
காற்று மாசுபாடு பிரச்னையை குறைப்பதற்காக அதிரடியான முடிவு ஒன்று எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
மஹாராஷ்டிரா மாநிலத்தின் சுற்றுச்சூழல் துறை அமைச்சரான ஆதித்யா தாக்கரே இந்த முடிவு குறித்த தகவல்களை சமூக வலை தளங்களில் அறிவித்துள்ளார். மும்பை நகரில் ஏற்கனவே 386 எலெக்ட்ரிக் பஸ்கள் இயங்கி வருகின்றன. இதனுடன் இந்த 1,900 எலெக்ட்ரிக் பஸ்களும் இணையவுள்ளன என்பது குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.
இதன் மூலம் மும்பையில் இயக்கப்படும் ஒட்டுமொத்த எலெக்ட்ரிக் பஸ்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை கடக்கும். எனவே இந்தியாவில் பொது போக்குவரத்து சேவைகளுக்கு அதிக எலெக்ட்ரிக் பஸ்களை ஈடுபடுத்தி வரும் நகரங்களில் ஒன்றாக மும்பை மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மும்பை மட்டுமல்லாது மஹாராஷ்டிரா மாநிலத்தின் மற்ற நகரங்களிலும் எலெக்ட்ரிக் பஸ்கள் பயன்பாட்டிற்கு வரவுள்ளன.
மஹாராஷ்டிராவில் எலெக்ட்ரிக் பஸ்களின் பயன்பாட்டை அதிகரிப்பது தொடர்பாக அமைச்சர் ஆதித்யா தாக்கரே ஏற்கனவே பேசியுள்ளார் என்பதும் கவனிக்கத்தக்கது. இதன் மூலம் பொது போக்குவரத்து வாகனங்கள் வெளிப்படுத்தும் கார்பன் உமிழ்வை குறைப்பதற்கு மஹாராஷ்டிரா மாநில அரசு திட்டமிட்டுள்ளது.
மஹாராஷ்டிரா மாநில அரசு எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதற்காக ஏற்கனவே பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளது. இதில், எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குபவர்களுக்கு வழங்கப்படும் மானியம் முக்கியமானது. இந்தியாவில் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.
ஒரு சில மாநிலங்களில் மட்டும் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் குறைந்த விலையில் கிடைக்கிறது. இந்த அந்தந்த மாநில அரசுகள் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு வழங்கி வரும் மானியம்தான் முக்கிய காரணம். இந்த வரிசையில் மஹாராஷ்டிரா மாநில அரசாங்கமும் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மானியம் வழங்கி கொண்டுள்ளது.
எனவே இந்தியாவில் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் குறைந்த விலையில் கிடைக்கும் மாநிலங்களில் ஒன்றாக மஹாராஷ்டிராவும் திகழ்கிறது. எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனையை அதிகரிப்பதுடன், அவற்றின் உற்பத்தியை அதிகரிப்பதற்கு தேவையான முயற்சிகளையும் மஹாராஷ்டிரா மாநில அரசு மேற்கொண்டு வருகிறது.
இதன் மூலம் மஹாராஷ்டிராவை மிக முக்கியமான எலெக்ட்ரிக் வாகன உற்பத்தி மையமாக மாற்றுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதன் மூலம் காற்று மாசுபாடு பிரச்னையை வெகுவாக கட்டுக்குள் கொண்டு வர முடியும் என்பது முக்கியமானது. எனவே அனைத்து மாநில அரசுகளும் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரித்து வருகின்றன.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக