Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

புதன், 1 செப்டம்பர், 2021

கூகுள் பிக்சல் 5ஏ சாதனத்தில் இப்படி ஒரு பிரச்சனையா? சரி செய்யுமா கூகுள்?

 இப்போது கூகுள் பிக்சல் 5ஏ ஸ்மார்ட்போனின் அம்சங்களைப் பார்ப்

சமீபத்தில் அமெரிக்கா மற்றும் ஜப்பான் சந்தைகளில் கூகுள் பிகச்ல 5ஏ 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்து விற்பனைக்கு கொண்டு வந்தது கூகுள் நிறுவனம். பின்பு இந்த சாதனம் வீடியோக்களை பதிவு செய்யும் போது அதிகவெப்ப பிரச்சனைகளை சந்திப்பதாக தகவல் வெளிவந்தது.

குறிப்பாக 4கே வீடியோக்களை வினாடிக்கு 60 பிரேம்களை பதிவு செய்யும்போது கூகுள் பிக்சல் 5ஏ ஸ்மார்ட்போன் அதிகவெப்பமடைவதாக கூறப்பட்டது. அதன்பின்பு கூகுள் இந்த பிரச்சனைகளை ஒப்புக் கொண்டுள்ளதாகவும், அதை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல் வெளிவந்தது. கூகுள் நிறுவனம் இந்த பிரச்சனையை விரைவில் சரிசெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது இந்த பிக்சல் 5ஏ சாதனத்திற்கு புதிய அப்டேட் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இப்போது கூகுள் பிக்சல் 5ஏ ஸ்மார்ட்போனின் அம்சங்களைப் பார்ப்போம்.

கூகுள் பிக்சல் 5ஏ சாதனம் ஆனது 6.4-இன்ச் FHD+ டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவந்துள்ளது. பின்பு 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல். அதேபோல் இந்த சாதனம் 5ஜி ஆதரவு கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கூகுள் பிக்சல் 5ஏ ஸ்மார்ட்போனில் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளது. பின்பு இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம். மேலும் இந்த சாதனம் பெரிய டிஸ்பிளே கொண்டு வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு அருமையாக இருக்கும்.

இந்த கூகுள் பிக்சல் 5ஏ ஸ்மார்ட்போனின் பின்புறம் 12எம்பி மெயின் கேமரா + 16எம்பி அல்ட்ரா வைடு கேமரா என மொத்தம் இரண்டு கேமராக்கள் உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி செல்பீ கேமரா ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

கூகுள் பிக்சல் 5ஏ ஸ்மார்ட்போனில் தரமான குவால்காம் ஸ்னாப்டிராகன் 765ஜி சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளது. ஆனால் விரைவில்
ஆண்ட்ராய்டு 12 அப்டேட் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் கேமிங் உட்பட பல்வேறு வசதிகளுக்கு தகுந்தபடி இந்த சாதனம் உருவாக்கப்பட்டுள்ளது.

கூகுள் பிக்சல் 5ஏ ஸ்மார்ட்போனில் 4680 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை சென்சார், புளூடூத் 5.0, யுஎஸ்பி டைப்-சி 3.1 போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக