
சிறந்த பொழுதுபோக்கு அம்சங்களில் ஒன்றாக ஆன்லைன் கேமிங் இருக்கிறது. குறிப்பிட்ட ஆன்லைன் விளையாட்டுகள் சிறுவர்கள், இளைஞர்களை கவர்ந்து பெற்றோர்களுக்கு பெரும் தொல்லையாக மாறி வருகிறது. ஆன்லைன் விளையாட்டில் தவிர்க்க முடியாத ஒன்றாக இருப்பது ஃப்ரீ பயர் என்றே கூறலாம். ஃப்ரீபயர் விளையாட்டு என்பது மிகவும் பிரபலமாக இருக்கிறது. கரீனா ஃப்ரீ பயர் விளையாட்டு அறிமுகமான குறுகிய காலத்தில் அதிக அளவிலான பயனர்களை பெற்றது. இதற்கு காரணம் அதன் அற்புதமான அணுகல், சிறந்த கிராபிக்ஸ் உள்ளிட்டவைகள் ஆகும்.
ஃப்ரீ பயர் விளையாட்டு தடை
இந்த நிலையில் ஃப்ரீ பயர் விளையாட்டுகளை தடை செய்ய இந்தியா பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இந்த விளையாட்டுகள் இளைஞர்களின் வாழ்க்கையில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தி வருவதாகவும் இது உளவியல் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் எனவும் குறிப்பிடப்பட்டு தடை செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்த விவாதங்கள் சமீபத்தில் தீவிரமாக வளர்ந்து வருகிறது. இதுகுறித்து நீதிபதி ஒருவர் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார், அவர் கரேனா ஃப்ரீபயரை தடை செய்யும்படி கேட்டுக் கொண்டுள்ளார்.
பேட்டில் கிரவுண்ட் மொபைல் இந்தியா
சமீபத்தில் ஏடிஜி நரேஷ் குமார் லக்கா, இந்திய பிரதமருக்கு ஒரு கடிதம் எழுதினார். அந்த கடிதத்தில் பப்ஜி இந்தியா பேட்டில் கிரவுண்ட் மொபைல் இந்தியா விளையாட்டுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டார். சீன இணைப்பு காரணமாக பப்ஜி இந்தியாவில் தடை செய்யப்பட்டது. ஆனால் அதே விளையாட்டின் இந்திய பதிப்பு பேட்டில் கிரவுண்ட் மொபைல் இந்தியா என்ற பெயரில் வெளியானது. இந்த விளையாட்டு ஐபோன் பயனர்களுக்கு சில நாட்களுக்கு முன்பில் இருந்தே கிடைக்கத் தொடங்கியது.
குழந்தைகளின் வளர்ச்சி வெகுவாக பாதிக்கும்
விளையாட்டாளர்கள் தங்கள் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் சாதனங்களில் இருந்து இந்த விளையாட்டுகளை அணுக முடியும். விளையாட்டின் சமீபத்திய பதிப்பான ஓபி29, பல புதிய அம்சங்களை வெளியிட்டது. இதுகுறித்து ஏடிஜி நரேஷ் குமார் லக்கா , இரண்டு குழந்தைகளின் தந்தையாக, ஃப்ரீபயர் மற்றும் பேட்டில் கிரவுண்ட் மொபைல் இந்தியா ஆகிய இரண்டு விளையாட்டுகளையும் நாட்டில் தடை செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்வதாக குறிப்பிட்டார். பப்ஜி மொபைல் நிறுத்துவதற்கான அரசின் முடிவை அவர் பாராட்டி கூறினார். காரணம் இந்த விளையாட்டு குழந்தைகளின் வளர்ச்சி வெகுவாக பாதிக்கும் என குறிப்பிட்டார்.
இலவச பதிவிறக்கமாக கிடைக்கும் விளையாட்டுகள்
அதேபோல் ஏடிஜி நரேஷ் குமார் லக்கா, தற்போது இலவச பதிவிறக்கமாக கிடைக்கும் பேட்டில் கிரவுண்ட் மொபைல் இந்தியா மற்றும் கரீனா ஃப்ரீபயர் ஆகியவை இளைஞர்களை மோசமாக பாதிக்கும் என கூறினார். குழந்தைகள் இந்த விளையாட்டுகளை விளையாட அதிக நேரம் செலவிடுவதாகும், இது அவர்களின் சமூக நடத்தையை பாதிக்கும் எனவும் குறிப்பிட்டார்.
இணைய கேமிங்கிற்கு தடை
குழந்தைகளின் இணைய கேமிங்கிற்கு தடை விதிக்கும் சட்டத்தை அரசு நிறைவேற்ற வேண்டும் என நீதிபதி மேலும் குறிப்பிட்டார். இந்தியா மட்டுமின்றி வங்காளதேசம் மற்றும் நேபாளத்தில் இதுபோன்ற விளையாட்டுகளை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை அதிகரித்து வருகிறது.
குழந்தைகளை கட்டுப்படுத்த புதிய விதிமுறைகள்
மேலும் ஏடிஜி நரேஷ் குமார் லக்கா, வீடியோ கேம்களை அணுகுவதில் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளை கட்டுப்படுத்தும் புதிய விதிமுறைகளை சீனா நிறைவேற்றியதை சுட்டிக்காட்டினார். இந்த சட்டத்தில் குழந்தைகள் வாரத்திற்கு 90 நிமிடங்கள் வரை மட்டுமே வீடியோ கேம்களை விளையாட முடியும், இரவு 10 மணிக்கு மேல் குழந்தைகள் விளையாட்டை விளையாட முடியாது. விடுமுறை நாட்களில் இது 180 நிமிடங்கள் வரை நீட்டிக்கப்படும் என்பதை குறிப்பிட்டார். குழந்தைகள் தவறான வழியில் செல்லாமல் இருக்க இதே போன்ற நடவடிக்கைகளை இந்திய அரசு எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக