5ஜி இணைய அணுபவம் தொடங்கி விட்டது என்றே கூறலாம். அதற்கேற்ப பல ஸ்மார்ட்போன் நிறுவனங்களும் தங்களது சாதனத்தை 5ஜி அம்சத்தை வெளியிட்டு வருகிறது. இதில் சாம்சங் தற்போது பல முயற்சிகளை மேற்கொண்டு வெற்றியை சந்தித்து வருகிறது. நிறுவனம் பட்ஜெட் விலையில் நல்ல தரமான 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியது. சாம்சங் நிறுவனம் தற்போது ஒவ்வொரு ஆண்டும் அறிமுகம் செய்யும் கேலக்ஸி ஸ்மார்ட்போன்களில் 5ஜி அணுகலை வழங்க தயாராகி வருகிறது.
5ஜி அம்சத்தோடு ஸ்மார்ட்போன்கள்
கடந்த ஆண்டு, சாம்சங் கேலக்ஸி ஏ42 ஸ்மார்ட்போனை 5ஜி அம்சத்தோடு அறிவித்தது. அப்போது இந்த சாதனம் தான் மிகவும் மிலவு விலை 5ஜி ஸ்மார்ட்போனாக இருந்தது. அதன்படி தற்போது சாம்சங் நிறுவனம் சாம்சங் கேலக்ஸி ஏ22 5ஜி அறிவித்து. இது தற்போது மலிவு விலை 5ஜி ஸ்மார்ட்போன் ஆகும்.
மலிவு விலை 5ஜி ஸ்மார்ட்போன்
2022 ஆம் ஆண்டில் மிகவும் மலிவு விலை 5ஜி ஸ்மார்ட்போன் ஆக இது கிடைக்கும் என கூறப்படுகிறது. சாம்சங் கேலக்ஸி ஏ13 5ஜி ஸ்மார்ட்போன் குறித்து பார்க்கலாம். வரவிருக்கும் ஸ்மார்ட்போன் ஆனது GalaxyClub.NL என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. புதிய ஏ சீரிஸ் ஸ்மார்ட்போன் பழைய சாம்சங் கேலக்ஸி ஏ12 5ஜி-ன் தொடர்ச்சியாக இருக்கும் என கூறப்படுகிறது.
சிறந்த சாம்சங் 5ஜி ஸ்மார்ட்போன்
பட்ஜெட் விலையில் வாங்க சிறந்த சாம்சங் 5ஜி ஸ்மார்ட்போன் ஆக இது இருக்கும் என கூறப்படுகிறது. சாம்சங் கேலக்ஸி ஏ13 5ஜி ஸ்மார்ட்போன் எப்போது வரும் என்பது தெளிவாக தெரியவில்லை. இந்த ஸ்மார்ட்போன் மாடல் எண் SM-A136B உடன் வரும் என அறிக்கை தெரிவிக்கிறது. டிசம்பர் 2020-ல் கேலக்ஸி ஏ12 5ஜி அறிமுகம் செய்வதன் மூலம், சாம்சங் கேலக்ஸி ஏ13 சாதனமும் அடுத்த 5ஜி சாதனமாக இருக்கும் எனவும் இது 2021 இறுதியிலோ அல்லது 2022 ஆம் ஆண்டின் தொடக்கத்திலோ வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சாம்சங் கேலக்ஸி ஏ13 5ஜி அம்சங்கள்
சாம்சங் கேலக்ஸி ஏ13 5ஜி சிறந்த மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் வரும் என எதிர்பார்க்கலாம். கேலக்ஸி ஏ12 3.5 இன்ச் எச்டி ப்ளஸ் எல்சிடி டிஸ்ப்ளே மூலம் இயக்கப்படுகிறது. இது 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வரும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனானது ஆக்டோகோர் மீடியாடெக் ஹீலியோ பி35 செயலி மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் 48 மெகாபிக்சல் குவாட் கேமரா அமைப்பு மற்றும் 8 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா வசதியோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் 15 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவோடு 5000 எம்ஏஎச் பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது.
சிறந்த டிஸ்ப்ளே வசதி
அதேபோல் அடுத்த தலைமுறை சாதனமாக வரும் சாம்சங் கேலக்ஸி ஏ13 5ஜி, அடுத்த தலைமுறை மாடல் ஆக இருப்பதால், சாம்சங் கேலக்ஸி ஏ13 5ஜி வேகமான செயலி, அடிப்படை பதிப்பில் அதிக ரேம் மற்றும் சிறந்த டிஸ்ப்ளே வசதியோடு வரும் என கூறப்படுகிறது. சாம்சங் கேலக்ஸி ஏ13 5ஜி குறித்த கூடுதல் விவரங்கள் தற்போதுவரை வெளியாகவில்லை. இவை அனைத்தும் தகவல்கள் என்பதால் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக