Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

வியாழன், 2 செப்டம்பர், 2021

சிரிப்புதாங்க வருது... இந்த டவுட்டு உங்களுக்கு வந்துருக்கா? - ரிலாக்ஸ் ப்ளீஸ்..!!

------------------------------------------------
வாழ்க்கையில் எப்போதும் ஜெயிக்க..!
------------------------------------------------
மாதம் ஒரு புத்தகமாவது படியுங்கள்.

ஆரோக்கியம் தராத உணவு வகைகள் எவ்வளவு சுவையாக இருந்தாலும் உண்ணாதீர்கள்.

உங்களுக்கு என்ன வயதானாலும் பரவாயில்லை. விருப்பமான துறைகளில் நடக்கும் பயிற்சி வகுப்புகளில் பங்கெடுங்கள்.
------------------------------------------------ 
இந்த டவுட்டு உங்களுக்கு வந்துருக்கா?
------------------------------------------------ 
ரவையும், உப்பும் சேர்த்து செய்யுற பதார்த்தத்தை உப்புமான்னு சொல்றாங்க....

அப்போ அதே ரவையும், சீனியும் சேர்த்து செய்யுற பதார்த்தத்தை சீனிமான்னு தானே சொல்லனும்....

இவங்க கேசரின்னு வேற ஏதோ பேர் சொல்றாங்களே...
------------------------------------------------ 
குட்டிக்கதை..!!
------------------------------------------------ 
ஒரு பணக்காரரின் வீட்டிலிருந்து தங்க வளையல் தொலைந்து போனது. சில ஊழியர்கள் அந்த வீட்டில் வேலை செய்தார்கள். அவர்கள் தான் வளையலை திருடியிருப்பதாக சந்தேகிக்கப்பட்டனர். அவர்கள் ஒவ்வொருவரிடமும் கேள்வி கேட்கப்பட்டது. ஆனால் யாரும் குற்றத்தை ஒப்புக் கொள்ளவில்லை.

எனவே, வீட்டின் எஜமானர் நீதிபதியிடம் புகார் அளித்தார். அனைத்து ஊழியர்களும் நீதிமன்றத்திற்கு வரவழைக்கப்பட்டனர். ஆனால் அனைத்து ஊழியர்களும் இந்த குற்றச்சாட்டினை மறுத்தனர். பின்னர் நீதிபதி ஒரு திட்டத்தை தீட்டினார். அதன்படி, அவர் ஒவ்வொருவருக்கும் ஒரு நீளமான குச்சியைக் கொடுத்தார், அடுத்த நாளன்று அதனை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க சொன்னார்.

அவர்களிடம் வளையலை திருடியவரின் குச்சி ஒரு அங்குலம் அதிகரிக்கும் என்று நீதிபதி கூறினார். அவர்கள் வீட்டிற்குச் சென்று, தங்களுடைய குச்சிகளை வைத்தார்கள். ஆனால், வளையலை திருடியவன் மட்டும் தன் குச்சி வளரக்கூடாதென்று குச்சியின் ஒரு அங்குலத்தை வெட்டினான்.

அடுத்த நாள் எல்லோரும் குச்சிகளை சமர்ப்பித்த போது, ஒரு குச்சி மட்டும் ஒரு அங்குலம் குறுகியதாகக் காணப்பட்டது. பின்னர், நீதிபதி திருடனை அடையாளம் கண்டு அவனை தண்டித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக