
கூகுள் நிறுவனம் தனது புதிய கூகுள் பிக்சல் 5ஏ ஸ்மார்ட்போன் மாடலை ஆக்ஸ்ட் 26-ம் தேதி அறிமுகம் செய்யும் எனத் தகவல் வெளிவந்துள்ளது. குறிப்பாக தனித்துவமான மென்பொருள் வசதியுடன் இந்த சாதனம் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.
கூகுள் பிக்சல் 5ஏ சாதனம் ஆனது அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஆகிய சந்தைகளில் மட்டுமே முதலில் அறிமுகம் செய்யப்படும் என்றும், அதன்பின்பு தான் மற்ற சாந்தைகளில் அறிமுகம் செய்யப்படும் என் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த சாதனத்தின் விலை பற்றிய தகவலும் வெளிவந்துள்ளது. அதன்படி கூகுள் பிக்சல் 5ஏ சாதனத்தின் விலை (இந்திய மதிப்பில்) ரூ.33,339-ஆக உள்ளது.
ஏற்கனவே வெளிவந்த தகவலின் அடிப்படையில், கூகுள் பிக்சல் 5ஏ சாதனம் ஆனது 6.4-இன்ச் ஒஎல்இடி டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 1080 பிக்சல் தீர்மானம் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் ஆதரவுடன் இந்த கூகுள் பிக்சல் 5ஏ ஸ்மார்ட்போன் வெளிவரும். குறிப்பாக இதன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.
கூகுள்
பிக்சல் 5ஏ ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட குவால்காம்
ஸ்னாப்டிராகன் 765ஜி சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது. எனவே இயக்கத்திற்கு
மிகவும் அருமையாக இருக்கும். மேலும் கேமிங் உட்பட பல்வேறு அம்சங்களுக்கு
தகுந்தபடி இந்த சாதனம் உருவாக்கப்பட்டுள்ளதாக
அந்நிறுவனம் சார்பில்
தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த சாதனம் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை
அடிப்படையாக கொண்டு வெளிவரும் என்றும், அதன்பின்பு ஆண்ட்ராய்டு 12 அப்டேட்
வழங்கப்படும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூகுள் பிக்சல் 5ஏ ஸ்மார்ட்போனில் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய கூகுள் பிக்சல் 5ஏ மேம்படுத்தப்பட்ட கேமரா வசதி இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இந்த சாதனத்தின் பின்புறம் டூயல் கேமரா வசதி இருப்பதாக அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே அட்டகாசமான செல்பீ கேமரா இவற்றுள் இடம்பெற்றுள்ளது. இதுதவிர பல்வேறு சிறப்பான அம்சங்களும் இந்த ஸ்மார்ட்போன்கேமராவில் உள்ளதாக கூகுள் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
3.5 மிமீ ஆடியோ ஜாக், பின்புற கைரேகை சென்சார், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்,டூயல்-பேண்ட் வைஃபை 6, புளூடூத் 5.1, ஜிபிஎஸ் மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த கூகுள் பிக்சல் 5ஏ ஸ்மார்ட்போன் மாடல்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக