Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

வெள்ளி, 13 ஆகஸ்ட், 2021

இது டம்மி பாபுஜி- பிளிப்கார்ட்டில் கேமரா ஆர்டர் செய்த இளைஞர்: திறந்து பார்த்ததும் காத்திருந்த அதிர்ச்சி!

300-டி கேமரா ஆர்டர்ஆன்லைன் ஆர்டர் வழக்கம் மக்களிடையே அதிகரித்துக் கொண்டே வருகிறது. மளிகை பொருட்களில் தொடங்கி, மருந்து, உணவு, உடை, கேட்ஜெட் பொருட்கள் உட்பட அனைத்தும் ஆன்லைனில் கிடைக்கிறது. குறிப்பாக இந்த கொரோனா காலத்தில் ஆன்லைன் ஆர்டர் தேவை அதிகரிதுள்ளது என்றே கூறலாம்.
ஆன்லைன் ஷாப்பிங் முறை

கொரோனா காலத்தில் ஆன்லைன் ஷாப்பிங் முறை என்பது சற்று கூடுதலாகவே அதிகரித்துள்ளது. கொரோனா தொற்று பரவல் அச்சுறுத்தல் காரணமாக மக்கள் நேரில் சென்று ஷாப்பிங் செய்ய தயங்கி வருகின்றனர். இதையடுத்து ஆன்லைன் ஷாப்பிங் வழியாக பொருட்களை வாங்கவே ஆர்வம் காண்பித்து வருகின்றனர். கூடுதலாக ஆன்லைனில் சலுகைகளும் வழங்கப்படுகிறது.

300-டி கேமரா ஆர்டர்

சென்னை திருவொற்றியூர் சத்தியமூர்த்தி நகர் பகுதியை சேர்ந்தவர் வினோத். இவர் சமீபத்தில் பிளிப்கார்ட்டில் நடைபெற்ற ஆஃபர் மூலம் கேனான் 300-டி கேமராவை ஆர்டர் செய்துள்ளார். இந்த கேமராவின் அசல் விலை ரூ.28,500 ஆகும் ஆஃபர் தின சலுகையில் இந்த கேமராவை இவர் ரூ.26,500 என ஆர்டர் செய்துள்ளார். இந்த கேமராவை கோடக் மஹேந்திரா வங்கி மூலம் 12 மாத தவணை முறையில் ஆர்டர் செய்திருக்கிறார்.

பிரித்து பார்த்தபோது காத்திருந்த அதிர்ச்சி

இந்த நிலையில் கேமரா பார்சல் டெலிவரி வந்துள்ளது. தான் ஆர்டர் செய்த கேமரா வந்துவிட்டது என்ற ஆசையாக திறந்து பார்த்துள்ளார். அதில் கேனான் கேமரா சீல் செய்யப்பட்ட பார்சல் இருந்திருக்கிறது. அதை பிரித்து பார்த்தபோது ஒரு பழைய பொம்மை கேமரா மற்றும் பெயிண்ட் டப்பா ஒன்றும் இருந்துள்ளது.

மக்கள் விழிப்புணர்வுடன் இருக்கும்படி அறிவுறுத்தல்

இதனால் அதிர்ந்து போன வினோத், நிறுவனத்தை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அதில் அவருக்கு தகுந்த பதில் கிடைக்கவில்லை. இதையடுத்து வினோத், இந்த நிகழ்வு குறித்து புதுவண்ணார்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து விசாரணை நடத்திவரும் காவல்துறையினர் ஆன்லைனில் இதுபோன்ற மோசடி செயல் தொடர்ந்து நடைபெறுவதால் மக்கள் விழிப்புணர்வுடன் இருக்கும்படி அறிவுறுத்தியுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக