Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

திங்கள், 2 ஆகஸ்ட், 2021

பிரதமர் மோடி அறிமுகப்படுத்தும் e-RUPI பரிவர்த்தனை வசதியின் சிறப்பு அம்சங்கள்

பிரதமர் மோடி தலைமையிலான அரசு பல்வேறு வகையான டிஜிட்டல் திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகின்றது.

அந்த வகையில் தற்போது டிஜிட்டல் கட்டணத் துறையில் மற்றொரு மிகப்பெரிய முயற்சியை கையில் எடுத்துள்ளது.

இந்த டிஜிட்டல் முயற்சியை பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை 4 மணிக்கு வீடியோ கான்பரன்சிங் மூலம் மின் வவுச்சர் அடிப்படையிலான, இந்த டிஜிட்டல் கட்டண முறையான e-Ruby என்னும் வசதியை அறிமுகப்படுத்துகிறார்.

இ- ருபி என்றால் என்ன?

இ- ருபி என்றால் என்ன? இதன் பயன் என்ன? இதில் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள் என்னென்ன வாருங்கள் பார்க்கலாம். இ-ருபி என்பது கேஷ்லெஸ் மற்றும் காண்டாக்ட்லெஸ் டிஜிட்டல் பேமெண்ட் பரிவர்த்தனை முறையாகும். இது கியூஆர் (QR) குறியீடு அல்லது SMS ஸ்ட்ரிங் அடிப்படையிலான இ-வவுச்சர் ஆகும். இது பயனாளிகளின் மொபைலுக்கு அனுப்பப்படுகிறது.

இதெல்லாம் அவசியமில்லை

இதில் கவனிக்கதக்க விஷயம் என்னவெனில், இந்த டிஜிட்டல் பரிவர்த்தனை முறையை பயன்படுத்துபவர்கள், டெபிட் கார்டு அல்லது கிரெடிட் கார்டு அல்லது இணைய வங்கி ஆகியவற்றை பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை. இந்த டிஜிட்டல் சேவையானது பயனாளிகள் மற்றும் சேவை வழங்குனர்களுடன் சேவை பெறுபவர்களை டிஜிட்டல் எவ்வித இடைத்தரகரும் இல்லாமல் இணைக்கிறது.

என்னென்ன பயன்

பல சமூக நலத் திட்டங்களில் இ-ருபி தளத்தினை பயன்படுத்தலாம். குறிப்பாக அரசின் ஆயுஷ்மான் பாரத், பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா, தாய் மற்றும் குழந்தைகள் நலத் திட்டங்கள், உர மானியம், காசநோய் ஒழிப்பு திட்டங்கள், மருந்துகள் மற்றும் நோயறிதல்கள் மற்றும் ஊட்டச்சத்து அதிகரித்தல் தொடர்பான சேவைகளை வழங்கவும் இந்த டிஜிட்டல் திட்டம் உதவும்.

இதன் நோக்கம் என்ன?

இதே தனியார் துறையில் நிறுவனங்கள் தங்கள் ஊழியர் நலன் மற்றும் பெருநிறுவன சமூக பொறுப்புணர்வு திட்டங்களின் ஒரு பகுதியாகப் பயன்படுத்தலாம்.

டிஜிட்டல் கட்டணத் தீர்வு e-RUPI ஐத் தொடங்குவதன் முக்கிய நோக்கம் ஆன்லைன் கட்டண முறைய எளிதாகவும் பாதுகாப்பாகவும் மாற்றுவதும் ஆகும்.

யார் உருவாக்கம்

இந்திய தேசிய கொடுப்பனவு நிறுவனம் (NPCI), நிதி சேவைகள் துறை, சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் மற்றும் தேசிய சுகாதார ஆணையம் ஆகியவற்றுடன் இணைந்து இந்த தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

இதில், எஸ்பிஐ வங்கி, ஐசிஐசிஐ, கனரா வங்கி, உள்ளிட்ட பல வங்கிகள் இணைந்துள்ளன. இது யுபிஐ, பீம் செயலி போல இ-ருபி பரிவர்த்தனை முறையும், அதிக வரவேற்பை பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது

முக்கிய 10 அம்சங்கள்

1.இ-ருபி என்பது கேஷ்லெஸ் மற்றும் காண்டாக்ட்லெஸ் டிஜிட்டல் பேமெண்ட் முறையாகும்.

2.இந்த டிஜிட்டல் சேவையானது பயனாளிகள் மற்றும் சேவை வழங்குனர்களுடன் சேவை பெறுபவர்களை டிஜிட்டல் முறையில் இணைக்கிறது.

3.பல சமூக நலத் திட்டங்களில் இ-ருபி தளத்தினை பயன்படுத்தலாம்.

4.இது கியூஆர் (QR) குறியீடு அல்லது SMS ஸ்ட்ரிங் அடிப்படையிலான இ- வவுச்சர் ஆகும். இது பயனாளிகளின் மொபைலுக்கு அனுப்பப்படுகிறது.

5. இ-ருபி பரிவர்த்தனை முறையை பயன்படுத்துபவர்கள், டெபிட் கார்டு அல்லது கிரெடிட் கார்டு அல்லது இணைய வங்கி ஆகியவற்றை பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை.

6. இந்த டிஜிட்டல் சேவையானது பயனாளிகள் மற்றும் சேவை வழங்குனர்களுடன் சேவை பெறுபவர்களை டிஜிட்டல் எவ்வித இடைத்தரகரும் இல்லாமல் இணைக்கிறது.

7. இந்த டிஜிட்டல் சேவையில் பரிவர்த்தனை முடிந்த பின்னரே சேவை வழங்குநருக்கு பணம் செலுத்துவதை உறுதி செய்கிறது.

8. எந்த இடைத்தரகரும் ஈடுபடாமல் சரியான நேரத்தில் சேவை வழங்குநருக்கு பணம் சென்றடைகிறது.

9. வழக்கமான பேமெண்ட் சேவை முறைகளை தவிர, இந்த இ-ருபி திட்டமானது அரசின் ஆயுஷ்மான் பாரத், பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா, தாய் மற்றும் குழந்தைகள் நலத் திட்டங்கள், உர மானியம், காசநோய் ஒழிப்பு திட்டங்கள், மருந்துகள் மற்றும் நோயறிதல்கள் மற்றும் ஊட்டச்சத்து அதிகரித்தல் தொடர்பான சேவைகளை வழங்கவும் உதவும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

10. இந்த டிஜிட்டல் வவுச்சர்களை தனியார் நிறுவனங்கள் அதன் ஊழியர்களின் நலனுக்காக பயன்படுத்தலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக