
எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் வலிமை (Valimai). இந்த படத்தை போனி கபூர் தயாரித்து வருகிறார். மேலும் இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராக நீரவ் ஷா, இசையமைப்பாளராக யுவன் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.
அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷியும், வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயாவும் நடிக்கின்றனர். வலிமை (Valimai) படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு முடிந்துவிட்டது. கொரோனா ஊரடங்கு காரணமாக வலிமை திரைப்படத்தின் படப்பிடிப்பு முடங்கி இருந்த நிலையில் ஐதராபாத்தில் இணைப்புக் காட்சிகளுக்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
ஏறக்குறைய இரண்டு வருடங்களாக இந்த படம் பற்றி எந்தவித தகவலும் வெளியிடாமல் இருந்து வந்த படக்குழு சமீபத்தில் இந்த படத்தின் மோஷன் போஸ்டர் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஆகியவற்றை ரிலீஸ் செய்தது. இதற்கிடையில் வலிமை படத்தின் பாடல்கள் விரைவில் ரிலீஸ் ஆகும் என யுவன் சங்கர் ராஜா சமீபத்தில் தெரிவித்து இருந்த நிலையில் இன்று இரவு 10 மணிக்கு வலிமை படத்தின் முதல் பாடல் வெளியிடப்பட உள்ளதாக தகவல் வெளியானது.
ThalaAjith eagerly awaited #Valimai first single from @thisisysr releasing tonight, expecting to set social media on fire! pic.twitter.com/kxoCwGwJFh
— RK SURESH (@studio9_suresh) August 2, 2021
மேலும் வலிமை படத்தின் டீஸரை வரும் ஆகஸ்ட் 15ம் தேதி வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும், இது குறித்த முறையான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் படக்குழுவினர்களிடம் இருந்து தகவல் கசிந்துள்ளது. அத்துடன் இந்த படம் செப்டம்பர் அல்லது அக்டோபரில் அதாவது தீபாவளிக்கு முன்பே ரிலீஸ் ஆகும் என தகவல் பரவி வருகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக