Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

புதன், 1 செப்டம்பர், 2021

100 ரூபாயக்கு 35 ரூவா வரி.. எப்படி வளர முடியும்.. ஏர்டெல் சுனில் மிட்டல் அதிரடி..!

டெலிகாம் சேவை கட்டணம்

இந்தியாவின் முன்னணி டெலிகாம் சேவை நிறுவனங்களின் ஒன்றான ஏர்டெல் அதிகளவிலான கடன் மற்றும் AGR நிலுவைத் தொகையில் இயங்கி வருகிறது.

ஆனால் போதுமான வாடிக்கையாளர்களை வைத்துள்ள காரணத்தால் எவ்விதமான நிதி நெருக்கடியும் இல்லாமல் தொடர்ந்து இயங்கி வருகிறது. இதே நிலை அடுத்த சில வருடங்களுக்குத் தொடர்ந்தால் ஏர்டெல் நிறுவனமும் வோடபோன் ஐடியா நிறுவனத்தைப் போல் ஆகிவிடும்.

இந்தச் சூழ்நிலையில் பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் முதலீட்டாளர்கள் மாநாடு நடந்து. இந்தக் கூட்டத்தில் பல முக்கியமான விஷயங்கள் விவாதிக்கப்பட்டது.

ஏர்டெல் நிறுவனம்

ஏர்டெல் நிறுவனம் தொடர்ந்து இயங்க கட்டாயம் நிதி திரட்ட வேண்டியது கட்டாயமாகியுள்ளது. இந்த நிதியைத் திரட்ட பங்கு விற்பனை முதல் பத்திர வெளியிடு முதல் அனைத்து கருவிகளைப் பயன்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது என்றும், சுமார் 21,000 கோடி ரூபாய் அளவிலான முதலீடு திரட்டும் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது ஏர்டெல் நிர்வாகம்.

டெலிகாம் சேவை கட்டணம்

இதேபோல் டெலிகாம் சேவை கட்டணத்தைக் கட்டாயம் சந்தை சூழ்நிலையைப் பார்த்து உயர்த்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாக அறிவித்துள்ளது. விலை போர் மூலம் ஏர்டெல் நிறுவனம் மிகவும் மோசமான நிதியியல் நிலையை அடைந்துள்ளது. இந்தச் சூழ்நிலையில் விலையைச் சிறிது சிறிதாக உயர்த்த முடிவு செய்துள்ளது.

ARPU இலக்கு 300 ரூபாய்

பார்தி ஏர்டெல் நிறுவனத்தில் தற்போது அறிவிக்கப்படும் விலை உயர்வின் மூலம் ஒரு வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கும் சராசரி வருமானத்தின் அளவு முதல்கட்டமாக 200 ரூபாய் அளவிற்கு உயர்த்தவும், விரைவில் 300 ரூபாய் வரையில் உயர்த்த வேண்டும் என்ற இலக்கையும் நிர்ணயம் செய்துள்ளது. ஜூன் காலாண்டு முடிவில் ஏர்டெல் நிறுவனத்தின் ARPU அளவு 146 ரூபாயாக உள்ளது.

வரி மற்றும் கட்டணம்

இதற்கிடையில் மத்திய அரசு டெலிகாம் நிறுவனங்கள் மீது அதிகளவிலான வரி மற்றும் கட்டணத்தை வசூலிப்பதாக அறிவித்துள்ளது. இதன் மூலம் டெலிகாம் நிறுவனங்கள் 100 ரூபாய் வருமானத்தைப் பெற்றால் அதில் 35 ரூபாய் அரசுக்கே கொடுக்க வேண்டிய மோசமான நிலை உள்ளது. இப்படி இருக்கும் எப்படி டெலிகாம் நிறுவனத்தால் தொடர்ந்து வளர்ச்சி அடைய முடியும் என்றும் கேள்வி எழுப்பப்பட்டு உள்ளது.

ஏர்டெல் 5ஜி சேவை

இந்தியாவிலேயே அதிகளவிலான ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை வைத்துள்ள நிறுவனங்களில் முதல் இடத்தில் ஏர்டெல் இருக்கும் நிலையில், 5ஜி சேவையை மிகவும் மலிவான விலையில் அறிமுகம் செய்யத் திட்டமிட்டு உள்ளதாக அறிவித்துள்ளது. இது சாத்தியமாகும் பட்சத்தில் இந்தியாவில் 5ஜி சேவை மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடையும்.

கூகுள் நிறுவனம்

கூகுள் நிறுவனம் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தில் சுமார் 34,000 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டைச் செய்தது, இதைத் தொடர்ந்து தற்போது பார்தி ஏர்டெல் நிறுவனத்தில், கூகுள் பல ஆயிரம் கோடி ரூபாய் அளவிலான முதலீட்டைச் செய்யப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஏர்டெல் பங்குகள் வளர்ச்சி

இந்த முதலீட்டுக்காகப் பார்தி ஏர்டெல் மற்றும் கூகுள் ஆகியவை கிட்டதட்ட 1 வருடத்திற்கும் அதிகமாகக் காலத்திற்குப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்தப் பேச்சுவார்த்தை குறித்து ஏர்டெல் பெரும் முதலீட்டாளர்களுடன் புதிய முதலீட்டு ஈர்ப்பதற்காகப் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அறிவித்துள்ளது. பார்தி ஏர்டெல் பங்குகள் இன்று யாரும் எதிர்பார்க்காத வகையில் 6.99 சதவீதம் வரையில் உயர்ந்தது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக