Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

வியாழன், 2 செப்டம்பர், 2021

அருள்மிகு நாகசக்தி அம்மன் திருக்கோயில், மலுமாச்சம்பட்டி - கோயம்புத்தூர்.

Temple : Temple Details | - | Tamilnadu Temple | நாகசக்தி அம்மன்
அமைவிடம் :

அருள்மிகு நாகசக்தி அம்மன் திருக்கோயில் கோயம்புத்தூர், மலுமாச்சம்பட்டி என்னும் ஊரில் அமைந்துள்ளது. இத்தலம் வடநாடு கோபுர அமைப்பில் அமைந்துள்ளது.

மாவட்டம் :

அருள்மிகு நாகசக்தி அம்மன் திருக்கோயில், மலுமாச்சம்பட்டி - கோயம்புத்தூர்.


எப்படி செல்வது?

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் கோயம்புத்தூருக்கு பேருந்து வசதிகள் உள்ளன. கோயம்புத்தூரிலிருந்து மலுமாச்சம்பட்டிற்கு பேருந்து வசதிகள் உள்ளன. 

கோயில் சிறப்பு :

இத்தலத்தில் பசும்பால் நீலநிறமாக மாறுதல் போன்ற அதிசயிக்க நிகழ்வுகளும் நடைபெறுகின்றது.

இத்தலத்தில் அரைவட்ட தியான மண்டபம், பதினெட்டு சித்தர்கள் பூஜை, புத்தர், திருவள்ளுவர், வள்ளலார், ராமனாந்த சுவாமிகள், சீரடி சாய்பாபா, போகர் சித்தர் முன்மண்டபம் போன்றவையும் அமைந்துள்ளன. 

18 படிகள் ஏறி கோயிலுக்கு செல்லும் படி அமைப்பும், 32 அடி உயர மஹா காலபைரவர் சிலையும் அமைந்துள்ளது, இங்கு சிறப்புமிக்கதாக போற்றப்படுகிறது.

பல வருடங்கள் நாகசக்தி அம்மன் வழிபாடு நடைபெறுகிறது. எத்தனை வருடங்கள் குழந்தை இல்லாமல் இருந்தாலும், திருமணத்தடை ஏற்பட்டிருந்தாலும் வெள்ளிக்கிழமை நடைபெறும் பால் அபிஷேகத்தில் பங்கு பெற்று நமது கையில் கருவறை சென்று பால் அபிஷேகம் செய்து வந்தால் நன்மைகள் கிடைக்கும். 

நிலவேம்பு மூலிகை பால் தருதல் இத்தலத்தில் தான் முதலில் உருவாகியது. அதன்பிறகு நிலவேம்பு கஷாயம் உலகம் முழுவதும் பரவியது.

கோயில் திருவிழா :

பிரதி மாதம் அமாவாசை, சத்ருசம்ஹார பூஜை யாகம், சித்திரை பௌர்ணமி, ஆடிவெள்ளி, கார்த்திகை தீபம், மாசி மாதம் 1008 கலச பூஜை, பிரதி வாரம் வெள்ளிக்கிழமை, ஞாயிறு பூஜை நடைபெறுகின்றன.

வேண்டுதல் :

புத்திர பாக்கியம் வேண்டியும், ராகு-கேது தோஷம் நீங்கவும், கடன் தொல்லை, மன வியாதி, திருமணத்தடை, தொழில் விருத்தி, தீராத வியாதிகள் என அனைத்து பிரச்சனைகளுக்காக பிரார்த்திக்கின்றன. இங்கு கூட்டுப்பிரார்த்தனையும் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.

 நேர்த்திக்கடன் :

பிரார்த்தனைகள் நிறைவேறியதும், வெள்ளியில் கண் அடக்கம், திருமணம் முடிந்த பின்பு தாலியை காணிக்கையாக செலுத்தவும், நோய் தீர்ந்த பின்பு எடைக்கு எடை அரிசி தானம் வழங்கவும், சத்ருசம்ஹார யாகத்திற்கு நெய் தானம் வழங்கியும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!