சிரிப்பதற்கான நேரம்...!
---------------------------------------------
பயணி : யோவ் கண்டக்டர்! பஸ்ஸை நிறுத்து... ஒருத்தர் பஸ்ல இருந்து தவறி விழுந்துட்டாரு...
கண்டக்டர் : சும்மா இருய்யா! கண்ட இடத்துல விசில் அடிச்சா டிரைவர் என்னைத் திட்டுவாரு...
பயணி : யோவ்! விழுந்ததே டிரைவர்தான்யா...
கண்டக்டர் : 😩😩
---------------------------------------------
ஜோசியர் : கல்யாணத்துக்கு அப்புறம் உங்களுக்கு ஒரு தோஷம் நீங்கிடும்...
விமல் : அப்படியா... என்ன தோஷம்?
ஜோசியர் : சந்தோஷம்...
விமல் : 😕😕
--------------------------------------------
ரொம்ப நாள் டவுட்...!!🤔
---------------------------------------------
நீருக்கு அடியில அழ முடியுமா?😰
மீன்களுக்கு தாகம் எடுக்குமா?🐠
பறவைகள் ஏன் தூங்கும்போது மரத்திலிருந்து விழுவதில்லை?🕊
பணம் மரத்திலிருந்து வருவதில்லை, பின் ஏன் வங்கிகள் எங்களுக்கு கிளைகள் உள்ளன என்கின்றன?💰
பசை ஏன் பாட்டிலுக்குள் ஒட்டி கொள்வதில்லை?🍶
வட்ட வடிவ பீட்சா... ஏன் சதுர பெட்டியில் வருகிறது?
ரிலாக்ஸ் ப்ளீஸ்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக