
வாட்ஸ்அப் செயலியை உலகம் முழுவதும் அதிக மக்கள் பயன்படுத்துகின்றனர். அதேபோல் இந்த செயலியில் பல்வேறு புதிய புதிய அம்சங்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் வாட்ஸ்அப் செயலியில் மெசேஜ் டைப் செய்யும் இடத்தில் ஒரு பிரத்யேக பேமண்ட் பட்டனைச் சேர்க்கிறது.
அதாவது இந்த புதிய ஷார்ட்கட் ஆனது பயனர்களை சாட் பாரில் இருந்தபடியே விரைவாக பணம் அனுப்ப உதவும் என்றுகூறப்படுகிறது. மேலும் இந்த புதிய ஷார்ட்கட் பற்றிய தகவலை WaBetaInfo தளம் வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக இந்த புதிய அம்சம் இப்போது வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா டெஸ்ட்களுக்கு அணுக கிடைப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. மேலும் ஷார்ட்கட் ஆண்ட்ராய்டு வெர்ஷன் 2.21.1-க்கான வாட்ஸ்அப் பீட்டாவின் ஒரு பகுதியாக பயன்படுத்த கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாட்ஸ்அப் வழியே பணம் அனுப்ப வேண்டும் என்றால், பயனர்கள் இப்போது குறிப்பிட்ட சாட்டில் உள்ள அட்டாச்மெண்ட் விருப்பத்தை கிளிக் செய்து, டாக்குமென்ட், கேமரா, Gallery, ஆடியோ போன்றவைகளுக்கு அடுத்தபடியாக இருக்கும் பேமண்ட் ஐகானை அணுகலாம். ஆனால் இப்போது கூறப்பட்டுள்ள புதிய பேமண்ட் பட்டன் ஆனது அட்டாச்மென்ட் ஐகானுக்குள் செல்லும் வேலையை குறைக்கும்.
அதாவது இது சாட் பாரிலேயே, அட்டச்மெண்ட், கேமரா பட்டனுக்கு இடையில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பயனர்கள் இனி சில நொடிகளில் பணம் அனுப்ப வாட்ஸ்அப் உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் iOS பீட்டா டெஸ்ட்களுக்கும் இந்த ஷார்ட்கர்ட் அணுக கிடைப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த புதிய அப்டேட் வாடிக்கையாளர்களுக்கு பயனுள்ள வகையில் இருக்கும் என்றே கூறலாம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக