
வாட்ஸ்அப், சிக்னல் போன்ற பல்வேறு செயலிகளுக்கு போட்டியாக பல்வேறு புதிய அம்சங்கள் டெலிகிராம் செயலியில் வெளிவந்த வண்ணம் உள்ளன. அதேசமயம் இந்த டெலிகிராம் செயலியை அதிக மக்கள பயன்படுத்துகின்றனர் என்றுதான் கூறவேண்டும்.
இந்நிலையில் டெலிகிராம் செயலி ஆனது 1 பில்லியன் டவுன்லோட்களை கடந்துள்ளதாக சென்சார் டவர் அறிக்கைவெளியாகியுள்ளது. சில மாதங்களுக்கு முன்பு வாட்ஸ்அப் நிறுவனத்தின் தனியுரிமைக் கொள்கை அறிவிப்புக்கு மக்களிடம் கடும் எதிர்ப்பு கிளம்பியது, எனவே பல்வேறு மக்கள் சிக்னல், டெலிகிராம் போன்ற மாற்று செயலிகளை பயன்படுத்த துவங்கிவிட்டனர்.
அதிலும் இந்தியாவில் டெலிகிராம் செயலியை மக்கள் அதிகம் பயன்டுத்த துவங்கிவிட்டனர் என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக வாட்ஸ்அப், சிக்னல் போன்ற செயலிகளுக்கு போட்டியாக பல்வேறு புதிய அம்சங்களை கொண்டுவந்தது இந்த டெலிகிராம் செயலி. அதாவது க்ரூப் வீடியோ கால்ஸ்,ஸ்க்ரீன் ஷேரிங் வித் சவுண்ட் மற்றும் புதுப்பிக்கப்பட்ட வாய்ஸ் சாட் அனுபவம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கொண்டுவந்தது டெலிகிராம் செயலி.
சென்சார் டவர் வெளியிட்ட அறிக்கையின்படி, டெலிகிராமின் மிகப்பெரிய இணையச் சந்தையாக இந்தியா உருவெடுத்துள்ளது என்றும், சுமார் 22 சதவிகிதம் இந்திய மக்களால் இது நிகழ்த்தப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது. இந்தியாவை தொடர்ந்து ரஷ்யா,இந்தோனேசியா போன்ற நாடுகளில் இந்த செயலியை அதிக மக்கள் பயன்படுத்துகின்றனர்.
குறப்பாக இந்த டெலிகிராம் செயலி 2021-ம் ஆண்டின் முதல் பாதியில் 214.7 மில்லியன் நிறுவல்களை எட்டியது எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டில் அதிக மக்கள் இதை பயன்படுத்த துவங்கிவிட்டனர்.
அதேபோல் வாட்ஸ்அப் செயலியில் இருக்கும் ஒரு சில அமசங்கள் இந்த டெலிகிராம் செயலியிலும் வெளிவந்துள்ளது. குறிப்பாக சிறந்த பாதுகாப்பு வசதி இந்த டெலிகிராம் செயலியில் இருப்பதால்தற்போது அதிக மக்கள் இதை பயன்படுத்துகின்றனர்.
குறிப்பாக டெலிகிராம் செயலியை அதிக மக்கள் பதிவிறக்கம் செய்து பயன்படுத்துவதற்கான காரணம் வாட்ஸ்அப்பின் தனியுரிமை கொள்கைகள் தான். வாட்ஸ்அப் மட்டும் தனியுரிமை கொள்கையை அறிவிக்கவில்லை என்றால் இது சாத்தியமே கிடையாது. அதேபோல் வாட்ஸ்அப் நிறுவனமும் தற்போது பல்வேறு செயலிகளுக்கு போட்டியாக புதிய புதிய அம்சங்களை கொண்டுவந்த வண்ணம் உள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக