Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

புதன், 1 செப்டம்பர், 2021

தரமான சாம்சங் கேலக்ஸி ஏ52எஸ் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்.! விலை மற்றும் விபரங்கள்.!

றும் 128ஜிபி மெமரி கொண்ட

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சாம்சங் கேலக்ஸி ஏ52எஸ் 5ஜி ஸ்மார்ட்போன் இன்று (செப்டம்பர் 1) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது தரமான அம்சங்களுடன் சற்று உயர்வான விலைவில் வெளிவந்துள்ளது இந்த புதிய கேலக்ஸி ஏ52எஸ் 5ஜி ஸ்மார்ட்போன். இப்போது இந்த சாதனத்தின் விலை மற்றும் அம்சங்களைப் பார்ப்போம்.

6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட சாம்சங் கேலக்ஸி ஏ52எஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் விலை ரூ.35,999-ஆக உள்ளது. பின்பு இதன் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி வேரியண்ட் ரூ.37,499-விலையில் வாங்க கிடைக்கும். அதேபோல் அமேசான், சாம்சங்.காம் தளங்களில் இந்த சாதனத்தை வாங்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு எச்டிஎப்சி வங்கி அட்டைகளைப் பயன்படுத்தி சாம்சங் கேலக்ஸி ஏ 52 எஸ் 5 ஜி ஸ்மார்ட்போன் வாங்கும் வாடிக்கையாளர்கள் ரூ.3000 என்கிற கேஷ்பேக் பெறமுடியும்.

சாம்சங் கேலக்ஸி ஏ52எஸ் ஸ்மார்ட்போன் ஆனது. 6.5-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் சூப்பர் AMOLED Infinity-O வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன்.

இந்த கேலக்ஸி ஏ52எஸ் 5ஜி ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 778ஜி சிப்செட் வசதி உள்ளது. மேலும் One UI 3 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளிந்துள்ளதால் பயன்படுத்துவதற்குமிகவும் அருமையாக இருக்கும்.

சாம்சங் கேலக்ஸி ஏ52எஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி பிரைமரி சென்சார் + 12எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 5எம்பி மேக்ரோ சென்சார் + 5எம்பி டெலிபோட்டோ சென்சார் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன்.

இந்த புதிய ஸ்மார்ட்போனில் 4500 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதற்கு பதிலாக 5000எம்ஏஎச் அல்லது 5500 எம்ஏஎச் பேட்டரி வசதி இருந்திருந்தால் இன்னும் அருமையாக இருக்கும். மேலும் 25 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார்என பல்வேறு சிறப்பான அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.

5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை, ப்ளூடூத், ஜிபிஎஸ்/ ஏ-ஜிபிஎஸ், என்எப்சி மற்றும் யூஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த கேலக்ஸி ஏ52எஸ் ஸ்மார்ட்போன். அதேபோல் Awesome Black, Awesome Violet மற்றும் Awesome White நிறங்களில்
வெளிவந்துள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக