Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

வியாழன், 2 செப்டம்பர், 2021

காரியம், காரணம் வேணாமா?- செப்., 3 "மணி ஹெய்ஸ்ட்" பார்க்க மொத்த அலுவலகத்துக்கும் விடுமுறை: எங்கு தெரியுமா?

மனி ஹீஸ்ட் வெளியீட்டு தேதி 
மணி ஹெய்ஸ்ட் என்ற தொடர் பார்க்காவிட்டாலும் இந்த வார்த்தை கண்டிப்பாக எங்காவது கேட்டது இருக்கும். காரணம் அந்த அளவிற்கு இந்த தொடர் ரசிகர்களை பெற்றது. மணி ஹெய்ஸ்ட் தொடர் உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு பெற்றது என்றுதான் கூற வேண்டும். மணி ஹெய்ஸ்ட் தொடர் மற்றும் காட்சி வடிவமைப்பு மிகவும் விறுவிறுப்பாக இருக்கும்.

ஸ்பானிஷ் நெட்ஃபிளிக்ஸ் நிகழ்ச்சி

ஸ்பானிஷ் நெட்ஃபிளிக்ஸ் நிகழ்ச்சி ஆன மணி ஹெய்ஸ்ட்-ன் ஐந்தாவது மற்றும் இறுதி சீசனின் முதல் தொகுதியை செப்டம்பர் 3 ஆம் தேதி அன்று ஓடிடி தளத்தில் ஸ்ட்மீங்க செய்ய இருக்கிறது. இந்த தொடரில் இடம்பெற்றிருக்கும் அனைத்து கதாபாத்திருக்கும் முக்கியத்துவங்கள் அளிக்கப்பட்டிருக்கும். குறிப்பாக ப்ரபஸர், இவரின் திட்டமிடல் மற்றும் வழிநடத்தல் என்பது அனைவரையும் கவரும் விதமாகவே இருக்கும்.

மணி ஹெய்ஸ்ட் வெளியீட்டு தேதி

மணி ஹெய்ஸ்ட் டிரெய்லர் வெளியாக அதன் பார்வையாளர்களின் எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்தது. பேனர் ஆஃப் ஸ்பெயின் வங்கியில் ராணுவம் நுழைவதற்கு கர்னல் தமயோ தயாராகும் போது மழை நீர் தொட்டி கண்டுபிடிக்கப்படுகிறது. இதை கும்பல் எவ்வாறு எதிர்கொள்கிறது என்ற விதமாக இருக்கும் என கணிக்கப்படுகிறது. லா காசா டி பேப்பல் எனப்படும் மணி ஹெய்ஸ்ட் பாகம் 5 இரண்டு தொகுதிகளாக வருகிறது. இதன் தொகுதி 1 செப்டம்பர் 3 ஆம் தேதி மற்றும் தொகுதி இரண்டு டிசம்பர் 3 ஆகிய தேதிகளில் வெளியாக இருக்கிறது.

உலகம் முழுவதும் புகழ் பெற்ற நிகழ்ச்சி

இந்தியா உட்பட உலகம் முழுவதும் இந்த நிகழ்ச்சி புகழ் பெற்றது ஆகும். இதையடுத்து ஜெய்ப்பூரை சேர்ந்த வெர்வ் லாஜிக் என்ற நிறுவனம் செப்டம்பர் 3 ஆம் தேதி தங்களது ஊழியர்களுக்கு விடுமுறை அறிவித்துள்ளது. அந்த தினத்தில் நெட்ஃபிளிக்ஸ் வெளியாகிறது அதில் நெட்ஃபிளிஸ்க் மற்றும் சில் ஹாலிடே என குறிப்பிடப்பட்டுள்ளது.

செப்டம்பர் 3 ஆம் தேதி விடுமுறை

இந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி, அபிஷேக் ஜெயின் தனது ஊழியர்களுக்கு கோவிட்-19 தொற்று காலத்தின் போது கடினமாக உழைத்ததற்கு நன்றி தெரிவித்தார். மேலும் செப்டம்பர் 3 ஆம் தேதி ஓய்வாகும் நெட்பிளிக்ஸ் சில் ஹாலிடே எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊழியர்கள் தங்களது குடும்பத்துடன் மணி ஹெய்ஸ்ட் தொடரை கண்டு ரசிக்கும் வகையில் விடுமுறை விடுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

நெட்ஃபிளிக்ஸ், அமேசான் பிரைம் மற்றும் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார்

கொரோனா பரவல் காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டது. எப்போது திறக்கப்படும் என தெரியாத நிலையையடுத்து தயாரிப்பாளர்கள் படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட்டனர். இந்த படங்களை வாங்க நெட்ஃபிளிக்ஸ், அமேசான் பிரைம் மற்றும் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் போன்ற ஓடிடி தளங்கள் போட்டிப் போட்டுக் கொண்டன.

ஓடிடி தளத்தில் கணக்கு

ஸ்மார்ட்போனில் சீரிஸ் பார்க்க தொடங்கிய அனைவரும் அமேசான்பிரைம், நெட்பிளிக்ஸ், ஹாட்ஸ்டார் போன்ற ஓடிடி சேவைகளில் சந்தாதாரர்களாக இருப்பார்கள். குறிப்பாக் சீரிஸ் என்று பார்க்கும் போது நெட்பிளிக்ஸ் சிறந்தது என கூறப்படுகிறது.

தற்போதைய காலகட்டத்தில் வங்கியில் கூட சிலர் தங்களுக்கென்று கணக்கில்லாமல் இருக்கலாம், ஆனால், அமேசான் பிரைம், நெட்பிலிக்ஸ் மற்றும் ஹாட்ஸ்டார் போன்ற OTT சேவைகளுக்கான தளங்களில் தனக்கென்று ஒரு கணக்கில்லாமல் பெரும்பாலானோர் இருப்பதில்லை. அதுமட்டுமின்றி தொலைத்தொடர்பு நிறுவனங்களும் தங்களது ரீசார்ஜ் திட்டங்களுடன் போட்டிப்போட்டுக் கொண்டு ஓடிடி அணுகலை வழங்குகிறது.

வாடிக்கையாளர்களை தக்க வைப்பதில் கவனம்

நெட்பிளிக்ஸ் நிறுவனம் எப்போதுமே அதன் சேவைகளை வழங்க மாதாந்திர சந்தா கட்டணத்தை பல சலுகையோடு வழங்கி அதன் வாடிக்கையாளர்களை தக்க வைப்பதில் கவனமாக செயல்படும். சமீபத்தில் நெட்பிலிக்ஸ் அதன் பங்குகளை உயர்த்திய நிலையில், ஆப்பிள் டிவி பிளஸ் மற்றும் டிஸ்னி பிளஸ் ஆகியவற்றிலிருந்து கடுமையான போட்டியை எதிர்கொள்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக