Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

திங்கள், 30 ஆகஸ்ட், 2021

படித்ததில் பிடித்தது.. சிந்திக்க வேண்டிய தத்துவங்கள்.. சிரிக்கலாம் வாங்க..!!

-----------------------------------------------
படித்ததில் பிடித்தது...!
 -----------------------------------------------
🌟பிடிக்கலன்னா என்னை குழி தோண்டி புதையுங்கள் 'விதை",

பிடிக்கலன்னா என்னை தண்ணி தெளிச்சு விடுங்க 'மரம்".

🌟வீசப்படும் கற்களை விட பேசப்படும் சொற்கள் மீது நிதானமாக இருங்கள்..

கற்கள் உயிரைக் கொல்லும் சொற்கள் உயிரோடு கொல்லும்.

🌟முயற்சிகள் தோற்றுபோகிறதா தளர்ந்து விடாதே....

கொஞ்சம் வருந்தி விட்டு மீண்டும் கடந்து வா நம்பிக்கையுடன்..

🌟விதை கூட இங்கு விழுந்து தான் எழுகிறது...

தோல்விகள் கூட ஒருநாள் தோற்றுப் போகும் நம்பிக்கை இருந்தால்.
-----------------------------------------------
சிந்திக்க வேண்டிய தத்துவங்கள் !!
-----------------------------------------------
புகை வண்டி என்னதான் வேகமா போனாலும்

வண்டியோட கடைசி பெட்டி கடைசியாதான் போகும்!

வாயால நாய்-னு சொல்ல முடியும்

ஆனால், நாயால வாய்-னு சொல்ல முடியுமா?

விஷம் பத்து நாள் ஆனாலும் பாயாசம் ஆக முடியாது.

ஆனால், பாயாசம் 10 நாள் ஆனா விஷம் ஆயிடும்!!

அரிசி கொட்டுனா, வேற அரிசி வாங்கலாம்,

பால் கொட்டுனா, வேற பால் வாங்கலாம்.

ஆனால், தேள் கொட்டுனா? வேற தேள் வாங்க முடியுமா?

யானை மேல நீங்க உட்காந்தா ஜாலி...

ஆனால், யானை உங்க மேல உட்காந்தா, நீங்க காலி!!

என்ன தான் ஏணி மேல ஏற உதவினாலும்,

அது எப்போதும் கீழதான் இருக்கும்.
-----------------------------------------------
தெரிந்துகொள்வோம்..!!
-----------------------------------------------
💫வலிகளை பொருத்து தான்... ஒன்றை உணர்ந்து கொள்ள முடியும்.

💫விழுந்தால் தான்.. எழுவதற்கான எண்ணம் வரும்.

💫இழப்பில் தான்... மீண்டும் பெறுதலில் வேகம் பிறக்கும்.

💫வாழ்க்கையின் சிறந்த பாடங்களை வலிகளை கொண்டு தான், ஏற்றுக்கொள்வோம்.

வலிகள் இல்லாமல்... வழிகள் இல்லை!
-----------------------------------------------
இப்படி செய்ய முடியுமா?
-----------------------------------------------
💫நைட்ல கொசு கடிச்சா குட்நைட் வைக்கலாம்.. அதுவே மார்னிங்ல கடிச்சா குட்மார்னிங் வைக்க முடியுமா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக