
ரிலையன்ஸ் ஜியோ ஜியோபோன் பயனர்களுக்கு பிரத்யேகமாக ஒரு பெரிய சலுகையை வழங்குகிறது. நிறுவனம் அனைத்து ஜியோபோன் திட்டங்களுடனும் ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என அறிவித்துள்ளது. இதன் பொருள் நீங்கள் ஜியோ போன் பயனர்களாக இருந்தால் அனைத்து திட்டங்களிலும் இரட்டிப்பு நன்மைகளை பெறுவீர்கள். இந்த நிறுவனம் இந்தியாவில் உள்ள 2ஜி பயனர்களின் பெரும் பகுதியை 4ஜி நெட்வொர்க்கிற்கு கொண்டு வர ஜியோபோனை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய சலுகையின் மூலம் வாடிக்கையாளர்கள் ரீசார்ஜ் திட்டத்தின் இரட்டிப்பு நன்மைகளை பெறுவார்கள்.
குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே சலுகை
இந்த சலுகையானது குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே கிடைக்கும். ஜியோபோன் ஆறு ப்ரீபெய்ட் திட்டங்களில் பை ஒன் கெட் ஒன் சலுகையை நிறுவனம் வழங்குகிறது. அதாவது ரூ.75 திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் கூடுதலாக ரூ.75 திட்டத்தை முற்றிலும் இலவசமாக பெறலாம்.
Buy One Get One சலுகை
ஜியோபோனானது ரூ.39, ரூ.69, ரூ.75, ரூ.125, ரூ.155 மற்றும் ரூ.185 ரீசார்ஜ் திட்டங்களில் பை ஒன் சலுகை கிடைக்கும். ரூ.39 ரீசார்ஜ் திட்டத்தில் பயனர்களுக்கு வரம்பற்ற குரலழைப்பு சலுகையை வழங்குகிறது. இந்த திட்டம் தினசரி 100 எம்பி டேட்டாவுடன் 14 நாட்கள் செல்லுபடியாகும். இந்த திட்டத்தில் தங்களுக்கு இலவச எஸ்எம்எஸ் பலன் கிடைக்காது. இந்த திட்டத்தில் நீங்கள் ரீசார்ஜ் செய்யும் போது Buy One Get One சலுகையின் மூலம் மொத்தம் 200 எம்பி டேட்டா கிடைக்கும்.
ரூ.69 ப்ரீபெய்ட் திட்டம்
ரூ.69 ப்ரீபெய்ட் திட்டம் வரம்பற்ற குரல் அழைப்பை வழங்குகிறது. இந்த திட்டம் தினசரி 0.5 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டம் மொத்தம் 14 நாட்களுக்கு செல்லுபடியாகும். இந்த திட்டத்தில் இலவச எஸ்எம்எஸ் சலுகை இல்லை. இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் போது உங்களுக்கு ஒரு நாளைக்கு 1 ஜிபி டேட்டா வழங்குகிறது. இந்த சலுகை திட்டமானது ரூ.69 என்ற விலையில் கிடைக்கும் சிறந்த திட்டமாகும்.
ரூ.75 ப்ரீபெய்ட் திட்டம்
ரூ.75 ப்ரீபெய்ட் திட்டம் பயனர்களுக்கு வரம்பற்ற குரலழைப்பு மற்றும் 3 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டமானது 28 நாட்கள் செல்லுபடியாகும் என்பது குறிப்பிடத்தக்கது. புதிய சலுகையின் மூலம் பயனர்கள் இந்த திட்டத்தில் 6 ஜிபி டேட்டாவை பெறுவார்கள். ரூ.125 ப்ரீபெய்ட் திட்டம் வரம்பற்ற குரலழைப்பு தினசரி 0.5 ஜிபி டேட்டா மற்றும் 25 நாட்கள் செல்லுபடியாகும். இந்த திட்டத்தில் தற்போது ஒரு நாளைக்கு 1 ஜிபி டேட்டாவை வழங்குகிறது.
ரூ.155 ப்ரீபெய்ட் திட்டம்
ரூ.155 ப்ரீபெய்ட் திட்டம் பயனர்களுக்கு வரம்பற்ற குரல் அழைப்பை வழங்குகிறது. இந்த திட்டம் தினசரி 1 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டம் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும். இந்த திட்டத்தை நீங்கள் தேர்ந்தெடுத்தால் ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டா வழங்குகிறது. ரூ.185 ப்ரீபெய்ட் திட்டம் வரம்பற்ற குரலழைப்பு, தினசரி 2 ஜிபி டேட்டா மற்றும் 28 நாட்கள் செல்லுபடி சலுகையோடு வருகிறது. சலுகையின் ஒரு பகுதியாக இந்த திட்டம் ஒரு நாளைக்கு 4 ஜிபி டேட்டா வழங்குகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக