வரலாற்றை மாற்றம் செய்யும் இப்படி ஒரு நிகழ்வை யாரும் எதிர்பார்த்திருக்க முடியாது. காரணம், சியோமி நிறுவனம் தற்பொழுது முதல் முறையாக சாம்சங் மற்றும் ஆப்பிள் நிறுவனங்களை பின்னுக்குத் தள்ளி சர்வதேச ஸ்மார்ட்போன் சந்தையில் முதலிடம் பிடித்துள்ளது. இது அனைத்து முன்னணி நிறுவனங்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஜூன் மாதத்தில் வேகமாக வளர்ந்து வரும் ஸ்மார்ட்போன் பிராண்டாக சியோமி நிறுவனம் மாறியுள்ளது. இதேபோல், ஜூன் மாதத்தில் இந்த நிறுவனம் தனது ஸ்மார்ட்போன் விற்பனையில் சுமார் 26 சதவீதம் அதீத வளர்ச்சியைக் கண்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டில் சர்வதேச ஸ்மார்ட்போன் சந்தையில் சியோமி இரண்டாவது இடம் பிடித்து அசத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
சியோமி நிறுவனம் இதுவரை சுமார் 80 கோடிக்கும் அதிகமான ஸ்மார்ட்போன்களை தனது நிறுவனத்தின் கீழ் விற்பனை செய்துள்ளது. சியோமி தற்பொழுது உலகத்தின் முதல் முன்னணி ஸ்மார்ட்போன் நிறுவனமாக மாறியுள்ளது. இந்த தகவல்கள் சமீபத்தில் வெளியான ஒரு தனியார் ஆய்வு மையத்தின் அறிக்கையின் மூலம் வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அதே நேரத்தில், வியட்நாமில் கோவிட் -19 தொற்றுநோயின் புதிய அலை காரணமாக, ஜூன் மாதத்தில் சாம்சங்கின் உற்பத்தி பாதிக்கப்பட்டது, இதன் விளைவாக பிராண்டின் சாதனங்கள் சேனல்கள் முழுவதும் பற்றாக்குறையை எதிர்கொண்டன. இந்த இடைவெளியில் சியோமி நிறுவனம் தனது விற்பனையை அதிகரித்து முன்னிற்கு வந்தது போல் தெரிகிறது. இதுமட்டுமின்றி, சீனா, ஐரோப்பா, மத்திய கிழக்கு மற்றும் ஆப்ரிக்கா போன்ற சந்தைகளில் ஹூவாய் நிறுவனம் பின்னடைவை சந்திக்கத் துவங்கியது.
இதனால், இந்த சந்தைகளில் சியோமி நிறுவனம் அதிக கவனம் செலுத்தி வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சந்தைகளில் முன்னணி இடத்தை கைப் பிடிக்க சியோமி நிறுவனம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த தகவலை என தனியார் ஆய்வு நிறுவனத்தின் மூத்த ஆய்வு பிரிவு இயக்குனர் தருன் பதாக் தெரிவித்துள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக