
டெலிகாம் ஆபரேட்டர்கள் ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் திட்டங்களை வழங்குவதன் மூலம் சந்தாதாரர்களின் எண்ணிக்கையை உயர்த்தியுள்ளனர். சமீபத்தில், தனியார் தொலைத்தொடர்பு ஆபரேட்டர்கள் தங்கள் ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் திட்டங்களில் சில திட்டங்களின் விலையை அதிகரித்து புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தி சில மாற்றங்களைச் செய்துள்ளது. இந்த புதிய மாற்றங்களை மேற்கொண்ட பட்டியலில் பாரதி ஏர்டெல் மற்றும் Vi நிறுவனமும் அடங்கியுள்ளது.
சிறந்த போஸ்ட்பெய்ட் திட்டங்களை மக்கள் தேர்வு செய்ய காரணம் என்ன?
தனியார் தொலைத்தொடர்பு ஆபரேட்டர்களான பார்தி ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ மற்றும் வோடபோன் ஐடியா பல்வேறு போஸ்ட்பெய்ட் திட்டங்களை வழங்குகிறது. இவை குறிப்பாக தரவு மற்றும் பிற நன்மைகளுடன் நிரம்பியுள்ளன. தெரியாதவர்களுக்கு, வோடபோன் ஐடியா சமீபத்தில் சந்தாதாரர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க புதிய போஸ்ட்பெய்ட் திட்டங்களை அறிமுகப்படுத்தியது. இந்த பதிவில் ரிலையன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியாவின் சிறந்த போஸ்ட்பெய்ட் திட்டங்களை பற்றி பார்க்கலாம்.
பார்தி ஏர்டெல் வழங்கும் ரூ. 499 போஸ்ட்பெய்ட் திட்டம்
பாரதி ஏர்டெல் நிறுவனம் தற்போது அதன் பயனர்களை ரூ. 999 விலையில் கிடைக்கும் புதிய போஸ்ட்பெய்ட் திட்டத்திற்கு பயனர்களைத் தள்ளுவதற்காக அடிப்படை திட்டமான முந்தைய ரூ. 749 போஸ்ட்பெய்ட் திட்டத்தை நிறுவனம் தற்பொழுது நிறுத்தியுள்ளது. அதேபோல், ஏர்டெல் டெல்கோ நிறுவனம் புதிதாக அறிமுகம் செய்துள்ள ரூ. 999 போஸ்ட்பெய்ட் திட்டத்தில் கிடைக்கும் நன்மைகள் மற்றும் சலுகைகளை இப்போது பயனர்களுக்காக அதிகரித்துள்ளது.
200 ஜிபி வரை ரோல்ஓவர் டேட்டா
இருப்பினும், நீங்கள் ரூ. 700 விலைக்கு கீழ் ஏர்டெல் போஸ்ட்பெய்ட் திட்டத்தை தேடுகிறீர்களானால், நீங்கள் சிறந்த மதிப்புள்ள ரூ. 499 போஸ்ட்பெய்ட் திட்டத்தை தேர்வு செய்யலாம். இந்த திட்டத்தின் கீழ், ஏர்டெல் வரம்பற்ற உள்ளூர், எஸ்டிடி மற்றும் ரோமிங் அழைப்பு நன்மைகளை வழங்குகிறது. தரவு நன்மைகளைப் பொறுத்தவரை, பயனர்கள் 75 ஜிபி மாதாந்திர தரவை 200 ஜிபி வரை ரோல்ஓவர் அம்சத்துடன் பெறுகிறார்கள். பயனர்களுக்கு ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் கிடைக்கும்.
கூடுதல் நன்மைகளே இவ்வளவா? அடி தூள்..
இத்துடன் போஸ்ட்பெய்டு பயனர்களுக்கு நிறுவனம் கூடுதல் நன்மைகளையும் வழங்கி வருகிறது. கூடுதல் நன்மை பற்றி பேசுகையில், ஏர்டெல் ஒரு வருடத்திற்கு அமேசான் பிரைம் மெம்பர்ஷிப்பிற்கான சந்தா மற்றும் டிஸ்னி+ஹாட்ஸ்டார் விஐபி சந்தாவுக்கான நன்மைகளையும் நிறுவனம் வழங்குகிறது. இது மட்டுமல்லாமல், பயனர்கள் ஷா அகாடமி வாழ்நாள் அணுகல், ஸ்மார்ட்போன் பாதுகாப்பு ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ஆப் பிரீமியம் மற்றும் விங்க் மியூசிக் சந்தாவை போன்ற நன்மைகளையும் பயனர்கள் அனுபவிக்கலாம்.
ரிலையன்ஸ் ஜியோ வழங்கும் ரூ. 599 போஸ்ட்பெய்ட் திட்டம்
ரிலையன்ஸ் ஜியோவின் இந்த ரூ.599 போஸ்ட்பெய்ட் திட்டம் பயனர்களுக்கு வரம்பற்ற குரல் அழைப்பு நன்மை, 100 ஜிபி டேட்டா நன்மையுடன் 200 ஜிபி வரையிலான ரோல்ஓவர் டேட்டா நன்மையைப் பெறுகிறார்கள். FUP வரம்பை அடைந்தவுடன் ஜியோ பயனர்களுக்கு 1 ஜிபி டேட்டா பயன்பாட்டிற்கு ரூ. 10 என்ற கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இத்துடன் உங்களுக்கு தினமும் 100 எஸ்எம்எஸ் மற்றும் ஒரு பேமிலி அடிக்ஷன் கார்டு நன்மையையும் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.
ரிலையன்ஸ் ஜியோவில் கிடைக்கும் ஏராளமான கூடுதல் நன்மைகள்
ஏர்டெல் நிறுவனத்தை போல், ரிலையன்ஸ் ஜியோ தனது பயனர்களுக்கு சில கூடுதல் நன்மைகளை வழங்குகிறது. கூடுதல் நன்மைகளைப் பற்றி பேசுகையில், ரிலையன்ஸ் ஜியோ தனது பயனர்களுக்கு நெட்ஃபிக்ஸ், அமேசான் பிரைம் மற்றும் டிஸ்னி+ஹாட்ஸ்டார் போன்ற பல்வேறு OTT தளங்களுக்கான சந்தாவை வழங்குகிறது. இத்துடன், பயனர்களுக்கு ஜியோவின் நன்மையான JioTV, JioCinema, JioNews போன்ற பல்வேறு Jio பயன்பாடுகளுக்கான சந்தாக்களையும் நிறுவனம் தனது பயனர்களுக்கு வழங்கி வருகிறது.
வோடபோன் ஐடியா வழங்கும் ரூ.699 போஸ்ட்பெய்ட் திட்டம்
Vi வழங்கும் ரூ. 699 போஸ்ட்பெய்ட் திட்டத்தில் வரம்பற்ற தரவு நன்மைகளை வழங்கும் பட்டியலில் இந்த ஒரு திட்டம் மட்டுமே உள்ளது. பயனர்கள் தங்கள் வேலை மற்றும் பொழுதுபோக்கு தேவைகளைப் பூர்த்தி செய்ய வரம்பற்ற அதிவேக தரவை அனுபவிக்க இந்த திட்டம் சிறப்பானது. வோடபோன் ஐடியா டிஸ்னி+ஹாட்ஸ்டார் மற்றும் அமேசான் பிரைம் மெம்பர்ஷிப்பிற்கான 1 வருட சந்தாவை வழங்குகிறது.
Vi கீழ் கிடைக்கும் கூடுதல் நன்மைகள் என்ன-என்ன?
கூடுதலாக, பயனர்கள் Vi மூவிஸ் மற்றும் டிவிக்கான அணுகலைப் பெறுவார்கள். போஸ்ட்பெய்ட் பயனர்கள் அமேசான் பிரைம் உறுப்பினர் ஒரு முறை நன்மையாக இருக்கும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். Vi பட்டியலில் இன்னும் ஏராளமான நன்மைகள் கிடைக்கும் பல புதிய திட்டங்கள் தற்போது பயன்பாட்டிற்கு கிடைக்கிறது. விஐ பயனர்கள் அவர்களுக்கு பொருத்தமான போஸ்ட்பெய்டு திட்டங்களை தேர்வு செய்து பயன்படுத்திக்கொள்ளலாம்.
போஸ்ட்பெய்ட் திட்டங்களை தேர்வு செய்ய இதுவும் ஒரு காரணமா?
ப்ரீபெய்ட் பயனர்களுக்கு கிடைக்கும் நன்மைகளை போல் தற்பொழுது போஸ்ட்பெய்டு பயனர்களுக்கும் ஏராளமான சலுகைகள் மற்றும் நன்மைகள் நமக்கு கிடைக்கிறது. ப்ரீபெய்ட் பயனர்கள் அவர்கள் கட்டணம் செலுத்திய பின்னர் அதற்கான சேவைகளை அனுபவிக்க முடியும். அதேபோல், போஸ்ட்பெய்டு பயனர்கள் அவர்கள் பயன்படுத்திய சேவைக்கான கட்டணத்தை மாதம் தோறும் தவறாமல் செலுத்தி வர வேண்டும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக