
ஐபோனுக்கு என்றே தனி வாடிக்கையாளர்கள் பட்டாளமே இருக்கிறது. உலகம் முழுவதும் ஐபோனுக்கு என தனி வரவேற்பு இருக்கிறது. காரணம் ஐபோனில் இருக்கும் தனித்துவ அம்சமே ஆகும். அதன்படி தற்போது 5ஜி இணைய வேகத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும். சமீபத்தில் வெளியான ஐபோன் 12 சாதனமும் 5ஜி இணைப்பு ஆதரவோடு வந்தது.
5ஜி ஆதரவோடு வரும் சாதனங்கள்
ஐபோன் மட்டுமின்றி பிற நிறுவனங்கள் அறிமுகப்படுத்தும் பெரும்பாலான சாதனங்களும் 5ஜி ஆதரவோடு வருகிறது. ஆனால் வரவிருக்கும் ஐபோன் புதுய மாடல் மேம்பட்ட பிரத்யேக அம்சத்தோடு வரும் என தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வருகிறது. இதுகுறித்து பிரபல ஆப்பிள் ஆய்வாளர் மிங்-சி குவோ சில தகவல்களை வெளியிட்டுள்ளார். வரவிருக்கும் ஐபோன் சாதனம் செயற்கைக்கோள் இணைப்பை ஆதரிக்கும் எனவும் பயனர்கள் செயற்கைகோள் நெட்வொர்க்கை பயன்படுத்தி அழைப்புகளை மேற்கொள்ளலாம் என குறிப்பிட்டார்.
செயற்கைக்கோள் இணைப்பு ஆதரவு
வரவிருக்கும் ஐபோன் 13 சாதனம் ஒவ்வொரு ஸ்மார்ட்போனில் இருந்தும் வேறுபட்ட அம்சத்தை கொண்டிருக்கலாம். செயற்கைக்கோள் இணைப்பை ஆதரிக்கும் எனவும் பயனர்கள் செயற்கைகோள் நெட்வொர்க்கை பயன்படுத்தி அழைப்புகளை மேற்கொள்ள அனுமதிக்கும் எனவும் பிரபல ஆப்பிள் ஆய்வாளர் மிங்-சி குவா தெரிவித்துள்ளார்.
ஆப்பிள் ஆய்வாளர் மிங் சி குவோ
இதுகுறித்து பிரபல ஆப்பிள் ஆய்வாளர் மிங் சி குவோ தெரிவித்த கருத்துகளை பார்க்கலாம், குவால்காம் எக்ஸ் 60 மோடமின் தனிப்பயனாக்கப்பட்ட பதிப்பை பயன்படுத்தி, ஐபோன் 13 சாதனமானது குறைந்த பூமி சுற்றுப்பாதை (லோ எர்த் ஆர்பிட்) (எல்இஓ) செயற்கைக்கோள்களுடன் நேரடியாக இணைக்க முடியும் என கூறினார். பல இடங்களில் எல்இஓ செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்த தயாராகி வரும் நிலையில் ஆப்பிள் முன்கூட்டியே சரியாகி வருவதாக தெரிகிறது.
நெட்வொர்க்கிற்கு வெளியே இருந்தாலும் தொடர்பு கொள்ளலாம்
பாரதி ஏர்டெல் ஆதரவுடன் இருக்கும் ஒன்வெப் நிறுவனமும் எதிர்காலத்தில் இதேபோன்ற சேவையை வழங்க திட்டமிட்டுள்ளது. எல்இஓ செயற்கைக்கோளானது எதிர்காலத்தில் தொலைதூர பகுதிகளுக்கு இணைப்பை வழங்குவதையே நோக்கமாக கொண்டுள்ளது. அதாவது நெட்வொர்க் இல்லாத சமயத்திலும் இந்த அம்சத்தின் மூலம் குரலழைப்புகள் மேற்கொள்ளலாம். எஸ்எம்எஸ்களும் அனுப்ப முடியும். இந்த அம்சம் இயக்கப்படும் பட்சத்தில் 4ஜி மற்றும் 5ஜி நெட்வொர்க்கிற்கு வெளியே இருந்தாலும் தொடர்பு மேற்கொள்ளலாம்.
ஸ்னாப்டிராகன் எக்ஸ் 65 மோடம்
ஸ்டார்லிங்க், ஒன்வெப், குளோபல் ஸ்டார் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களும் இந்த அம்சத்தை பயன்படுத்தி மலிவான இணையத்தை வழங்குவதாக உறுதி அளித்திருக்கிறது. மறுபுறம் குவால்காம் கடந்த பிப்ரவரி மாதம் புதிய ஸ்னாப்டிராகன் எக்ஸ் 65 மோடமில் குளோபல் ஸ்டாரின் என்53 பேண்டுகள் ஆதரவை கொண்டிருக்கும் என கூறுகிறது.
அடுத்தடுத்து வளரும் எல்இஐ தொழில்நுட்பம்
குவால்காம் எக்ஸ்60 பேஸ்பேண்ட் மோடம் சிப் மூலமாக செயற்கைக்கோள் தொடர்பு அம்சம் என்பது சாத்தியமானவையே ஆகும் என கூறப்படுகிறது. இது ஐபோன் 13 சாதனத்தில் மட்டுமின்றி அதன் ஏஆர் ஹெட்செட், ஆப்பிள் கார் மற்றும் பிற இன்டெர்நெட் தயாரிப்புகளிலும் எல்இஓ தொழில்நுட்பத்தை பயன்படுத்த வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது.
எல்இஓ செயற்கைக்கோள்
எல்இஓ அம்சமானது மோட் அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ் தொடர்புகளை ஏற்படுத்திக் கொடுக்கும். 2020 ஆம் ஆண்டில் உலகளாவிய எல்இஓ செயற்கைக்கோள் சந்தை அளவு மதிப்பானது 3118.4 மில்லின் டாலராக மதிப்பிடப்பட்டது. ஆனால் இதே 2026 ஆம் ஆண்டு இறுதியில் கிட்டத்தட்ட மூன்று அதிகரிக்கும் எனவும் அது 11,320 மில்லியன் டாலராக இருக்கும் எனவும் கூறப்படுகிறது.
வளர்ந்து வரும் ஐபோன் பயன்பாடு
ஐபோன்கள் என்பது கணிசமான பயன்பாடாக இருந்த நிலையில் தற்போது ஸ்மார்ட்போன்கள் பயன்பாடு போன்றே வளர்ந்து வருகிறது. தற்போது செயற்கைக்கோள் இணைப்பை ஆதரிப்பதன் மூலம் நிறுவனம் தனது தனித்துவத்தை தொடர்ந்து மேலோக்கி புகுத்தி வருகிறது. செயற்கைக்கோள் அம்சம் என்பது ஒவ்வொரு நாட்டிலும் கிடைக்கும் அம்சமாக இருக்கிறது. இருப்பினும் இந்த அம்சத்துக்கு ஆப்பிள் அரசாங்கத்திடம் இருந்து கூடுதல் அனுமதிகளை பெற வேண்டியிருக்கும். இது ஒவ்வொரு நாட்டிலும் வேறுபடும் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக