கேரளாவில்
தனக்கு மணமகள் தேவை என டீக்கடை முன்பு இளைஞர் ஒருவர் போர்டு வைத்த
சம்பவம் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இது குறித்த முழு
விபரங்களை கீழே காணுங்கள்
இது குறித்து உன்னி கிருஷ்ணன் கூறும்போது : "எனக்கு தலையில் ஒரு கட்டி இருந்தது. இந்த கட்டியை அறுவை சிகிச்சை மூலம் அக்றவிட்டனர். தற்போது முழுவதும குணமாகி அடுத்த கட்ட வாழ்க்கைக்கு செல்ல முடிவு செய்து கடந்த பிப்ரவரி மாதம் ஒரு லாட்டரி கடை ஒன்றை திறந்துள்ளேன். தற்போது அதை டீக்கடையாக விஸ்தரித்துள்ளேன். தற்போது வருமானம் நன்றாக இருக்கிறது. இந்த நேரத்தில் திருமணம் செய்யது கொள்ள வேண்டும் என முடிவு செய்தேன். தரகர் மூலம் பெண் பார்க்கவிருப்பமில்லை. வீட்டில் உறவினர்கள் ஜாதகத்தை வைத்துக்கொண்டு பெண் பார்த்து வருகின்றனர். ஆனால் இதுவரை எதுவும் அமையவில்லை. அதனால்தான் இந்த போர்ட்டை வைத்தேன். இந்த புகைப்படத்தை பகிர்ந்த பின்பு பல இடங்களிலிருந்து அழைப்புகள் வந்த வண்ணம் உள்ளன. வெளிநாடுகளிலிருந்து கூட அழைப்புகள் வருகிறது. தற்போது போன் பேசவ நேரம் சரியாக இருக்கிறது" என கூறினார்.
உள்ளூர் முதல் உலகம் வரை

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக