Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

செவ்வாய், 10 ஆகஸ்ட், 2021

பெகாசஸ் ஸ்பைவேர் உங்கள் சாதனத்தில் இருக்கிறதா?-இது இருந்தா எளிதாக கண்டுபிடிக்கலாம்!

 இலவச கருவியை பயன்படுத்தி கண்டறியலாம்

ஐபோனில் இருக்கும் பெகாசஸ் ஸ்பைவேரை செயலி மூலம் கண்டறியலாம். IMazing 2.14-ன் ஒருபகுதியாக ஸ்பைவேர் கண்டறிதல் அம்சம் கிடைக்கிறது.

இலவச கருவியை பயன்படுத்தி கண்டறியலாம்

பெகாசஸ் ஸ்பைவேரை தற்போது ஐபோனில் இலவச கருவியை பயன்படுத்தி குறியீட்டுத் திறன்கள் தேவையின்றி கண்டறியலாம். ஜெனீவா, ஸ்விட்சர்லாந்தை தளமாகக் கொண்ட டிஜிடிஎன்ஏ தனது ஐஓஎஸ் சாதன மேலாளர் iMazing-ஐ ஸ்பைவேர் கண்டறிதள் அம்சத்துடன் பெகாசஸை கண்டறிய உதவுகிறது. இந்த அம்சமானது அம்னஸ்டியின் மொபைல் சரிபார்ப்பு கருவித்தொகுப்பை பயன்படுத்தி வடிவமைக்கப்பட்டுள்ளது. பெகாசஸ் ஸ்பைவேர் மூலம் உங்கள் ஐபோன் தாக்கப்பட்டுள்ளதா என்பதை கண்டறிய இது உதவும்.

ஸ்பைவேர் தங்களை கண்காணிக்கிறதா?

பெகாசஸ் ஸ்பைவேர் பயன்படுத்தி முக்கியப் புள்ளிகள் மட்டும் கண்காணிக்கப்பட்டு வருகிறது என தகவல்கள் கூறும்நிலையில் சாதாரண மக்களை கண்காணிக்கப்படுவது என்பது மிகக் குறைவு என்றாலும் பெகாசஸ் ஸ்பைவேர் தங்களை கண்காணிக்கப்படுகிறதா என்பதை உறுதி செய்து கொள்வது அவசியம். உங்கள் கணினியிலும் iMazing-ஐ பயன்படுத்தலாம். அதேபோல் மேக் அல்லது விண்டோஸ் கணினியிலும் iMazing இணையதள கருவியை இலவசமாக பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்.

ஆண்ட்ராய்டு சாதனங்களுக்கு கிடைக்கவில்லை

டிஜிடிஎன்ஏ தலைமை நிர்வாக அதிகாரி கிரிகோரியோ ஜானன் பதிவிட்ட பதிவில், ஸ்பைவேர் கண்டறிதல் அம்சம் எம்விடியின் முறையை அடிப்படையாகக் கொண்டது.

IMazing-ன் சலுகை குறிப்பாக ஐஓஎஸ் அடிப்படையிலான சாதனங்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த சாதனம் ஆண்ட்ராய்டு சாதனங்களுக்கு கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஃப்ரீமியமாக கிடைக்கும் மென்பொருள்

IMazing பயன்பாடு இலவசமாக கிடைத்தாலும், மென்பொருள் ஃப்ரீமியமாகவே கிடைக்கிறது. மென்பொருள் ஃப்ரீமியம் ஆக கிடைக்கிறது. அனைத்து அம்சங்களையும் பயன்படுத்த ப்ரீமியம் கட்டணம் செலுத்த வேண்டும்.

iMazing 2.14 நிறுவியவுடன் பெகாசஸ் ஸ்பைவேரை கண்டறிய இ-கேபிளுடன் உங்கள் ஐபோனை கணினியுடன் இணைக்கவும். வலது புறத்தில் இலவச சோதனை என்ற தேர்வை கிளிக் செய்யவும். அதை ஸ்க்ரால் செய்து ஸ்பைவேரை கண்டறியவும் என்ற தேர்வை கிளிக் செய்யவும். இதன்மூலம் ஸ்பைவேர் பயன்பாட்டை கண்டறியலாம்.

அதிகாரப்பூர்வமாக எடுக்கப்பட்ட முதல் நடவடிக்கை

உலக நாடுகளில் பல்வேறு அரசியல் தலைவர்கள் இதில் சிக்கி உள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், அதிகாரப்பூர்வமாக எடுக்கப்பட்ட முதல் நடவடிக்கையாக இது இருக்கிறது. பெகாசஸ் உளவு சாஃப்ட்வேர் என்பது சமீபத்தில் பேசுபொருளாக மாறி வருகிறது. தற்போது பெகாசஸ் சாஃப்ட்வேர் மூலம் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானின் செல்போன் எண்ணும் வேவு பார்க்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த எண்களை நாங்கள் கண்டறிந்தோம் ஆனால் இம்மானுவேல் மேக்ரானின் தொலைபேசியின் தொழில்நுட்ப பகுப்பாய்வை எங்களால் மேற்கொள்ள முடியவில்லை என லாரன்ட் ரிச்சர்ட் தெரிவித்தார்.

தொடர்ந்து புகார்கள்

பெகாசஸ் சாஃப்ட்வேர் மூலம் வேவுபார்க்கப்பட்டதாக உலகம் முழுவதும் சர்ச்சைகள் எழுந்து வருகிறது. இந்த விவகாரத்தில் தினந்தோறும் புதுப்புது தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்து வருகிறது. அதன்படி தற்போது பிரான்ஸ் நாட்டு அதிபர் இமானுவேல் மேக்ரானின் செல்போன் எண்ணும் உளவு பார்க்கப்பட்டதாக புகார்கள் எழுந்தது. இந்தியாவில் பெகாசஸ் ஸ்பைவேர் குறித்த விவகாரம் பூதாகரமாக உருவெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

PEGASUS என்ற சாஃப்ட்வேர்

இஸ்ரேலை தளமாகக் கொண்ட என்எஸ்ஓ நிறுவனத்தின் PEGASUS என்ற சாஃப்ட்வேரை பயன்படுத்தி ஏணைய நாடுகளை சேர்ந்த முக்கிய புள்ளிகளின் செல்போன் புகைப்படங்கள், உரையாடல்கள், பகிர்வு என அனைத்து நடவடிக்கைகளும் கண்காணிக்கப்படுவதாக புகார்கள் எழுந்தது. இதில் பத்திரிக்கையாளர்கள், அரசியல் தலைவர்கள் என பலர் இருக்கலாம் என கருதப்பட்டது.

50,000-த்துக்கும் மேற்பட்ட மொபைல் எண்கள்

இஸ்ரேல் நாட்டின் என்எஸ்ஓ நிறுவனத்திடம் உளவு பார்ப்பதற்காக சுமார் 50,000-த்துக்கும் மேற்பட்ட மொபைல் எண்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. என்எஸ்ஓ நிறுவனம் என்பது ஹேக்கர்களை மையமாக கொண்டு செயல்படும் அமைப்பாகும். இதில் 50 நாடுகளை சேர்ந்த 1000-த்துக்கும் மேற்பட்ட நபர்களை அடையாளம் காண முடிந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக