்ட்போனின் சிறப்பம்சம்
Redmi 9c ஸ்மார்ட்போன் சாதனம் 6.53' இன்ச் உடன் 1600 x 720 பிக்சல்கள் கூடிய எச்டி பிளஸ் ஐபிஎஸ் டிஸ்பிளே உடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் 2.3GHz ஆக்டா கோர் மீடியா டேக் ஹீலியோ G35 செயலி மூலம் IMG PowerVR GE8320 GPU உடன் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் 2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள் சேமிப்பு உடன் வருகிறது. இது மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் வழியாக 512 ஜிபி வரை விரிவாக்கப்படலாம். 5,000 எம்ஏஎச் பேட்டரியை ஆதரிக்கிறது.
கேமரா அம்சம்
இது கைரேகை சென்சார், ஐஆர் பிளாஸ்டர், யூஎஸ்பி டைப்-சி போர்ட் மற்றும் வேகமான சார்ஜிங் ஆதரவைக் கொண்டுள்ளது. கேமராவை பொறுத்த வரை 13 மெகாபிக்சல் பின்புற கேமராவுடன் எல்இடி ஃபிளாஷ், 5 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸ் மற்றும் 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் கொண்ட மூன்று கேமரா அமைப்பு கொண்டுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக