
பிரபல வீடியோ கான்பிரன்சிங் தளமான கூகுள் மீட் தனது இணையதள செயலியை அறிமுகம் செய்துள்ளது. இந்த மொபைலில் உள்ள பயன்பாட்டின் மூலம் கிடைக்கும். அனைத்து அம்சங்களும் இதில் உள்ளன. இதன்மூலம் இனி இணையத்திற்கான பயன்பாடாக இது மாறுகிறது. ஒரு யூஆர்எல்லை டைப் செய்யவோ அல்லது ஜிமெயிலுக்கு சென்று கூகுள் மீட்டை தேர்வு செய்யவோ தேவையில்லை. இனி லேப்டாப், கணினி அல்லது மேக்புக் ஆகியவற்றில் நீங்கள் பயன்பாட்டை பதிவிறக்கம் செய்யலாம். இதேபோன்ற பயன்பாட்டை ஜூம் அறிவித்த சில வாரங்களில் கூகுள் மீட் அறிவித்துள்ளது.
கூகுள் மீட் வலை பயன்பாடு
கூகுள் மீட் வலை பயன்பாட்டிற்கு வரும் என்றாலும் அதன் செயல்பாட்டில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் இருக்காது என கூகுள் தெளிவுப்படுத்தியுள்ளது. மடிக்கணினி அல்லது கணினியில் கூகுள் மீட் செயலியை பதிவிறக்கம் செய்தால் மீட்டிங்கை தொடங்க நீங்கள் தனி கூகுள் மீட் உலாவியை திறக்க வேண்டியதில்லை. இந்த ஆப் உங்கள் பதிவிறக்க பயன்பாட்டில் இருக்கும்போது நீங்கள் நேரடியாக ஸ்மார்ட்போனை ஓபன் செய்து இந்த பயன்பாட்டைத் தொடங்கலாம்.
கூகுள் குரோம் பிரவுசர் பதிப்பு
ஆபரேட்டிங் சிஸ்டம் பதிப்பை பொருட்படுத்தாமல் கூகுள் குரோம் பிரவுசர் பதிப்பு 73 மற்றும் அதற்கு மேல் இயங்கும் அனைத்து சிஸ்டத்திலும் கூகுள் மீட் வெப் ஆப் இயங்குகிறது. இந்த பயன்பாடானது விண்டோஸ், மேக் ஓஎஸ், குரோம் ஓஎஸ் மற்றும் லினிக்ஸ் ஓஎஸ் இயங்கும் சாதனங்களில் இந்த கூகுள் மீட் பயன்பாட்டை இயக்க முடியும். இது குரோம்புக் பயனர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என கூறப்படுகிறது.
கூகுள் பாப்-அப் வசதி
குரோம் உலாவியில் இருந்து இணைய பயன்பாட்டை பதிவிறக்கம் செய்து நிறுவலாம். கூகுள் மீட் வலை பயன்பாட்டை பயன்படுத்த கூகுள் பாப்-அப்களை காண்பிக்கும். கூகுள் மீட்டின் புதிய வலை பயன்பாடு கூகுள் மீட் போன்ற அனைத்து அம்சங்களையும் கொண்டிருக்கும். இது ஒரு தனிமைப்படுத்தப்பட்ட பயன்பாடாகும். கூகுள் மீட் பயன்பாட்டில் மேல் வலது மூலையில் கூகுள் மீட் வலை பயன்பாட்டை பயன்படுத்துமாறு கூகுள் பாப்-அப்களை காண்பிக்கும். இந்த செயலி விரைவில் பொதுமக்களுக்கு வெளியிடப்படும் என கூகுள் அறிவித்துள்ளது. சிலநாட்களில் இதை பதிவிறக்கம் செய்யலாம்.
கூகுளின் வீடியோ கான்பரன்சிங் சேவை
கூகுளின் வீடியோ கான்பரன்சிங் சேவையான கூகுள் மீட் இதுவரை வழங்கி வந்த வரம்பற்ற இலவச சேவையை நிறுத்துவதாக தெரிவித்துள்ளது. எனவே இதன் மூலம் கூகுள் மீட் சேவையை 60 நிமிடங்கள் கடந்து பயன்படுத்த முடியாது என சமீபத்தில் தெரிவிக்கப்பட்டது.
பிரதானமாக இருக்கும் கூகுள் மீட்
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கொரோனா தொற்று உச்சம் அடைந்ததால் இந்த கூகுள் மீட் க்ரூப் மீட்டிங் சேவைஇலவசமாக வழங்கப்பட்டது. அதுவும் வீட்டில் இருந்து வேலை செய்யும் பல்வேறு மக்களுக்கு இது மிகவும் உதவியாக இருந்தது என்றே கூறலாம். கூகுள் சேவையை போலவே ஜூம் சேவையிலும் பயனர்களுக்கு இலவச சேவை வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக