Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

புதன், 1 செப்டம்பர், 2021

எலக்ட்ரிக் பைக்காக மாற்றப்பட்ட Splendor!! இந்தியாவிலேயே முதல்முறையாக ஆர்டிஓ அனுமதியளித்தது

 எலக்ட்ரிக் பைக்காக மாற்றப்பட்ட Splendor!! இந்தியாவிலேயே முதல்முறையாக ஆர்டிஓ அனுமதியளித்தது

எலக்ட்ரிக் மாற்று தொகுப்பின் உதவியுடன் எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிளாக மாற்றப்பட்ட வழக்கமான ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்கிற்கு இந்தியாவிலேயே முதல்முறையாக ஆர்டிஓ அனுமதி அளித்துள்ளது. இந்த மாடிஃபை எலக்ட்ரிக் பைக்கை பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

எலக்ட்ரிக் வாகனங்கள் நம் இந்தியாவின் எதிர்கால போக்குவரத்து என்பது நம் அனைவருக்கும் நன்றாகவே தெரியும். இதனை வெளிக்காட்டும் விதத்தில் புதிய எலக்ட்ரிக் வாகனங்கள் அறிமுகமாகி வருவதை தொடர்ந்து பார்த்து கொண்டு தான் இருக்கின்றோம். அதிலும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களே தொடர்ச்சியாக புதியது புதியதாக அறிமுகமாகிய வண்ணம் உள்ளன.

அதேநேரம் எரிபொருள் வாகனங்களை மின்சார வாகனங்களாக மாற்றும் எலக்ட்ரிக் மாற்று தொகுப்புகளும் மறுபக்கம் வடிவமைக்கப்பட்டு வருகின்றன. இந்த வகையில் பிரபலமான மாருதி சுஸுகி டிசைர் மாடலுக்கு நார்த்வே மோட்டார்ஸ்போர்ட் என்ற கஸ்டமைஸ்ட் நிறுவனம் உருவாக்கிய எலக்ட்ரிக் மாற்று தொகுப்பை பற்றி சில வாரங்களுக்கு முன்பு பார்த்திருந்தோம்.

இதற்கு மற்றொரு உதாரணமாகவே, இந்த எலக்ட்ரிக் மாற்று தொகுப்பை பெற்ற ஸ்பிளெண்டர் மோட்டார்சைக்கிள் விளங்குகிறது. இவ்வாறு அங்கீகரிக்கப்பட்ட தயாரிப்பு நிறுவனம் அல்லாமல் தனிப்பட்ட ஒருவரினாலோ அல்லது ஒரு குழுவினாலோ எலக்ட்ரிக் வாகனமாக மாற்றப்பட்ட வழக்கமான எரிபொருள் வாகனத்திற்கு ஆர்டிஓ எனப்படும் வட்டார போக்குவரத்து அதிகாரி அனுமதியளிப்பது இந்தியாவிலேயே இதுவே முதல்முறையாகும்.

இதனால் ஆர்டிஓ-வால் அங்கீகரிக்கப்பட்ட இந்த எலக்ட்ரிக் மாற்று கருவி தொகுப்பை தங்களது ஸ்பிளெண்டர் மோட்டார்சைக்கிளில் எவர் ஒருவரும் பொருத்தி கொள்ளலாம். இவ்வாறு எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிளாக மாற்றும் தொகுப்பை உங்களது பைக்கில் பொருத்துவதற்கு முன்பு இவ்வாறான எலக்ட்ரிக் மாற்று தொகுப்பினால் என்னென்ன பிரச்சனைகள் உள்ளன என்பதையும் தெரிந்துகொள்ளுங்கள்.

அதாவது, இத்தகைய தொகுப்பில் உள்ள பாகங்கள் ஏதேனும் பழுதாக நேர்ந்தால், அவற்றை மாற்றுவதோ அல்லது பழுது பார்ப்பதோ சற்று செலவு மிகுந்த விஷயமாகும். இருப்பினும் இந்த குறிப்பிட்ட ஸ்பிளெண்டர்-எலக்ட்ரிக் பைக்கிற்கு ஆர்டிஓ அனுமதி அளித்துள்ளதால், அவ்வாறு சேதமாகினால் அதற்கான செலவை காப்பீட்டு நிறுவனம் வழங்கும்.

இந்த பழமையான ஹீரோ ஹோண்டா ஸ்பிளெண்டர் பைக்கில் 2 கிலோவாட்ஸ் திறன் கொண்ட எலக்ட்ரிக் மோட்டார் பைக்கின் பின்சக்கர பகுதியில் பொருத்தப்பட்டுள்ளது. பேட்டரி மற்றும் கண்ட்ரோலர் உள்ளிட்டவை பைக்கில் என்ஜின் வழங்கப்படும் இடத்தில் பொருத்தப்பட்டுள்ளன.

MCB மற்றும் சில மாற்றிகள் பைக்கின் பக்கவாட்டு பேனல்களுள் மறைப்பாக வழங்கப்பட்டுள்ளன. ப்ரேக்கிங் பணியை கவனிக்க ட்ரம் ப்ரேக்குகள் உள்ளன. இந்த பைக்கின் பின்பக்கத்தில் பொருத்தப்பட்டுள்ள ப்ரேக் தட்டு ஆனது பஜாஜ் பல்சரில் இருந்து பெறப்பட்டுள்ளது. மற்றப்படி பைக்கின் ஸ்விட்ச் கியரில் எந்த மாற்றமும் இல்லை.

ARAI-ஆல் இந்த எலக்ட்ரிக் மாற்று தொகுப்பிற்கு சான்றளிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த ஸ்பிளெண்டர் பைக்கிற்கு இரு நிலைகளில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஒன்று, 2 வருடங்களுக்கு முன்பு இருந்தே உருவாக்க துவங்கப்பட்ட இதன் எலக்ட்ரிக் மாற்று பாகங்கள். மற்றொன்று, ஒட்டு மொத்த மாடலுக்கான அனுமதியாகும்.

92 சதவீத திறனை கொண்ட இதன் எலக்ட்ரிக் மோட்டார் நிலையாக 63 என்எம் டார்க் திறனையும், அதிகப்பட்சமாக 127 என்எம் வரையிலான ஆற்றலையும் வெளிப்படுத்தக்கூடியது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த எலக்ட்ரிக் பைக்கில் 100 கிலோவில் இருந்து 300 கிலோ வரையிலான எடையினை எடுத்து செல்லலாம்.

எலக்ட்ரிக் பைக்காக மாற்றப்பட்ட Splendor!! இந்தியாவிலேயே முதல்முறையாக ஆர்டிஓ அனுமதியளித்தது

இருவர் உடன் அதிகப்பட்சமாக மணிக்கு 70கிமீ வேகத்தில் இயங்கக்கூடிய இந்த எலக்ரிக் மாற்று தொகுப்பை பெற்ற ஸ்பிளெண்டர் பைக்கில் முழு சார்ஜில் அதிகப்பட்சமாக 151கிமீ வரையில் இயங்க முடியும் என ARAI சான்றளித்துள்ளது. வழக்கமான ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்கின் எடை 122 கிலோ ஆகும்.

ஆனால் என்ஜின் நீக்கப்பட்டதால் இந்த குறிப்பிட்ட ஸ்பிளெண்டர் பைக்கின் எடை 102 கிலோ ஆக குறைந்துள்ளது. இந்த எடை குறைப்பு நிச்சயம் பைக்கின் ஹேண்ட்லிங்கிலும், ரேஞ்ச்சிலும் மிக முக்கிய பங்காற்றும். இந்த பைக்கில் ரீஜெனரேட்டிவ் கண்ட்ரோலர் பயன்படுத்தப்பட்டுள்ளதினால், ரைடர் எப்போது ப்ரேக் கொடுக்கிறாரோ அப்போதெல்லாம் பேட்டரியின் ஆற்றல் வீணடிக்கப்படாமல், மறுபடியும் பேட்டரிக்கு அனுப்பப்படும்.

இந்த மாற்றத்தால் மோட்டார்சைக்கிளின் வாகன பதிவெண்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. வெள்ளை நிற நம்பர் ப்ளேட் தான் பச்சை நிறத்தில் வழங்கப்பட உள்ளது. இந்த எலக்ட்ரிக் மாற்று தொகுப்பை பைக்கின் உரிமையாளர் ரூ.35,000ல் வாங்கியதாகும், ஆனால் உண்மையில் இதன் மதிப்பு ரூ.50,000-ஐ கடந்து செல்லும் எனவும் தகவல்கள் கூறுகின்றன.

,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக