Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

செவ்வாய், 31 ஆகஸ்ட், 2021

டிவி, பிரிட்ஜ் தயாரிக்கும் ரிலையன்ஸ்.. முகேஷ் அம்பானி புதிய திட்டம்..!

ரிலையன்ஸ் ரீடைல்

இந்தியா போன்ற மிகப்பெரிய நுகர்வோர் சந்தையில் வீட்டு உபயோக பொருட்களுக்கான சந்தை எப்போதும் குறையாது. இதை உணர்ந்த இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானி தனது ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனத்தின் வாயிலாக இந்தியாவில் நீண்ட காலமாக வொயிட் குட்ஸ் பிரிவில் இருக்கும் BPL, கெல்வினேட்டர் ஆகிய இரு முக்கியமான பிராண்டுகளைக் கைப்பற்றியுள்ளது.இதன் மூலம் ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனம் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் உற்பத்தி, விநியோகம் மற்றும் விற்பனையில் இறங்க உள்ளது.

ரிலையன்ஸ் ரீடைல்

ரிலையன்ஸ் ரீடைல் தற்போது செய்துள்ள ஒப்பந்தம் மூலம் BPL, கெல்வினேட்டர் ஆகிய இரு இந்திய பிராண்டுகளின் பெயரில் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை உற்பத்தி செய்யவும், சந்தைப்படுத்தவும் உரிமம் பெற்று உள்ளது.

வொயிட் குட்ஸ் பொருட்கள்

இந்தியாவில் தற்போது ஆன்லைன் மற்றும் ஆப்லைன் சந்தையில் வொயிட் குட்ஸ் பொருட்களுக்கு அதிகளவிலான டிமாண்ட் உருவாகியுள்ளது. இதேபோல் சீனாவில் இருந்து அதிகளவிலான பொருட்கள் இந்தியாவில் இறக்குமதி செய்யப்படுகிறது. இந்தச் சூழ்நிலையில் இரு வர்த்தக வாய்ப்புகளையும் தீர்க்கும் வண்ணம் முகேஷ் அம்பானி BPL, கெல்வினேட்டர் ஆகிய இரு இந்திய பிராண்டுகளின் உரிமத்தை கைப்பற்றியுள்ளார்.

கெல்வினேட்டர்

BPL, கெல்வினேட்டர் ஆகிய இரு இந்திய பிராண்டுகளின் கீழ் தயாரிக்கப்படும் பொருட்களை இந்தியா முழுவதும் மிகப்பெரிய அளவில் மார்கெட்டிங் செய்து உற்பத்தி பொருட்களைச் சந்தைப்படுத்தத் திட்டமிட்டுள்ளது.

இந்திய பிராண்டுகள்

இதன் மூலம் இவ்விரு இந்திய பிராண்டுகள் மீட்டு எடுப்பது மட்டும் அல்லாமல் ரிலையன்ஸ் ரீடைல் மூலம் இந்தப் பிராண்டுகளில் பொருட்களைக் கடைகள் முதல் ஆன்லைன் வரை அனைத்து பிரிவிலும் வர்த்தகப்படுத்த முடியும் சந்தைப்படுத்த முடியும்.

முக்கியப் பொருட்கள் தயாரிப்பு

இந்தக் கூட்டணியில் ரிலையன்ஸ் BPL நிறுவனத்தின் ஏசி, பிரிட்ஜ், வாசிங் மெஷின், டிவி, ஃபேன், லைட் பல்பு ஆகியவற்றைத் தயாரிக்க உள்ளது. அது மட்டும் அல்லாமல் தீபாவளி பண்டிகையின் போது இக்கூட்டணியில் உருவான பொருட்களைச் சந்தைப்படுத்தத் திட்டமிட்டுள்ளது ரிலையன்ஸ் ரீடைல்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக