
ரயில் பயணிகளின் பயணத்தை மேம்படுத்த இந்திய ரயில்வே துறை ஏராளமான பல புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதில் ஒரு தனித்துவமான புதிய முயற்சி தான் 'வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்' திட்டம். சொகுசு விமானத்திற்கு நிகரான பல புதிய அதிநவீன அம்சங்களை இந்த சொகுசு ரயிலில் இந்திய ரயில்வே துறை அறிமுகம் செய்யவிருக்கிறது. இதில் உள்ள அம்சங்களைப் பற்றித் தெரிந்தால் நீங்களே திகைத்துப்போவீர்கள்.
புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலில் புதிய வசதிகள்
இந்திய ரயில்வே தனது முதல் மேம்படுத்தப்பட்ட வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை வரும் 2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகப்படுத்த உள்ளது. புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலில் புதிய வசதிகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய ஏராளமான வசதிகள் கொண்ட மேம்படுத்தப்பட்ட சிறப்பு அம்சங்களுடன் வெளிவரும் என்று இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது. பயனர்களின் சிறந்த அனுபவத்திற்காக இன்னும் சில அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக சமீபத்திய அறிவிப்பு அறிவித்துள்ளது.
பயணிகளுக்காக புதிய பாதுகாப்பு அம்சங்கள்
வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் திட்டம் சமீபத்தில் மாற்றியமைக்கப்பட்டது என்று செய்திகள் வெளியாகியுள்ளது. இதில் பயணிகளின் வசதி மற்றும் பாதுகாப்பு அடிப்படையில் சில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் குறிப்பாக புதிய ரயிலில் பல புதிய பாதுகாப்பு அம்சங்கள் சேர்க்கப்படும் என்று வெளியான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சொகுசு ரயிலின் "முதல் முன்மாதிரி ரேக் மார்ச் 2022 இல் அனுப்பத் திட்டமிடப்பட்டுள்ளது. இது ஜூன் 2022 ஆண்டிற்குள் வணிக சேவைக்கு விடப்படும்" என்று கூறப்பட்டுள்ளது.
வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலில் அறிமுகமாகும் அதிநவீன சிறப்பம்சங்கள் என்னென்ன தெரியுமா?
பாக்டீரியா இல்லாத ஆன்டி-பாக்டீரியல் ஏர் கண்டிஷனிங் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது.
காலநிலை கட்டுப்பாட்டிற்கான மையப்படுத்தப்பட்ட கோச் கண்காணிப்பு அமைப்பு வழங்கப்பட்டுள்ளது.
ரயில் பெட்டியின் அனைத்து மின் மற்றும் முக்கிய அமைப்புகளையும் கண்காணிக்கத் தனி அமைப்பு.
அவசரக் காலத்திலும் பயணிகளை எளிதாக வெளியேற்றுவதற்காக ஒரே பெட்டியில் நான்கு அவசர ஜன்னல்கள் வழங்கப்பட்டுள்ளது.
குறிப்பாக மழைக்காலங்களில் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக புதிய தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
அண்டர்ஃப்ரேம் கருவிகளின் உதவியுடன் சிறந்த வெள்ளப் பாதுகாப்பு அம்சம் வழங்கப்பட்டுள்ளது.
ரயில் பெட்டியின் அனைத்து விளக்குகளும் செயலிழந்தால் ஒவ்வொரு கோச்சிலும் நான்கு அவசரக் கால விளக்குகள் ஒளிரும் அம்சம் கொடுக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு கோச்சிலும் இரண்டு அவசர புஷ் பட்டன்களுக்கு பதிலாக தற்போது நான்கு புஷ் பட்டன் அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
சொகுசு ரயிலில் இத்தனை அம்சங்களா?
ஒவ்வொரு கோச்சிலும் இரண்டு அவசர புஷ் பட்டன்களுக்கு பதிலாக தற்போது நான்கு புஷ் பட்டன் அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
கதவு சுற்றுகளில் நெருப்பு கட்டுப்பாட்டுடன் இயங்கும் கேபிள்களின் பயன்பாடு வழங்கப்பட்டுள்ளது.
இன்னும் ஏரளமான பல புதிய அம்சங்களும் இந்த சொகுசு ரயிலில் சேர்க்கப்பட்டுளள்து இன்றி இந்திய ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
வந்தே பாரத் எக்ஸ்பிஸ் ரயில் முதன்முதலில் தயாரிக்கப்பட்ட ஆண்டிற்குப் பிறகு ரயில் 18 என்றும் அழைக்கப்படுகிறது. இது ஒரு சுய இயக்கப்படும் ரயில் தொகுப்பாகும். அனைத்து ரயில் பெட்டிகளும் குளிரூட்டப்பட்ட நாற்காலி கார் சேவையை கொண்டுள்ளது. இன்னும் பயனர்களுக்குத் தேவையான பல அதிநவீன சிறப்பான அம்சங்களையும் கொண்டுள்ளது. ஒவ்வொரு கோச்சுகளுக்கும் தானியங்கி படிக்கட்டுகளுடன் கூடிய ஸ்மார்ட் கதவுகள் கொடுக்கப்பட்டுள்ளது.
சிறப்பு வகுப்பில் சுழலும் சொகுசு இருக்கைகளா?
ஐரோப்பிய பாணி சொகுசு இருக்கைகள், சிறப்பு வகுப்பில் சுழலும் சொகுசு இருக்கைகள், தனிப்பயனாக்கப்பட்ட ரீடிங் லைட்கள், பயணிகளின் சாமான்கள் வைக்க கண்ணாடி அடிப்பகுதியுடன் கூடிய மெத்தை ரேக், மாடுலர் பயோ வேக்கம் கழிப்பறை, ஒவ்வொரு இருக்கைக்கும் தனியான மொபைல் மற்றும் லேப்டாப் சார்ஜ்ர், GPS இணக்கத்துடன் கூடிய இருக்கை டிசிப்பிளே, முழுமையாக மூடப்பட்ட கேங்வேஸ், பரவலான எல்.ஈ.டி விளக்கு, மினி-பேன்ட்ரி, தானியங்கி ஸ்லைடிங் கதவுகள் ஒவ்வொரு பெட்டியிலும்.
தமிழ்நாட்டில் புதிய வந்தே பாரத் ரயில்கள் களமிறங்குமா?
ஜனவரி 2021 இல், இந்திய ரெயில்வே 44 வந்தே பாரத் ரயில் பெட்டிகள் (தலா 16 கோச்சுகள்) உந்துவிசை அமைப்புகள், கட்டுப்பாடு மற்றும் பிற உபகரணங்களுக்கான டெண்டரை மேதா சர்வோ டிரைவ்களுக்கு வழங்கியது. மேக் இன் இந்தியா திட்டத்திற்கு இணங்க, டெண்டருக்கு குறைந்தபட்சம் 75% உள்ளூர் உள்ளடக்கத் தேவை உள்ளது. இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு வரும் ஆகஸ்ட் 2022 ஆண்டிற்குள் 10 புதிய வந்தே பாரத் ரயில்கள் தொடங்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இதில் தமிழ்நாடு இருக்கவும் வாய்ப்புள்ளது.
தற்போது இந்தியாவில் களத்தில் இருக்கும் புதிய வந்தே பாரத் ரயில்கள்
இந்த வந்தே பாரத் ரயில் மணிக்கு 180 கிமீ வேகத்துடன் செல்லக்கூடியது. வந்தே பாரத் ரயில்கள் இந்தியாவில் ரயில் பயணத்தின் புதிய சகாப்தத்தைத் தொடங்கியுள்ளன. சுய-உந்துதல் அமைப்பு விரைவான முடுக்கம் மற்றும் வேகத்தைக் குறைக்க வடிவமைக்கப்பட்டுள்ளது. இது பயண நேரத்தைக் குறைக்க உதவுகிறது. இந்திய ரயில்வே தனது நெட்வொர்க்கில் தற்போது இரண்டு வந்தே பாரத் ரயில்களை இயக்குகிறது. டெல்லியில் இருந்து வாரணாசி மற்றும் டெல்லியில் இருந்து கத்ரா வரை செல்லும் வழியில் இது இயக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக